மும்பை:
“நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற வேண்டும்!” என பாஜக ஆதரவு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது ‘கூ’ (Koo) சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக்குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார் கள்? நமது குழந்தைக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா, என்ன?இந்தியா என்பது அடிமைப் பெயர். இதை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான ‘பாரதம்’ என்பதையே சூட்ட வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற் கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் மட்டும் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்) என்றபெயர்கள் இணைந்ததே பாரதம். நாம்அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரிகம் மிக்கவர்களாகவும் இருந் தோம். எனவே நாட்டின் பெயரை பழைய பெயரான ‘பாரத்’ என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.