articles

img

தரவுச் சுரண்டல் எனும் புதிய சவால்! - இரா.சிந்தன்

தரவுச் சுரண்டல் எனும் புதிய சவால்!

ஐ.டி நிறுவனங்களில் அவ்வப் ்போது ஆயிரக்கணக்கில் வேலை நீக்கம் என்ற செய்தி வெளியாகி விவாதத்தை உருவாக்கும். சமீபத்தில் அதே போன்றதொரு செய்தி வந்திருக்கிறது. ‘டி.சி.எஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளனர்’ என்ற செய்தியே அது. ஆனால், இப்போது எழும் விவாதம் முற்றிலும் புதியது. ஏனென்றால் இப்போது வேலை இழக்கவுள்ளோரில் பெரும்பான்மையா னவர்கள் மேலாளர் நிலையில் உள்ள வர்களும், குழுத் தலைவர்களும் (டி.எல்) ஆவர். பொதுவாக இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுபவமும், ஆழ்ந்த கல்வியும் தேவைப்படும். மனி தர்களால்தான் அதற்கான முடிவுகளை மேற்கொள்ள முடியும். ஆனால், இப்போது அந்தத் திறன்களையும் இயந்திரங்கள் செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வேலை நீக்கங்கள் இதற்கு முன்பு நாம் பார்த்ததில் இருந்து பண்பு ரீதியில் வேறுபடுகின்றன.

தானியங்கிமயமாவது எப்படி?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ - AI) தொழில்நுட்பங்களின் வருகைக்குப் பின்னர், நுணுக்கமான அறிவுத்திறன் தேவைப்படும் வேலைகளையும் கூட இயந்திரங்களைக் கொண்டு தானியங்கி மயமாக்க முடிகிறது. இதனால் நல்ல வருமான வாய்ப்புப் பெற்ற ஒரு பகுதி யினர் வேலை இழக்கின்றனர். தொடக்க நிலை பணியாளர்களை நிர்வகிக்க, சிறு எண்ணிக்கையிலான நிர்வாகிகளே போதும்; அவர்கள், இயந்திரங்களின் துணையோடு தங்களுடைய வேலை யைச் செய்ய முடியும்; இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை, உறக்கம் தேவையில்லை என்பதால் ஒரு நபருக் கான செலவில் 3 நபர்களின் வேலை யைப் பெற்றுக்கொள்ள முடியும். டி.சி.எஸ் வேலை நீக்கத் திட்டமும் அப்படிப் பட்டதுதான். வேலை முன்னேற்றம் பற்றிய அறிக்கை தயாரிப்பது, தரவுகளைப் பயன்படுத்தி அட்டவணை உருவாக்கு வது, தொடக்க நிலை ஆய்வுகள் செய்து முடிவுகளைத் தொகுப்பது போன்ற பணி களை ஏ.ஐ மேற்கொள்ளும் என்பதால் அந்த பணி இடங்கள் வெட்டப்படு கின்றன. பிழை நீக்குதல், பரிசோதித்தல் வேலைகளும் பாதிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இந்த மாற்றங்கள் வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கவும், இயக்கவும், பராமரிக்கவும் மனிதர்கள் தேவை. அவை தாமாகவே இயங்க முடி யாது. அதற்கு உதவி செய்யவும், இயக் கவும் மனித சிந்தனையும், மூளை யும், நம்முடைய தரவுகளும் எப்போதும் அவசியம். அந்த கருவிகள் நம்முடைய வேலைகளைத் தரவுகளாக்கி, கணக்கீடுகளுக்கு உட்படுத்தி, நம் சிந்திக்கும் முறையைப் பிரதியெடுக்கின் றன. எனவேதான் அவற்றால் சில இயந்திரகதியான வேலைகளை வேக மாக முடிக்க முடிகிறது. எனவே, திறன் படைத்த 10 தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில், 8 பேரை மட்டும் வைத்துக்கொண்டு அந்த வேலையைச் சாதிக்க ஏ.ஐ நுட்பங்கள் பயன்படும் என்று அமெரிக்காவின் கார்ட்னர் ஆராய்ச்சி காட்டுகிறது.

9 கோடி வேலைகள்!

