எங்கள் தெரு வழியாக உங்கள் பிள்ளையார் ஏன் வந்தார் கள்ளக்குறிச்சி கிராமங்களில் பட்டியலின மக்கள் மீது சாதியவாதிகள் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!
கள்ளக்குறிச்சி மாவட் டம், சின்னசேலம் வட்டம், கருந்தாலக் குறிச்சி கிராமத்தில் 29.08.2025 அன்று பட்டியலின குழந்தைகள் பிர தான வீதிகளின் வழியாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று ஏரியில் கரைத்துள்ள னர். அவர்கள் திரும்பும் வழி யில் வழிமறித்து எங்கள் தெரு வழியாக உங்கள் பிள்ளை யார் ஏன் வந்தார் என்று சிறு வர்களைத் தாக்கியுள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிபவர் மீது கொலை முயற்சிவழக்கு கீழ்குப்பம் காவல்துறை வெளிநாட்டில் பணி புரியும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பாதிக்கப்பட்ட வர்கள் மீதே பொய் வழக்கை பதிவு செய்துள்ளது. உளுந்தூர்பேட்டை வட்டம், பூமாம்பாக்கம் கிராமத் தில் 29.08.2025 அன்று பட்டி யலின மக்கள் பொதுப் பாதை வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்று ஏரியில் கரைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 31.08.2025 அன்று சாதி ஆதிக்க உணர்வு கொண்ட சிலர் விநாயகர் சிலையை, திட்டமிட்டு பட்டி யலின மக்களின் குடியிருப்பு வழியாக சாதிச் சங்க கொடி களோடும், சாதிச் சங்க பாடல்க ளுடன் வெறிக்கூச்சலுடன் வந்துள்ளனர். அதனை வேடிக்கை பார்த்த தலித் சிறுவன் ரட்சகனையும், சஞ்சய் காந்தி என்பவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இரண்டு வீடுகளும் தாக்கப் பட்டுள்ளது. தலையில் காயங்களுடன் சஞ்சய்காந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனையிலும், மற்றவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இல்லாதவர்கள் மீது வழக்கு இந்நிலையில் இங்கும் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் மீதே குறிப்பாக சம்பவ இடத்தில் இல்லாத பகத்சிங், இந்திரஜித், பிரபு உள்ளிட்ட 18 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே போல் கள்ளக் குறிச்சி மாவட்டம், தகரை, திருகாவூர், ரிஷிவந்தியம் ஆகிய மூன்று கிராமங்களி லும் விநாயகர் சதுர்த்தி ஊர் வலங்களின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் என்ற பெயரில் தலித் மக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் இரண்டு தினங்களில் 5 கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திய சாதிய ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை பட்டியலின மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு தலைவர்கள் ஆறுதல் இக்கிராமங்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணை தலைவர் ஜி.ஆனந் தன், மாவட்டச் செயலாளர் டி.எஸ்.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் உள்ளிட்ட தலை வர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அத்துடன் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் தலித் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதல்களையும், காவல்துறையின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை களையும் தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறை பொய் வழக்கு களை திரும்பப் பெறுவதோடு குற்றவாளிகள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாதி க்கப்பட்டவர்களுக்கு சட்டப் படியான நிவாரணங்களை வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு, பொது செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.