அன்பின் வேர்கள்
ஊரின் அருகாமையில் இரண்டொரு பள்ளிகள் இருக்கின்றன.ஆனாலும் சிறிது தூரத்தில் கொண்டு சேர்த்தால்,பிள்ளையின் கற்றல் திறன் அதிகரிக்குமென எண்ணினா
மகளை தான், நினைத்ததுப் போல, அந்த பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்தார்.ஐந்தாம் வகுப்புவரை உள்ளூ ரிலே படித்தவள்.புதிதான ஒரு ஊருக்கு, தனியாகப் பேருந்து பிடித்து ஏறுவதற்கு பரிச்சயம் இல்லாதவள். அதுவரை தின மும் தன் மகளோடு பயணமாகி பேருந்து பிடித்து அழைத்துச் செல்வார்.அதன் பின்னரே பிழைப்பிற்கான பணிகளைத் தொடர்வார். பேருந்து நிலையத்தில் இறங்கிய மாணவிகள்,அந்த நகரத்து சந்து பொந்தின் ஊடாகத்தான் பள்ளிக்குச் செல்ல முடியும். அந்தப் பள்ளியில் மாணவிகளின் எண் ணிக்கையோ அதிகம். பல ஊர்களிலிருந்து மாணவிகளை சேர்ப்பதற்கு காரணங்கள் பல உண்டு. பலத் துறைகளிலும், வெற்றி யாளர்களை சமூகத்திற்கு உருவாக்கிக் தரும் புகழ்வாய்ந்த பழமையான பள்ளிக் கூடம்தான் அது. பார்க்கும் யாவும் புதிது பொதுவாக புதிதொன்றைப் பார்த்தாலே குழந்தைகள் மனம் வியக்கும் கூடவே ஆர்ப்ப ரிக்கும். அதே வேளையில் திக்கென்றும் இருக்கும்.அப்படித்தான் அவரின் மகளுக்கும் இருந்தது. எப்படி தனியாக விடமுடியும்.பேருந்து ஏறி இருவரும் ஊன்றி நின்றதும்,இந்தப் பகுதி யிலிருந்து மகளுக்குத் தோழியாக ஒரு மாணவியாவது கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் இருவரையும் சேர்ந்து போகச் சொல்லலாமே என்று நினைத்தார். பேருந்துக்குள் பள்ளி சீருடைகள் ஏதேனும் தென்படுகிறதா என்று நாள்தோறும் தேடினார். ஒன்றும் அகப்படவில்லை. காலையில் மட்டுமல்ல மாலையிலும் பள்ளிக்குச் சென்று தன் பிள்ளையை அழைத்து வருவதில் அக்கறை காட்டினார். பிள்ளை சோர்ந்து விடக்கூடாதென்பதே காரணமாக இருந்தது.போகப்போகஎல்லாம் பழக்கத்திற்கு வந்துவிடுமென்றும் அவ் வப்போது தேற்றினார். ஒரு நாள் பள்ளியில் வழக்கத்திற்கு மாறாக முன்னமே பள்ளி விடப்பட்டிருந்தது.இதை அறியாத அவர்,எப்போதும் போல குறித்த நேரத்திற்கே சென்றார். அப்போது வெகு தூரத்தில் அந்தப் பள்ளி மாணவிகள் பலர் பேருந்து நிலையத்திற்கும், இன்னும் சிலர் வெகுதூரம் மிதிவண்டியிலும் பைக்கு களிலும் எங்கும் பரவலாகச் சென்று கொண்டி ருந்ததைக் கண்டார். பாப்பா என்னானதோ என்ற தவிப்பு அவ ருக்குள் ஊசலாடிக் கொண்டிருந்தது. பள்ளியை நோக்கி விரைந்தார். போகிற வழியெங்கும் தேடியே சென்றார்.காம்ப வுண்டுக்கு உள்ளேயும் வெளியேவும் தேடி னார். அப்போது பள்ளி அரவமற்றும் இருந்தது. சுற்றியும் பார்த்தார் காண வில்லை.திக்கற்றிருந்தவர் பைக்கை ஸ்டார்ட் செய்தார்.அப்பாவின் பைக் சத்தம் கேட்டதும் பள்ளி காம்பவுண்டுக்குள் இருந்து, தலையை நீட்டுகிறாள் மகள். ”சடமாய் நின்று கொண்டிருந்தவருக்கு உயிர் சடனாய் வந்தது”. அப்பா வந்தால் பள்ளிக்குதானே வரு வார் என்ற யோசனையில் மகள் இருந்தி ருப்பது நல்லதாகப் போனது.