செயற்கை நுண்ணறிவு அறிமுகத்தி ற்குப் பிறகு வெளியான உலகப் பொரு ளாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை 2025, மொத்த உலக வேலை களில் 22%, செயற்கை நுண்ணறிவின் வருகையால் பாதிக்கப்படும் என்று கூறி யது. இந்த நுட்பங்களால் வரும் 5 ஆண்டுகளில் 9.2 கோடி வேலைகள் இழக்கப்படும், ஆனால் புதிதாக 17 கோடி வேலைகள் உருவாகும். ஒட்டு மொத்தத்தில் 8 கோடி புதிய வேலை கள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் இந்த நுட்பங்கள் உழைப்பாளருக்கான செலவைக் குறைத்து, நிறுவனத்தின் லாப விகிதத்தை உயர்த்தும் என்பதால் சுமார் 40 சதவீதம் முதலாளிகள் இவற் றைப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரி விக்கிறது. எனவே, இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடங்கியுள் ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங் கள் நம்முடைய வேலையை எளிமைப் படுத்தும் அறிவியல் முன்னேற்றங்களாக மட்டும் இல்லை. மாறாக, நம்முடைய வேலையைப் பறித்து, ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் அச்சுறுத்தல்களாக பயன்படுத்தப்படுகின்றன.

எதிர்ப்புக்குக்  காரணம் என்ன?

இந்தியாவில் பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) உள்ளது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதம் ஐ.டி பங்க ளிப்பு ஆகும். 56.7 லட்சம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், ஐ.டி உற்பத்தி பெரும்பாலும் ஏற்றுமதி சார்ந்தது. உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களோடு நேரடியாகப் பிணைந் துள்ளது. இப்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நம்முடைய நாட்டில் வேலை இழப்பை ஏற்படுத்தும். குறிப்பிடத்தக்க வாங்கும் சக்தியுள்ள பிரிவினர் வேலை யை இழப்பார்கள். அது அந்தக் குடும் பங்களைத் தடுமாறச் செய்யும். அரசு உரிய கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு முறைகளையும் ஏற்படுத்தாவிட்டால் இந்த வேலை நீக்கங்கள் பொருளா தாரத்தில் மீள முடியாத பாதிப்புகளை ஏற் படுத்தும். அதனால்தான், ஐ.டி தொழிலா ளர்கள் போராட்டக் களத்திற்கு தள்ளப் படுகிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்ட பின்னர், புதிய சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு நம்மைத் தகவமைத் துக்கொள்வது சரியா? அல்லது, போரா ட்டத்தின் மூலம் அந்த வளர்ச்சிக்கு எதி ராக நீச்சலடிப்பதா? என்ற கேள்வி பொதுவாக எழுகிறது.

ஏகபோகங்களும்,  எளிய மக்களும்!

