அமைதிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிப்பு
நியூயார்க்,அக்.22- அமைதி மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு களில் பெண்களின் பங்களிப்பு சமீப ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வருவதாக ஐ.நா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா பாது காப்பு கவுன்சிலில் தீர்மானம்-1325, உலக நாடுகளின் தலைவர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி உலக அள வில் அமைதி மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அனைவரும் அதி கரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த கவுன்சில் தீர்மானம் வீழ்ச்சியை சந்தித்து வரு வதாக ஐ.நா.வின் அறிக்கை எச்சரித்துள்ளது. சமீப ஆண்டுகளாக உலகளவில் ராணு வத்திற்காக செய்யப்படும் செலவுகள் அதி கரித்துள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தற்போது தான் உலகளவில் மிக அதி கமான போர்களும் நடைபெற்று வருகின்றன இந்தச் சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தை களில் இருந்து பெண்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் போர்களில் சுமார் 70 கோடிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் வாழ்கின்றனர். இது 1990 களுக்குப் பிறகு பதிவான அதிக பட்ச எண்ணிக்கையாகும். அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பொதுமக்கள் உயி ரிழப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலகளவில் தாய்மார்கள் இறப்பு விகி தத்தில் போர்களால் பாதிக்கப்பட்ட 29 நாடு களில் மட்டும் 58 சதவீதம் நிகழ்கிறது. போர்ச் சூழலில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகள் 87 சதவீதம் அதிகரித்துள்ளன. போர்களால் அதிகம் பாதிக்கப்படு பவர்களாக பெண்களும் சிறுமிகளுமே உள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வரு கின்றனர். 2024-இல் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் 7 சதவீதம் மட்டுமே பெண்கள். மத்தியஸ்தர்களில் 14 சதவீதம் மட்டுமே பெண்கள். மேலும் சுமார் 87 சதவீத பேச்சுவார்த்தைகளில் ஒரு பெண் தலைவர் கூட இல்லை. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பெண்கள் ஒதுக்கப்படும் நடைமுறையானது, போருக்குப் பிறகான நிர்வாகத்தில் பெண் களின் தலைமையையும் புறக்கணிக்க வழி வகுக்கிறது என ஐ.நா பெண்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க கட்டாய எண்ணிக்கையை நிர்ண யிக்க வேண்டும். நெருக்கடி காலங்களில் பெண்கள் சார்ந்து இயங்கும் அமைப்பு களுக்கு நன்கொடை உதவியில் குறைந்த பட்சம் 1 சதவீதம் வழங்க வேண்டும். உலக நாடுகள் ஆயுதங்களுக்கு பதிலாக அமைதி யை உருவாக்க பணத்தை செலவு செய்ய வேண்டும் என ஐ.நா அவை வலியுறுத்தி யுள்ளது.
