cinema

img

நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்!

நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு நேற்று(வியாழக்கிழமை) கொலை மிரட்டல் வந்துள்ளது. காவல் துறை எண்ணுக்கு அழைத்து அடையாளம் தெரியாத நபர், ஷாருக் கானை கொல்லவிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொள்கின்றனர். கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.