articles

img

சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்க மறுத்த ஒன்றிய அரசு

சிறுபான்மையினர் ஆணையத்திற்கு  அரசியலமைப்பு அதிகாரம் வழங்க மறுத்த ஒன்றிய அரசு

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசி யலமைப்பு அதிகாரங்கள் வழங்கக் கருதுகிறதா என்ற கேள்விக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்து றை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்மறையான பதில் அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அனுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேசிய சிறுபான்மை யினர் ஆணையம் (NCM) 1992ல் சட்டரீதியான அமைப்பாக உரு வாக்கப்பட்டு போதுமான அதிகா ரங்களுடன் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஆணையத்திற்கு தற்போது சிறுபான்மையினர் வளர்ச்சியை மதிப்பீடு செய்தல், அரசியலமைப்பு மற்றும் சட்ட பாதுகாப்புகளை கண்காணித்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரைகள் வழங்குதல், குறிப்பிட்ட புகார் களை விசாரித்தல், பாகுபாடு தொடர் பான ஆய்வுகள் மேற்கொள்ளல், கல்வி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி நடத்து தல், ஒன்றிய அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பரந்த அதிகாரங்கள் உள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆணையத்திற்கு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதிலிருந்து நபர்களை வரவழைத்து சாட்சியம் பெறுதல், ஆவணங்கள் கோருதல், உறுதி மொழி அடிப்படையில் சாட்சியம் பெறுதல், பொதுப் பதிவுகளை கோருதல், சாட்சிகள் மற்றும் ஆவ ணங்கள் ஆய்வுக்கான அணுகு முறைகள் அமைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் கூறியுள்ளார். சச்சிதானந்தம் எம்.பி., விமர்சனம் “தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை அரசியலமைப்பு அமைப்பாக மாற்றுவது சிறு பான்மையினருக்கு பலமான பாது காப்பு வழங்கும். தற்போதுள்ள சட்டரீதியான ஆணையம் மட்டுமே இருப்பதால் அதன் செயல்திறன் குறைவாக உள்ளது.  அரசியலமைப்பு அதிகாரம் பெற்றால், ஆணையத்தின் பரிந்துரைகள் கட்டாயமாக நடை முறைப்படுத்த வேண்டியதாகும். தற்போது அதன் பரிந்துரைகளை அரசு புறக்கணிக்கலாம். எஸ்சி/எஸ்டி கமிஷன் போன்று அரசிய லமைப்பு அமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு சிறுபான்மையினர் நலனை புறக்கணிப்பதாகவும், அவர்களின் உரிமைகளை பாது காக்கும் பொறுப்பை தவிர்ப்பதாக வும் உள்ளது” என்று ஆர்.சச்சி தானந்தம் எம்.பி., விமர்சித்துள்ளார்.