business

img

அலகாபாத்-இந்தியன் வங்கிகள் இணைப்புப் பணி முடிந்தது....

புதுதில்லி:
இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைக்கும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் அனைத்துக் கிளைகளிலும் முடிந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளாக இணைக்க மத்தியஅமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இதன்படி,  அலகாபாத் வங்கி,இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. ஆனாலும், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியின் தொழில்நுட்பங்கள் மட்டும்கொரோனா காரணமாக இணைக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை அலகாபாத், இந்தியன் வங்கி தொழில்நுட்ப பணிகள்அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டன. அலகாபாத் பொதுத் துறை வங்கி முழுமையாக இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்தியன்வங்கி மேலாண் இயக்குநர்பத்மஜா சந்துரு தெரிவிக்கையில்,  அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைக்கும் தொழி்ல்நுட்பப் பணிகள் கடந்த 13, 14, 15 ஆகியதேதிகளில் அனைத்துக் கிளைகளிலும் நடந்து முடிந்துள்ளன. அனைத்துக் கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாராகிவிட்டன. 

இரு வங்கிகளிலும் கணக்குவைத்துள்ள வாடிக்கை யாளர்களின் வங்கிக்கணக்கு எண் எந்தவிதத்திலும் மாறாது.இணையதளத்தில் வங்கிக் கணக்கை இயக்கும் போது, பாஸ்வேர்ட், லாக்கின் போன்றவையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம். அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இனி, இன்டோஅசிஸ் என்ற இந்தியன்வங்கி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.