டிரம்ப்பின் வரி பயங்கரவாதம்; மோடி அரசின் சரணாகதி
நாடு முழுவதும் அம்பலப்படுத்துவோம்; மக்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடுவோம்
மக்கள் போராட்டங்களில் உறுதி
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை தொடர்ந்து நெருக்கடியில் தள்ளுகின்றன. விலைவாசி உயர்வு, தேக்கம் அடைந்துள்ள ஊதியங்கள் மற்றும் விரிவடையும் ஏற்றத்தாழ்வுகளால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா வரிகளை விதித்த பிறகு வேலையின்மை அதிகரித்திருக்கிறது. ஜூலை 9 பொது வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றியாக மாற்றியதற்காக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்தியக் குழு செவ்வணக்கம் செலுத்துகிறது. வேலைநிறுத்தத்தில் ஒற்றுமையுடன் நின்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவு மக்களையும் பாராட்டுகிறது. பொது வேலைநிறுத்தத்தின் வெற்றி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆதரித்திடும்.
தாராள வர்த்தக ஒப்பந்தங்கள்/இருதரப்பு
வர்த்தக ஒப்பந்தங்கள் ஒன்றிய அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து, தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன், மக்களுக்கு ஏற்படும் விளைவுகளை கவனமாக மதிப்பிட வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க அவசரப்படுவது பால் பண்ணை, விவசாயம், பாதுகாப்பு, மருந்துகள் மற்றும் நிதி போன்ற முக்கிய மான துறைகளில் தேசிய நலன்களை கைவிடுவதற்கு வழிவகுத்திடும்.
எரிச்சலூட்டும் கருத்துக்கள் தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
பார்வையாளர்கள் முன் மூன்று நாள் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மதுரா மற்றும் காசி சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியிருக்கிறார். ‘சகோதரத்துவத்திற்கான’ முன்நிபந்தனையாக முஸ்லிம்கள் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள மசூதிகளை ‘விட்டுக்கொடுக்க’ வேண்டும் என்று அவர் கோரி இருக்கிறார். இவ்வாறு சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிட முனைந்துள்ளார். பகவத்தின் கருத்துக்கள், இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஆர்எஸ்எஸ் புறக்கணிப்பதையும், நாட்டின் சட்டத்தை அவர்கள் மீறுவதையும் பிரதிபலிக்கின்றன. இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கும், மதச்சார்பற்ற அரசை அகற்றுவதற்கும் ஆர்எஸ்எஸ்-இன் உறுதியையும் உள்நோக்கத்தையும் இந்தக் கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.
மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு
ட்டமுன்வடிவு பாஜக கூட்டணி மாநில அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு சட்டமுன்வடிவு, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலைக் குறிக்கிறது. ‘தீவிர இடதுசாரி சக்திகளை’ எதிர்த்துப் போராடுவது என்ற சாக்கில், இந்த சட்டமுன்வடிவு அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக சித்தரிக்க முயல்கிறது. ‘தீவிர இடதுசாரி சக்திகள்’ மற்றும் இதே போன்ற அமைப்புகளின் வரையறைகள் வேண்டுமென்றே தெளிவற்றதாக விடப்பட்டிருக்கின்றன. இது அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்கான பரந்த வாய்ப்பை உருவாக்குகிறது. சட்டமுன்வடிவின் கடுமையான விதிகள் கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்பை மௌனமாக்கவும் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின்
மழைக்காலக் கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எந்த விவாதத்தையும் அரசாங்கம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த சட்டமுன்வடிவு மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை மீறும் விளையாட்டு சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல சட்டமுன்வடிவுகளை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், நாட்டின் முக்கியமான கனிம வளங்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுரண்ட அனுமதிக்கிறது, இது தேசிய நலன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடி நிலங்களும் தனியார் நிறுவன சுரண்டலுக்கு விடப்படுகின்றன, இவை எதிர்க்கப்பட வேண்டியவையாகும். கடுமையான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பது அரசாங்கத்தின் எதேச்சதிகாரத் தன்மையை பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல விஷயங்கள் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் முறையாக விவாதிக்கப்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரக் கவலைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை உறுதி செய்வதில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்க வேண்டும்.நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எந்த விவாதத்தையும் அரசாங்கம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த சட்டமுன்வடிவு மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை மீறும் விளையாட்டு சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல சட்டமுன்வடிவுகளை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், நாட்டின் முக்கியமான கனிம வளங்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுரண்ட அனுமதிக்கிறது, இது தேசிய நலன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடி நிலங்களும் தனியார் நிறுவன சுரண்டலுக்கு விடப்படுகின்றன, இவை எதிர்க்கப்பட வேண்டியவையாகும். கடுமையான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பது அரசாங்கத்தின் எதேச்சதிகாரத் தன்மையை பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல விஷயங்கள் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் முறையாக விவாதிக்கப்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரக் கவலைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை உறுதி செய்வதில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்க வேண்டும்.
ஜனநாயக விரோத சட்ட முன்வடிவுகள்
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்களை 30 நாட்கள் காவலில் வைத்திருந்த பிறகு பதவி நீக்கம் செய்ய அனுமதிக்கும் மூன்று சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கை இந்த சட்டமுன்வடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் நவீன-பாசிச போக்குகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய விதிகள் எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுவது உறுதி. இந்த நடவடிக்கை எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அவசியமான ஆய்வு மற்றும் சமநிலை என்ற கட்டமைப்பையே தாக்குகிறது.'
