business

img

காப்பீடு பிரீமியம் கட்டணங்கள் 5% வரை உயர்த்த திட்டம்?

ஆயுள், மருத்துவக் காப்பீடு பிரீமியம் கட்டணத்தை உயர்த்த காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தனிநபர் ஆயுள் மற்றும்  மருத்துவ காப்பீடுகள் மீதான ஜி.எஸ்.டி-யில் இருந்து, செப்டம்பர் 22, 2025 முதல் விலக்கு அளிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ளது. தற்போது மருத்துவ காப்பீடுகளுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, ஜிஎஸ்டி மூலம் நிறுவனங்களுக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரிக் கடன் (ITC) வருவாய் இழப்பை ஈடுகட்ட, பிரீமியம் கட்டணத்தை 5% வரை உயர்த்தலாம் என கோடக் நிறுவன ஆய்வில் கணிந்துள்ளது.  இந்த நிலையில், பிரீமியம் கட்டணத்தை உயர்த்த காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.