articles

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!

புதுதில்லி, மார்ச் 14- மாதவிடாய் விடுப்பு உரிமை என்பது உழைக்கும் பெண்களின் உரிமையின்  ஒரு பகுதியே என்றும், பெண்களின் உயிரியல் யதார்த்தங்களை உச்சநீதி மன்றத் தீர்ப்பு உணரவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரும் மனுவை  தள்ளுபடி செய்யும் போது உச்சநீதி மன்றம் சில எதிர்மறையான மற்றும் பார பட்சமான கருத்துக்களை தெரிவித்துள் ளது. அத்தகைய சட்டம் இயற்றப் பட்டால் யாரும் பெண்களை வேலை க்கு அமர்த்த மாட்டார்கள் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தகைய விடுப்பு தொழில்துறையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றம் மேலும் கூறியிருப்பது மிகவும் விந்தை யாகும். இவ்வாறு நீதிமன்றம் கருத்து கூறி யிருப்பதன் மூலம், பெண்களின் உயிரி யல் யதார்த்தங்கள் குறித்து அவர்க ளின் பணியிடங்களில் கணக்கில் எடுத் துக்கொள்ளப்பட வேண்டியதில்லை என்ற ஆணாதிக்கக் கருத்தை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மாதவிடாய் விடுப்பை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்று முத்திரை குத்துவதன் மூலம், பெண் களின் சுகாதாரத் தேவைகள் நிறு வனங்களின் உற்பத்தித் திறனுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று அது மறைமுகமாகக் கூறியுள்ளது. மாதவிடாய் மற்றும் இந்த கால கட்டத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைப் புறக்கணிப்பது பிரச்ச னையை மறைத்து, பெண்களை துன்பப் பட வைக்கிறது. பெண்களின் ஆரோக்கி யம் மற்றும் நல்வாழ்வு அங்கீகரிக்கப் பட வேண்டுமென்றால், அவர்கள் கண் ணியத்துடன் வேலை செய்ய வேண்டு மென்றால், விடுப்பு விதிகளில் ஒருவ ரின் மாதவிடாய் சுழற்சியின் போது எடுக்கப்படும் விடுப்பும் அடங்கும். எனவே, மாதவிடாய் விடுப்பு என்பது உழைக்கும் பெண் எடுக்கும் உரிமையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)