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, ஜனநாயக உரிமைகளைக் குறைக்க அரசமைப்புச்சட்ட நிறுவனங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. பீகாரில் தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விதி மீறல்களால் நிறைந்துள்ளது. இதன் விளைவாக ஏராளமான குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இப்போது இந்த முயற்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், இப்போது ஆர்எஸ்எஸ்/சங் பரிவார் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உடந்தையாகி இருக்கிறது. வாக்காளர் பதிவுக்கு ஆதார் அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதையும், தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் வாக்குரிமை பறிக்கப்படுவதையும் உறுதி செய்ய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவும், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது. குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைக் கட்டுப்படுத்தும் இத்தகைய முயற்சிகளை எதிர்ப்பதிலும், மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர பங்கு வகிக்கும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது போராட்டத்தை அது தொடர்ந்திடும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள்
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகக் கூறி, ஒரு வீண் முயற்சியாக, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை ஒன்றிய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பல்வேறு பெயர்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை அறிவித்துள்ளது. 2025 தேசிய தொலைத்தொடர்பு கொள்கை (National Telecom Policy, 2025) வரைவு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிவழங்கியுள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தத் திட்டங்கள் பாஜக தலைமையிலான அரசாங்கம் பொது வளங்களை தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கிறது; இந்துத்துவா வகுப்புவாத-கார்ப்பரேட் உறவை வலுப்படுத்துகிறது என்ற உண்மையை மீண்டும் நிறுவியிருக்கிறது.
ஜிஎஸ்டி விகித திருத்தம் அரசாங்கம் ஜிஎஸ்டி கவுன்சிலைக் கூட்டி
, சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதாகவும், ஜிஎஸ்டி அடுக்குகளை மறுசீரமைப்பதாகவும் அறிவித்தது. ஏழைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தக் குறைப்பின் பலன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செல்வதைவிட, நுகர்வோருக்குச் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும்.
டிரம்ப்பின் வரி பயங்கரவாதம் அமெரிக்கா
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதற்காக 25 சதவீதமும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் செய்வதற்காக அபராதம் 25 சதவீதமும் என்று 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விவசாயம், மீன்வளம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக அதன் ஜவுளித் தொழிலை கடுமையாக பாதிக்கும். நமது நாட்டிற்கு நிர்ப்பந்தம் கொடுக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் இந்தியாவில் உள்ளனர். பாஜக அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியக்கூடாது. அது நமது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும்.
தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்
தொழிலாளர்களை மட்டுமல்ல, சுற்றுச்சூழலை யும் பாதுகாக்கும் பல்வேறு ஒழுங்குமுறை அம்சங்களை பலவீனப்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை எளிதாக்குகிறது. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்குப் பிறகு, நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் உள்பட ஒழுங்குமுறை ஏற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இரண்டு உயர்மட்டக் குழுக்களை அமைப்பதாக நிதி ஆயோக் அறிவித்தது. இது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு கடுமையான அடியாகும்.
நேபாளத்தில் கொந்தளிப்பு நேபாளத்தை உலுக்கிய இளைய
தலைமுறை யினரின் மாபெரும் போராட்டங்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் கிட்டத்தட்ட 70 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பலியானவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. சமூக ஊடக தளங்களை தடை செய்வது என்ற அரசாங்கத்தின் முடிவு இப்போராட்டங்களின் உடனடி தூண்டுதலாக இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக மக்களிடையே ஆழமாக வேரூன்றி யிருந்த அதிருப்தி உணர்வும், நீண்டகால பிரச்சனை களைத் தீர்க்க அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்ததும், பரவலான ஊழல் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமையும் பொதுமக்களின் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி இருந்தன. வலதுசாரி சக்திகள், குறிப்பாக முடியாட்சிக்கு ஆதரவான சக்திகள், அரச வம்சத்தினர் மற்றும் இந்துத்துவா சக்திகளுடன் தொடர்புடைய குழுக்கள் இந்த அதிருப்தி யைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. முடியாட்சிக்கு எதிரான நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தின் மூலம் அடையப்பட்ட - அரசமைப்புச்சட்டத்தில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளைப் பாதுகாப்பதில் நேபாள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அசாமில் சட்டவிரோதம் அசாம் மாநில பாஜக
அரசு ஏராளமான மக்களை அவர்களின் உரிமையான நிலங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேற்றி வருகிறது. முதலமைச்சர் இந்த வெளியேற்றங்களை மதவெறித் தீயை விசிறிவிடும் நோக்கத்தோடு மேற்கொண்டு வருகிறார். இந்த வெளியேற்றங்களுக்குப் பின்னால் உள்ள மற்றொரு முக்கிய நோக்கம், இந்த நிலங்களுக்கு அடியில் வளமான கனிம வளங்கள் இருப்பதும், தனியார் நிறுவனங்கள் அவற்றைச் சுரண்ட அனுமதிக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுவதும் ஆகும். அரசாங்கம் உடனடியாக இந்த சட்டவிரோத வெளியேற்றங்களை நிறுத்த வேண்டும்.
வங்காளிகளை நாடு கடத்துதல் பாஜக ஆளும் பல மாநிலங்களில்
ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து வங்கமொழி பேசும் மக்கள், குறிப்பாக வங்காளி முஸ்லிம்கள் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆவணங்களை முறையாக சரிபார்க்காமலோ அல்லது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலோ வங்காளிகள் அடையாளம் காணப்பட்டு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். பலர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் உட்பட மக்கள் நிலம் மற்றும் கடல் வழியாக வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்குள் தள்ளப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் வங்காள குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல இடங்களில், வங்காளிகள் மீது குறிவைக்கப்படும் இந்தத் தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு தடுத்துள்ளது. இது மேலும் தொடர்ந்து நடைபெறும்.