இன்றைக்கு உலக நாடுகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான துறையாக செயற்கை நுண்ணறிவு அமைந்துள்ளது. இந்த துறையில் மிக முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியிலும், மென் பொருள் வளர்ச்சியிலும் அமெரிக்க நிறுவ னங்களே முன்னணி வகிக்கின்றன. சீனா,  தென்கொரியா போன்ற வளரும் நாடுகள் குறிப்பிடத்தக்க போராட்டத்தை நடத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை இயக்குவதற்கு 3 அம் சங்கள் மிகவும் அடிப்படையானவை: 1) அதிவேக செமிகண்டக்டர்கள் அல்லது பிராசசர்கள், 2) அவற்றைப் பயன்படு த்தித் தரவுகளைத் தேடித் தொகுக்கின்ற மென்பொருட்கள் 3) இந்த வேலைக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் தரவுக ளின் பிரம்மாண்டத் தொகுப்புகள்.  மனித மூளையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிட்டு இதை விளக்கினால்,  முதலாவது இயந்திர மூளை, இரண் டாவது அந்த மூளைக்குள் இயங்கும் மின்காந்த சமிக்ஞைகள், மூன்றாவது இந்த இரண்டையும் பயன்படுத்தத் தேவையான தகவல்களின் நினைவகம். இந்த மூன்று அம்சங்களில், முதல் இரண்டு அம்சங்களில் ஏகபோக பெரு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின் றன. அதே சமயத்தில், அந்த நுட்பங்க ளை இயக்குவதற்குத் தேவையான தர வுகளும், பயனர்களும் இந்தியா உள்ளிட்ட வளரும் பொருளாதாரங்களி லேயே உள்ளார்கள். டி.சி.எஸ் வேலை நீக்கத்தை ஒரு உதா ரணமாக எடுத்துக்கொள்ளலாம். அந்த நிறுவனத்தில் தற்போது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன் படுத்தத் தொடங்குகிறார்கள். அந்த மென் பொருள் அமெரிக்க நிறுவனத்தால் எழுதப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு அதிவேக கணினியில் இயங்குகிறது. அதனைப் பயன்படுத்தக்கூடிய நிறுவ னத்தின் ஒரு பணியாளர் கேட்கும் கணக்கீடுகளைச் செய்கிறது. அப்படியே அது மின்னஞ்சல்களைப் படித்துப் புரிந்து கொள்கிறது. வேலையில் ஏற்படும் முன் னேற்றத்தைத் தரவுகள் அடிப்படையில் விவரிக்கிறது. பணிகளைப் பிரித்துக் கொடுத்து வேலை தருகிறது. இப்படி யாக அது இடும் கட்டளைகள் சரியா என்று பரிசோதித்து, அந்த கட்டளைகளை வேலையாளிடம் கொடுத்து வேலையை முடிக்க மட்டும் அங்கே மேலாளர் இருக்கி றார். மெல்ல மெல்ல செயற்கை நுண்ண றிவு நுட்பம் இந்த அனுபவத்தையும் ஒரு தரவுத் தொகுப்பாக மாற்றிக்கொண்டு வளரும். இப்படித்தான் நம்முடைய தரவு களே, நம்மை ஆள்வதற்கான கருவிக ளாக மாறுகின்றன. ஒரு கட்டத்தில் மேலா ளர் பணியிடத்தில் உள்ளவரின் தேவை யும் குறையும். அந்த ஒரு நிறுவனத்தில் மட்டும் குறையாது, வளர்ச்சியடைந்த இந்த மென்பொருளை வேறு யார் வாங்கிப் பயன்படுத்தினாலும் அந்த நிறுவனத்தில் அது உயர்ந்த திறனோடு இயங்கும்.

ஓர் எளிய உதாரணம்

தரவுகள் எப்படிச் செயல்திறனை அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் எளிய உதாரணத்தைப் பார்க்கலாம். நாம் சாலையில் வாகனத்தை ஓட்டுவ தற்கு ஒரு அலைபேசியில் ‘மேப்’ (வரை படம்) பயன்படுத்துகிறோம். தொடக்கத் தில் அந்த வரைபடம் நமக்கு வழி மட்டும் தான் காட்டும். பின்னர் நாம் பயணிக்கும் பாதையில் வாகன நெருக்கம் உள்ளதா, தடை உள்ளதா, எத்தனை வேகத்தில் பயணிப்பது சாத்தியம் என்பதையெல் லாம் சொல்லும். இதுபோன்ற தரவுகளை அது ஒரே நாளில் பெறவில்லை. நம்மு டைய பயணப் பாதை முழுவதையும் அது  தரவாக எடுத்துக்கொள்கிறது. நம்மைப் போல இன்னும் பலரும் அதைப் பயன் படுத்தும்போது சராசரியாக இந்தச் சாலையில், இந்த வேகத்தில்தான் செல்ல முடியும் என முடிவுக்கு வருகிறது. சாலையில் உள்ள தடைகள், வாகன நெருக்கம், புதிய குறுக்குப் பாதைக் கான சாத்தியம் போன்றவைகளையும் புரிந்துகொள்கிறது. இப்படியாக நம்மிடமிருந்து தரவு கள் திரட்டப்படும்போது அவை அனைத் துமே அந்த நிறுவனத்தின் தனிச் சொத் தாக மாறுகின்றன. நம்முடைய தரவுக ளின் மீது ஒரு சமூகமாக நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எல்லோரும் பயன் படுத்துகிற வரைபடம் என்ற செயலியைப் போன்றது அல்ல நம்முடைய வேலை சார்ந்த தரவுகள். ஒரு நிறுவனத்தின் வேலை முறை யைச் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் கற்றுக்கொள்ளும்போது அதன் மீது தொழிலாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், நமக்குச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் உல கப் பெருநிறுவனங்களாக இருப்பதால், இந்தியா ஒரு நாடாகவும் எந்த கட்டுப் பாட்டையும் கொண்டிருப்பதில்லை. எனவே, அந்த நிறுவனங்களின் தனிப் பட்ட நோக்கமும், பாரபட்சமும் அதே துறையில், தொழிலாளிக்கு எதிராக அந்தத் தரவுகளைப் பயன்படுத்த சாத்தி யம் உருவாகிறது.

