தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தைக் கடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒருகிராம் தங்கம் ரூ.10,005க்கும், சவரனுக்கு ரூ.1,020 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.80,040க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.138க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.