tamilnadu

img

பெண்களுக்கான சிறப்பு  நலவாழ்வு மையம் திறப்பு

பெண்களுக்கான சிறப்பு  நலவாழ்வு மையம் திறப்பு

சென்னை, செப்,5- ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும் வழங்குவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளது.  இம்மையத்தை, புகழ்பெற்ற திரைக்கலைஞர் ஷாலினி அஜித் குமார் முன்னணி மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.  மகப்பேரியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவம், மார்பக ஆரோக்கியம், சிறுநீரியல், மற்றும் மூலம், பவுத்திரம், ஆசனவாய் வெடிப்பு  போன்ற இடுப்புக்கூடு மற்றும் ஆசனவாய் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற பெண் மருத்துவர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு இங்கு சேவையாற்றுகிறது.  மேலும், வளரிளம் பருவத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள், பிசிஓஎஸ் (PCOS), ஃபைப்ராய்டு கட்டிகள், அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்திற்கான பராமரிப்பு, சிறுநீர் அடக்க இயலாமைக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கீழ் இம்மையத்தில் வழங்கப்படும். இதன்மூலம் மகளிருக்கு விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கனிவான சிகிச்சை கிடைப்பது இம்மையத்தில் உறுதி செய்யப்படும் என்று  மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர் டி.எஸ்.ஸபீஹா கூறினார்.