அரசியல் உறுதியற்ற ஒன்றிய பாஜக அரசு கொள்முதலில் எஸ்.சி.-எஸ்.டி., பெண் தொழில் முனைவோர் புறக்கணிப்பு
சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு
புதுதில்லி, ஆக. 9 - ஒன்றிய அரசின் கொள்முதல் கொள்கை அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும், பட்டி யல் வகுப்பினர், பழங்குடியினர் தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் தொழில் முனைவோரிடம் மேற்கொள்ளப்படும் கொள் முதலானது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று சு. வெங்கடே சன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத்தில் அரசுத் துறைகள்/அரசு நிறுவனங்களின் கொள்முதல் பற்றிய கேள்விகளை (எண் 3078/07.08.2025) நான் எழுப்பி இருந்தேன். அரசு கொள்முதலில் 4 சத விகிதம் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர் நிறுவனங்களிடம் இருந்தும், 3 சதவிகிதம் பெண் கள் தலைமை தாங்கும் நிறுவனங்க ளிடம் இருந்தும் செய்யப்பட வேண்டுமென்று பொதுத்துறை நிறு வனத் துறையின் வழிகாட்டல்கள் உள்ளன. இதற்கு குறு, சிறு- நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்த லாஜே அளித்த பதில் அதிர்ச்சியை தருகிறது. நெருங்காத இலக்கு 2023 - 24 இல் செய்யப்பட்டுள்ள மொத்த அரசு கொள்முதல் ரூ 1,70,985 கோடிகள். இதில் எஸ்.சி.-எஸ்.டி. தொழில் முனைவோர் இடமிருந்து செய்யப்பட்டுள்ள கொள்முதல் ரூ. 1,762 கோடிகள். அதாவது, இலக்கில் 1.03 சதவிகிதம் மட்டுமே!. பெண் தொழில் முனைவோ ரைக் கொண்ட நிறுவனங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ. 3,155 கோடிகள். இதுவும் 1.85 சதவிகிதம் மட்டுமே!. 2025 ஆகஸ்ட் 5 வரை செய்யப்பட்டுள்ள மொத்த அரசு கொள்முதல் ரூ. 2,69,860 கோடிகள். இதில், எஸ்.சி./எஸ்.டி. தொழில் முனைவோரிடடமிருந்து செய்யப் பட்டுள்ள கொள்முதல் ரூ. 3,585 கோடிகள்.1.33 சதவிகிதம் மட்டுமே!. பெண் தொழில் முனைவோ ரைக் கொண்ட நிறுவனங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ. 5,972 கோடிகள். இது 2.21 சத விகிதம் மட்டுமே ஆகும். சு. வெங்கடேசன் கருத்து “இலக்குகள் விளம்பரப் படுத்தப்பட்டால் போதாது. அவற்றை எட்டுவதற்கான அரசி யல் உறுதி அவசியம். இத்தகைய கொள்முதல் கொள்கை அறிவிக் கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் எஸ்.சி எஸ்.டி தொழில் முனை வோர் இடம் வாங்குவது 1.33 % எனில் இலக்கில் அரைக் கிணறு கூட தாண்டவில்லை என்று பொருள் ஆகிறது. பெண் தொழில் முனை வோரிடம் இருந்து செய்யப்படும் கொள்முதலும் இலக்கை எட்ட வில்லை. மேலும் இலக்கு என்பதே கூட குறைந்த பட்ச உறுதிப்பாடு மட்டுமே. அதையே அரசாங் கத்தால் செய்ய முடியவில்லை என்பது சமூக நீதியிலும், பாலின சமத்துவத்திலும் அரசின் உறுதி யற்ற தன்மையை அம்பலப்படுத்து வதாக உள்ளது” என சு.வெங்கடே சன் எம்பி கருத்து தெரிவித்துள் ளார்.