articles

img

திமுக அணிக்கே மீண்டும் மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள்!

திமுக அணிக்கே மீண்டும் மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள்! முதலமைச்சர் நம்பிக்கை

முதலமைச்சர் நம்பிக்கை சென்னை, மார்ச் 5 - திமுகவுக்கு 10 ஆண்டுகள் தொட ர்ச்சியான ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று தாம் வைத்த கோரிக்கையை, தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி யுள்ளார். திருச்சி சிறுகனூர் திமுக மாநாட்டையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது கட்சியின ருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், “2019 மக்களவைத் தேர்தல் முதல் 2024 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 தேர்த லில் கூட்டணி உடையும் என எதிரிகள் கனவு கண்டார்கள்; ஆனால், புதிதாக மேலும் பல கட்சிகள் திமுக கூட்டணி யில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். “மதவெறி அரசி யலுக்குத் தமிழ்நாட்டில் இட மில்லை, மாநில உரிமைகளை ஒரு போதும் விட்டுக்கொடுக்கப் போவ தில்லை என்கிற கொள்கை உணர்வு மிக்க நம் தோழமைக் கட்சியினரு டன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜன நாயகத் தன்மையுடனும் ஆலோச னைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக் கும் இடமளித்து, உறுதியான வெற்றிக் கான கூட்டணியை உருவாக்கி யுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “2021 தேர்தலின் போது, ‘திமுகவிற்கு 10 ஆண்டுகள் தொட ர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டு வோம்’ என்று தாம் விடுத்த கோரிக்கையை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதனை தமிழக மக் கள் நிறைவேற்றுவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘சைகைக்கு விளக்கம் கூறிய முதல்வர்’

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும்போது, தாம் கையால் காட்டிய சைகை வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், ‘காங்கிரஸ் உடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும்போது, கையில் சைகையால் சொல்லிய காட்சி சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். அது திட்டமிட்டு செய்ததில்லை. அங்கு எதிரே இருந்த பத்திரிகை நண்பர்கள், ‘முடிந்து விட்டதா’, எனக் கேட்டனர். அதற்கு ‘முடிந்து விட்டது’ எனக் கூறினேன்; அவ்வளவுதான். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.