அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் 7 பேரின் கட்சிப் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.