ஸ்கேன் இந்தியா
கொள்ளை இரண்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள கம்பீரா பாலம் உடைந்து 22 பேர் பலியாகினர். மக்களின் கோபத்துக்குப் பயந்து மாநிலத்தில் உள்ள சுமார் 1,800 பாலங்களையும் சமூ கத்தணிக்கை செய்வோம் என்றார்கள். நடந்த மாதிரித் தெரியவில்லை. இப்போது புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் பாலம் ஒன்றில் சிக்கல் ஏற்பட்டு இருவர் பலத்த காயம். கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்து 157 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது வும், 100 ஆண்டுகளுக்கான பாலம் என்று 2017ல் கட்டிய பாலம் ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்கவில்லை. 40 கோடி ரூபாய் போயே போச்சு. அதோடு, சிதைந்த பாலத்தை முழுமையாகத் தகர்க்க டெண்டர் விட்டு சம்பாதித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
அம்பலம்
மத்தியப் பிரதேசம், இந்தூர் மாநகரத்திற்கு முதலமைச்சர் மோகன் யாதவ் வருகிறார் என்றவுடன், எதிர்க்கட்சிக்காரர்கள் அவர் கண்களில் விழுந்துவிடக்கூடாது என்பதில் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கவனமாக இருந்தார். அதேவேளையில், தனது மகன் சங்கமித்ராவை மேடையேற்றவும் திட்ட மிட்டார். மகனும் “ராஜாதிராஜ, ராஜகுல திலக, ராஜ கம்பீர” என்ற முழக்கங்களோடு மேடையேறினார். இளங்கன்று பயமறியாமல், பல உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டது. “புல்லட் ரயில்” ஏன் இன்னும் திரையில் ‘பவர் பாயிண்ட்’டிலேயே நிற்கிறது. 400 ரயில்நிலை யங்களை நவீனமயமாக்குவோம் என்று சொல்லி விட்டு, இன்னும் 20 நிலையங்களைக்கூட நவீனமாக்க வில்லையே என்றவுடன் கரவொலி எழும்பியது. ‘இது க்குக் காங்கிரஸ்காரங்களையே கூப்புட்டிருக்கலாம்’ என்று கட்சிக்காரர்கள் முணு முணுத்தனர்.
திருத்தல்
ஹரப்பா மொழியின் பொருளைக் கண்டுபிடிக்க நடைபெறும் முயற்சிகளை பற்றிய ஆய்வரங்கத்தை கலைகளுக்கான இந்திரா காந்தி தேசியமையம் செப்.11 முதல் செப்.13 வரையில் தலைநகர் புதுதில்லியில் நடத்துகிறது. 12ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார். ‘வேதகாலமும், ஹரப்பா நாக ரீகமும் ஒன்று’ என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி வருகிறது. ஆய்வாளர்களில் பலர், ‘பழமையான திராவிட மொழிகளையே ஒத்துப் போகிறது’ என்று கூறியுள்ளனர். இரண்டு தரப்பும் ஆய்வறிக்கைகளை வைக்கப் போகின்றன. பிரதமர் வரும் அன்று, ஆர்.எஸ்.எஸ். கருத்திற்குத் தலையாட்டும் அறிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இல்லாத சரஸ்வதி நதியைச் சொல்லி, நாகரீகத்திற்கும் அதன் பெயர்தான் என்று சொல்லிவிட்டு மோடி போகப் போகிறார். அவ்வளவு தான்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர்.
சர்ச்சை
திரிபுராவின் திப்ரா மோதா கட்சியின் தலைவரான பிரத்யோத் கிஷோர் தேப் பர்மா புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். திரிபுராவின் பகுதிகளான அகர்தலா, தெல்லியமுரா மற்றும் காஞ்சன்பூர் ஆகியவை தனக்குத் சொந்தமானது என்றதோடு, “மேலும் ஒரு படி மேலே போக நான் தயார்” என்று மிரட்டியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற உதவியதோடு, அவர்களோடு கூட்டணி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். பிளவுவாத சக்திகளை எதிர்கொண்டு, அவற்றை அழித்தொழிப்பதில் இடது முன்னணி அரசு உறுதியாக நின்றது. அரசியல் ஆதாயத்திற்காக இப்போது மீண்டும் பிளவுவாதக் குரல்கள் கேட்கின்றன. ‘அதிகாரத்தில் இப்போது இருந்துவிட்டு 2028ல் தேர்தல் வரும்போது வெளியில் வருவார்கள்’ என்று சொல்கிறார்கள் திரிபுரா அரசியல் பார்வையாளர்கள்.