business

img

எல்ஐசி பங்குகளை வாங்க 18 நிறுவனங்கள் போட்டி? ஏலத்தில் பங்கேற்க முட்டிமோதும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள்....

புதுதில்லி:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமாக, எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Life Insurance Corporation Of India - LIC) விளங்கி வருகிறது.

13 லட்சம் பேருக்கு நேரடியாகவும், கோடிக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்துக் கொண்டிருக்கும் எல்ஐசி,சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துமதிப்பு கொண்ட ஆலமரமாக விழுதுவிட்டு நிற்கிறது.இந்நிலையில், இந்த ஆலமரத்தை வெட்டிச்சாய்க்க தொடர்ந்துமுயற்சி மேற்கொண்டு வந்த மோடி அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்றியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், 51 சதவிகித பங்குகள், கட்டாயமாக ஒன்றிய அரசு வசமே இருக்க வேண்டும்என்ற விதியை ரத்து செய்து, எல்ஐசி நிறுவனத்தை முழுமையாகவே தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.முன்னதாக, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த, நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசி நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு உள்ள 100 சதவிகித பங்குகளில் ஒரு பகுதி, ஆரம்பப் பொதுச் சலுகை (Initial Public Offering - IPO) மூலம்தனியாருக்கு விற்கப்படும் என்று கூறியிருந்தார். அதற்கான பணிகளையும்அப்போதே அவர் துவக்கினார். ஆகஸ்டு 2-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வேகவேகமாக நிறைவேற்றப் பட்ட பொதுக் காப்பீட்டு சட்டத் திருத்தமசோதா 100 சதவிகித பங்குகளையும் விற்பதற்கான தடையை நீக்குவது மட்டுமே ஆகும்.

இந்நிலையில்தான், எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்பப் பொது சலுகைகளை (Initial Public Offering - IPO)பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்கசுமார் 18 தனியார் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் போட்டியில்இறங்கியிருப்பது தெரியவந்துள் ளது.கோட்டாக் மஹிந்திரா கேபிட் டல், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐசெக்யூரிட்டிஸ், ஜேஎம் பைனான்சியல், டிஏஎம் கேப்பிடல், எடெல்விஸ்,எச்டிஎப்சி வங்கி, யெல் செக்யூரிட்டிஸ், எஸ்பிஐ கேப்பிடல், ஐஐஎப்எல் ஆகிய உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமன்றி, சிட்டி, பாங்க் ஆப் அமெரிக்கா, எச்எஸ்பிசி, கோல்டுமேன் சாச்சிஸ், ஜேபி மோர்கன், பிஎன்பி பாரிபாஸ், நோமுரா, சிஎல்எஸ்ஏ ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் விண்ணப்பங்களை அளித்துள்ளதாக நிதியமைச் சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐபிஓ ஏலத்திற்கான விண்ணப் பங்களை அளிப்பதற்கு ஆகஸ்ட் 13 கடைசிநாள் என்ற நிலையில், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் வங்கிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும்என்று கூறப்படுகிறது.

ஆரம்பப் பொதுச் சலுகைகளுக்கு (IPO) 10 வங்கிகள் வரைதேர்வு செய்யப்படும் என்று முதலீடுமற்றும் பொதுச் சொத்து மேலாண் மைத் துறை ((department of investment and public asset management -DIPAM) முன்பு தெரிவித்திருந்தது. எனவே, ரூ. 5,000 கோடிக்கு மேலான ஐபிஓ-க்களைக்கையாண்ட கடந்த கால அனுபவம்,ஆயுள் காப்பீட்டில் நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் உத்தி, உலகளாவிய விநியோகத் திறன்கள் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான நிறுவனங்கள் தேர்வு செய் யப்படும் என்று கூறப்படுகிறது.“பெறப்படவுள்ள முதலீட்டு அளவு குறித்த உறுதியான குறிப்பு தெரியவில்லை என்றாலும், எல்ஐசியின் 10 சதவிகித பங்குகள் குறைந்தபட்சம் ரூ. 80 ஆயிரம் கோடி முதல்ரூ. 1 லட்சம் கோடியாக மதிப்பிடப்படும். ஐபிஓ என்பது அரசாங்கத்தின் பங்கு விற்பனை மற்றும் எல்ஐசி-க்குபுதிய நிதி திரட்டுதல் ஆகியவற்றின் கலவையாக இருக்கும்” என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்ஐசி மட்டுமன்றி, இதே காலகட்டத்தில் ‘ஏர் இந்தியா’ மற்றும் நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருக்கும் ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட்’, ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, பவன் ஹன்ஸ், பிஇஎம்எல் மற்றும் நீலோச்சல் இஸ்பத் நிகாம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் 2022 மார்ச்மாதத்திற்குள் தனியார்மயமாக்கப் படும் என்று முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை (department of investment and public asset management -DIPAM) செயலாளர் துகின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.