தூத்துக்குடியில் பாஜக குண்டர்கள் அராஜகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154-ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 5 அன்று துவங்கி, மகாகவி பாரதி நினைவு தினமான செப்டம்பர் 11 வரை ஒரு வார காலத்திற்கு, சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் சார்பில் மக்கள் ஒற்றுமைப் பிரச்சார இயக்கம் ஒட்டப் பிடாரம் வ.உ.சி. இல்லத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணி வித்து, துவங்கியது. அடுத்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, வஉசி சிலைக்கு மாலை அணிவித்து, சாதி - மத மோதல்கள் வேண்டாம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்று தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்தவர்கள், “வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க வந்தால், வ.உ.சி. பற்றி மட்டுமே பேச வேண்டும்; வேறு எதையும் பேசக் கூடாது” என்று கூறி தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக பிரமுகர் சொக்கலிங்கம் என்பவர் கூடியிருந்த சிஐடியு, விவசாயிகள் சங்கத் தோழர்களிடையே புகுந்து மைக்கைப் பிடுங்கி, முன்வரிசையில் நின்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பாஜகவின் தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி என்பவரும், அவருடன் வந்த நபர்களும் இதேபோல தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர், தாமதமாகவே தலையிட்டு அமைதியை ஏற்படுத்தி யுள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜனநாயக அமைப்புகள் நடத்தக் கூடிய மக்கள் கோரிக்கை போராட்டங்களில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள், இதுபோன்ற தாக்குதல் நடத்தி, போராட்டங்களுக்கு இடை யூறு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு காவல்துறை இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடிய பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்களிட மிருந்து உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மென்மையான அணுகு முறையை கையாள்வதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தூத்துக்குடியில் நடை பெற்ற மக்கள் ஒற்றுமைப்பிரச்சாரத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் மீது உரிய வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.