வளரும் நாடுகளின் போராட்டம்!

உலகின் மிகப்பெரிய அமெரிக்க நிறு வனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் தங்களுடைய ஏகபோகத்தை ஒரு மாபெரும் சொத்தாகக் கருதுகிறார் கள். எந்தவொரு கட்டுப்பாடும், ஒழுங்கு முறையும் இல்லாத நிலையில் உலகம் முழுவதும் வேலைத் தரவுகளைத் திரட்டி இவர்களால் அதீதமான லாபம் குவிக்க முடியும். சீனாவில் இந்த தொழில்நுட் பங்களை நோக்கிய முன்னேற்றம் தென் பட்ட உடனேயே அதனிடமிருந்து அனை த்து தொழில்நுட்பங்களையும் பறிக்கும் நோக்கத்துடன் பல்வேறு தடைகளை விதித்தார்கள். தென்கொரிய நிறுவன மான சாம்சங் போன்றவையும் இந்தப் போட்டியில் திக்குமுக்காடி வருகிறது. இப்போதைய சூழ்நிலையில்,  தங்களின் வேலைநீக்கத்திற்கு எதி ராக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்க ளில் உருவாகியிருக்கும் குமுறலும்,  பதற்றமும் இந்த பிரச்சனைக்குத் தீர் வைக் கொடுத்துவிடாது. இந்த பிரச்சனை நம்முடைய பொருளாதாரத்தில் கடுமை யான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ப தால், ஒரு கொள்கை ரீதியான தலை யீட்டை நோக்கி இந்திய அரசைத் தள்ளும் விதமாக நம்முடைய போராட்டங்கள் வீரி யமாக வேண்டும். இந்திய அரசும் இப் பிரச்சனையை நம் சுதந்திரத்தன்மைக்கு எழுந்திருக்கும் சவாலாகப் பார்க்க வேண்டும். நமக்கு ஈடான மக்கள் தொகையும், சற்றே பெரிய சந்தையையும் கொண் டுள்ள சீனா தம்முடைய பலத்தில் இருந்து காய்களை நகர்த்தி வருகிறது. குறிப் பாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை உருவாக்கத் தேவைப்படும் அரிய தனிமங்களில் சீனாவுக்கு உள்ள வலுவான இடம் அவர்களுக்குச் சில சாதகங்களைக் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாது, சீனாவில் இருக்கும் மக்க ளின் தரவுகளை ஃபேஸ்புக், கூகிள் போன்ற அமெரிக்கப் பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு ஆரம்பம் முதலே அவர்கள் அனுமதிக்கவில்லை. இத னால், செயற்கை நுண்ணறிவுக்கான தரவுகளின் கட்டுப்பாடு அவர்களிடம் கூடுதலாக உள்ளது. சீனா தனது மக்களின் தரவுகள் மீது கொண்டிருக்கும் சுதந்திரமான கட்டுப் பாடும், சோசலிசத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கான சாத்தியங்களும் அவர்க ளுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளன. டீப் சீக் என்று ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கி னார்கள். அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்களுக்குப் பின்னரே இந்தச் சாதனையை அவர்கள் செய்தார்கள். டீப் சீக் வருகை, அமெரிக்காவின் பங்குச் சந்தையை ஆட்டம் காணவைத்தது. அது மட்டுமல்லாமல், இந்த மென்பொருட்க ளை சொந்தமாக்க முடியாத பல வளரும் நாடுகளுக்கும் ‘ஓப்பன் சோர்ஸ்’ வடி வில் அதைச் சாத்தியமாக்கியது சீனா. இந்திய நிறுவனங்கள் பலவும் இது போன்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்க ளைப் பயன்படுத்த தயாராக இருக் கின்றன.

இந்திய அரசாங்கம்  என்ன செய்ய வேண்டும்?

