ஸ்கேன் இந்தியா
(அவ)லட்சணம்!
நாடு முழுக்க மும்மொழிக் கொள்கை என்ற கூச்சல் ஒரு புறம். மறுபுறத்தில் இரண்டில் ஒரு மொழியில் பற்றாக்குறை என்றால் தப்பில்லை என்று ஒன்றிய அரசு பம்மியுள்ளது. ஏக்லவ்யா பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இந்தத் தேர்வில் இந்தி மொழித் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் கட்டாயமாக இருந்தது. ஆங்கிலமும், ஒரு உள்ளூர் மொழியும் தேர்வு செய்திருந்தால் கூட, இந்தியில் மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும். இப்போது இந்தியில் மதிப்பெண்கள் தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறிவிட்டது. ஆசிரியர்கள் தேர்விலேயே ஒருமொழிக் கொள்கை என்ற நிலை இருக்கும்போது பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையின் லட்சணம் எப்படி இருக்கும் என்று பெற்றோர் வினா எழுப்புகிறார்கள்.
(அவ)மதிப்பு..!!
போலிச் சாமியார்களின் அட்டூ ழியங்களால் ஆன்மீக வாதிகள் மீதான மதிப்பு சரிந்துவிட்டது என்று தில்லிவாசிகள் புலம்பு கிறார்கள். 17 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் மேலாண்மைப் பள்ளியின் நிர்வாகி சைதன் யானந்தா கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்த அவர் ஆக்ராவில் சிக்கினார். சாமியார் என்று சொல்லிக் கொள்ளும் அவரிடம் விலை உயர்ந்த லேப்டாப், அலை பேசிகள் உள்ளி ட்டவை இருந் தன. ஏராளமான வீடியோ காட்சி கள் மற்றும் புகைப்படங்கள் அவற்றில் சேமிக்கப் பட்டிருந்தன. கல்வித் தந்தை என்று தன்னைப் பற்றி சில ஆட்களை வைத்து சொல்ல வைத்த சைதன்யானந்தா, கல்வியை அவமதித்துவிட்டார் என்று பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர் கண்டிக் கிறார்கள். ஓட்டைகள் வாயிலாக அவர் தப்பித்து விடக்கூடாது என்றும் கருதுகின்றனர்.
(அவ)மானம்..!
உத்தரகண்டு மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால், பெரும் போராட்டம் நடந்து வருகிறது. தேர்வர்கள் மட்டும் பங்கேற்று வந்த போராட்டம், மக்களின் பங்கேற்பால் ஆட்சியாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தின் வீச்சைத் தாங்க முடியாததால் வினாத்தாள் கசிவை “போலி ஜிகாத்” என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி திசைதிருப்ப முனைந்திருக்கிறார். இந்தக் கசிவில் பல முக்கியமான நபர்களுக்கு தொடர்பு இருந்தாலும், அண்ணன்-தங்கை இருவரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் மதச் சாயம் பூச முதல்வர் முயல்கிறார். வினாத்தாள் கசிவால் மாநிலத்தின் மானம் காற்றில் பறந்துள்ளது. இதில் மதச்சாயம் பூசி கூடுதல் நெருக்கடியை முதல்வர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
(அவ) நம்பிக்கை!
பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தந்துவிட்டதால், வெற்றி உறுதி என்று பாஜககாரர்கள் நம்பிக்கையோடு பேசுகிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் பற்றி மக்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை நிலவுகிறது. இதை வைத்துக் கொண்டு தொழில் தொடங்கச் சொல்கிறார்கள். என்ன தொழில், அதற்கு விற்பனைச் சந்தை உள்ளதா என்றெல்லாம் எந்தவித ஆய்வோ அல்லது பரிந்துரையோ இல்லை என்கிறார்கள் மக்கள். உள்ளூர் கட்சிக்காரர்களோ, இந்தப் பத்தாயிரம் ரூபாயை திரும்பக் கேட்க மாட்டார்கள் என்று சொல்லி வருகிறார்கள். இப்படியெல்லாம் சொல்லி விட்டு, ஆட்சிக்கு வந்துவிட்டால் எதுவுமே செய்ய இயலாத இந்தப் பத்தாயிரம் ரூபாயை வட்டியோடு திரும்பக் கேட்டால் என்ன செய்வது..? இவர்களை நம்ப முடியாது என்று பணத்தைப்பெற்றுள்ள பெண்களில் சிலர் கூறுகிறார்கள்.
