இந்தியன் வங்கியின் வளைத்தளம் பேங்க் இன் டொமைனுக்கு மாற்றம்
சென்னை, செப்.5- இந்தியன் வங்கி ‘.bank.in’ டொமைனைப் பாதுகாக்க தனது நிறுவன வலைத்தளத்தை ‘.bank.in’ டொமைனுக்கு (https://indianbank.bank.in) மாற்றியுள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படியும், வங்கி தொழில்நுட்பத்தில் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IDRBT) வழிகாட்டுதலின் கீழும் வெற்றிகரமாக மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கிக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ‘.bank.in’ டொமைன் வங்கிகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது, மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கும், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், டிஜிட்டல் வங்கியில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், உண்மையான வங்கி வலைத்தளங்களை எளிதாக அடையாளம் காண வாடிக்கையாளர்கள் உதவுவதற்கும் வலுவான பாதுகாப்புகளை இந்த டொமைன் வழங்குவதாக வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை, செப். 4– வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறைஅதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடபழனி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. தியாகராயநகரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கெமிக்கல் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.