சீனாவும், அமெரிக்காவும் மோதிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை மேலோட்டமாகப் பார்த்தால் ஏதேனும் ஒரு தரப்பில் நாம் நின்றால் போதும் என்று தோன்றலாம். ஆனால், இந்தியாவின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், சூழ்நிலையைச் சரி யாக உணர்ந்த - திட்டமிட்ட அணுகு முறை அவசியம். அமெரிக்காவில் இருந்து தொழில் நுட்பம் கிடைத்தாலும், சீனாவில் இருந்து கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்கிற இடத்தில் இந்திய முதலாளி கள் இருக்கிறார்கள். அதைப் பயன் படுத்தி தமது தொழிலாளர்களைக் கூடு தலாக உழைக்கச் செய்து, கூடுதல் லாபம் குவிக்கலாம் என்று முயற்சிக்கி றார்கள். எல்லா அம்சங்களிலும் முன்னே றியுள்ள அமெரிக்காவிலும்கூட இதுதான் நடக்கிறது. உலகப் பெரும் நிறுவனமான இன்டெல் 12,000 பணிகளையும், மைக் ரோசாஃப்ட் நிறுவனம் 15,000 பணி களையும் குறைத்திருக்கிறது. இப்படி, ஒரு நாளுக்குச் சராசரியாக 627 தொழில் நுட்பப் பணியாளர்கள் வேலையை இழக் கிறார்கள் (நாவல்விஸ்டா, ஜூலை 2024). எனவே, இந்தியா தன்னிடம் இருக்கும் ஒரே வலிமையான தனது ஐ.டி தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் நம் தொழிலாளர்களின் தரவுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து எடுக்கப் படும் தரவுகளின் மீதும், செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பங்களின் இயங்கு முறை மற்றும் அவற்றின் பாரபட்சம் பற்றியும் வெளிப்படைத்தன்மை யும், இந்திய மக்களின் நலன் அடிப்ப டையிலான கட்டுப்பாடும் வேண்டும். செயற்கை நுண்ணறிவு மென்பொருட் கள் நம்முடைய நிறுவனங்களின் மேலா ளர் பணிகளைக் கற்கின்றன. அத்துடன் அவை நிற்கப்போவதில்லை. நம்முடைய கனிம வளச் சுரங்கங்களுக்குள் அவை தானியங்கி ரோபோட்டுகளை இயக்க முடியும். உணவுப்பொருள் விநியோக வேலையைக்கூட அது பறக்கும் இயந்தி ரங்களின் வசம் மாற்றிவிடக்கூடும். இயந்திரங்கள் இந்த வேலைகளை எடுத்துக் கொள்ளும்போது, மனிதர்கள் அதைவிட மேம்பட்ட வேறு வேலைக ளைப் பார்க்கலாம். அதன் மூலம் ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக முன் னேற முடியும். ஆனால், ஏகபோக முத லாளிகளின் லாப வெறி மட்டுமே அடிப்ப டையாகக் கொண்ட வளர்ச்சி அதை அனுமதிக்காது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் இயங்கக்கூடிய வழிமுறைகள் (algorithms) என்னவென்பதிலும், தரவுகள் என்னென்ன என்பதிலும் வெளிப் படைத்தன்மை, சமூகத்தின் தேவைக் கேற்ற விதத்தில் தானியங்கி முறைகளை வளர்த்தெடுப்பதற்கான கொள்கைத் திட்டம் ஆகியவற்றைக் கேட்பதன் மூலம் தான் ஒரு தற்காப்பு ஏற்பாட்டை நாம் உறுதிசெய்ய முடியும். அத்துடன் இந்தியா தன்னுடைய சுயசார்பை நோக்கிப் பயணிக்க வேண்டும். Hஏஐ தொழில்நுட்பத்தின் மூளையாக அமைந்த வன்பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்திய சுயசார்பு வளர்க் கப்படவேண்டும். அதற்கான நீண்ட கால திட்டமிடல் தேவை. Hநாமே நமது மென்பொருட்களை வளர்த் தெடுக்க, வளரும் நாடுகளுக்கி டையில் முறையான ஒருங்கிணைப் பும், அந்த மென்பொருட்களின் மீது சமூகக் கட்டுப்பாடும் அவசியம். Hஅதற்கு இந்திய மக்களிடமிருந்து திரட்டப்படும் தரவுகளின் மீது நமது கட்டுப்பாட்டை உறுதிசெய்ய வேண் டும். இது நம்மிடம் உள்ள உடனடி யான சாத்தியம் ஆகும். மக்களின் தனி உரிமையையும், ஒட்டுமொத்த சமு தாய நலனையும் காக்கும் விதத்தில் ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும். ஏகபோக நிறுவனங்க ளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறான சூழலில் செயற்கை நுண்ணறிவு ஒரு வாய்ப்பாகவும், புதிய வளர்ச்சியாகவும் நிலைத்திடும்.