பிள்ளையை வாரி எடுத்து தலைகோதி ஆசுவாசப் படுத்தி அழைத்து வந்தார். மகள் யாரு மற்று தனியாகத்தான் நின்று கொண்டி ருக்கிறாள் என்பது மட்டும் தந்தைக்குத் தெரியும். ஆனால் மகள் அதை வெளிப் படுத்தவில்லை. பதிலாக புன்னகையை மட்டும் விசாலமாக்கி இருந்தாள். அப்பா வைக் கண்டதும் துயரத்தை மறந்தி ருந்தாள். மகளுக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து வழியெங்கும் பேசிக்கொண்டே வந்தார்.அது மகளுக்கு மட்டுமல்ல, தன்னையும் ஆற்றுப்படுத்தும் என நம்பி னார். மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லு கையில், அப்படியேதும் பள்ளி சீக்கிரம் விட்டுவிட்டால்,இந்த கடையில் வந்து இருந்து கொண்டு என் கைபேசிக்கு அழைத்திடு பாப்பா,என்றும் சொல்லிக் கொடுத்திருந்தார்.நன்கறிந்த அந்தக் கடைக்காரரிடமும் மகளுக்கு போனைக் கொடுத்து உதவுங்கள் என்றிருந்தார். இருப்பினும் ஒவ்வொரு நாளும் தன் மக ளைப் பற்றிய யோசனையை மட்டும், அவரது மனம் உந்தித் தள்ளியபடியேதான் இருந்தது. பிள்ளைக்கு பெருஞ் சுமையை யேதும் கொடுத்து விட்டோமோ,என்றவரின் மனம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. அன்றொரு நாள் பெருமழை பெய்ததும் முன்கூட்டியே பள்ளி விடப்பட்டிருக்கிறது. சூழலைக் கண்டவர், கொஞ்சம் முன்னமே ஏற்றியும் வரச் சென்றிருந்தார். “மழையோ சோவெனப் பெய்து கொண்டிருக்கிறது”.ஒருங்கணைத்துக் கொண்ட வானமோ விட்டப் பாடில்லை. அப்படி, இப்படியென ஓரஞ்சாரம் ஒண்டினாலும் இருவரும் நனைந்துதான் போயிருந்தார்கள். இப்போது பலமான யோசனை அவருக்குள் தாண்டவமாடியது. நடுங்கி ஒடுங்கி அப்பாவின் சூட்டில் அணைந்திருக்கும் மகளைப் பார்க்கப் பார்க்க,மழைச் சாரலிலும் மனம் வெதும்பி இருந்தார்.மகளிடம் எதையும் காட்டிக் கொண்டதில்லை. மற்றுமொரு நாள் காலையில் வழக்க மாக பள்ளிக்கு விடச் சென்றார்.இக்கணம் வாயைப் பிதுக்கினாள் மகள்.என்னாச்சு மா? அங்கே பாருப்பா! பிரேயர் நடக்குது. “என்னடா சாமி” இன்னைக்கு சீக்கிரம் நடக்குது?. “ஆமாம் ப்பா இன்னையிலிருந்து பிரேயர் பத்து நிமிடத்துக்கு முன்பே நடக்கும்னு நேத்தே சொன்னாங்க.” “பிரேயருக்குப் போகலைனா க்ரவுண்ட்ட சுத்தி பேப்பர் பொறுக்க வச்சுறுவோம்னு அறிவிச்சாங்க”. சரி சரி இன்னைக்கு மட்டும் ‘அஜஸ்’ பண்ணிக்கடா,அப்பா சாயாந்திரம் வந்திர்றேன் என்று சொல்லி மகளை உள்ளே அனுப்பி வைத்தார். திரும்பி திரும்பி பார்த்து“அப்பா பாய், அப்பா பாய்” எனச் சொன்ன மகளுக்கு, பாய் சொல்லிக் கொண்டே நின்றார்.மாலையும் வந்தது,மகளை பைக்கிலும் ஏற்றிக் கொண்டார். பாடம் நல்லா நடத்து னாங்களாடா, புரியுதா? புரியுதுப்பா.போறது வாரதுதான்ப்பா கொஞ்சம் சிரமம்,எத்தனை மணிக்கு எழுந்தாலும் நேரமாயிடுதே, தந்தை நினைப்பதை சொல்லி வந்தாள் மகள்!. நம்ம பக்கத்துப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறியாம்மா?பட்டுனுக் கேட்டார்.குஷியானவளாய் படபடவென பேசத் தொடங்கினாள்.நாந்தான் இங்க சேர்ந்திட்டேனே.அதெல்லாம் மாத்திக்க லாம் டா.அப்படியா! அப்ப,சைக்கிள்ளே போயிருவேன். நீயும் அலையத் தேவையில்லை அப்பா என்றாள்.அப்பனின் தயவு தேவையில்லை எனும்,மகளின் தன்னம்பிக்கை மீதான வேகத்தைக் கண்டு பூரித்தும் போனார். இப்போது பக்கத்துப் பள்ளியில் மகளை மாற்றி சேர்த்தாயிற்று.படிக்கும் உள்ளூர் செட்டுகளோடு சிட்டாகப் பறந்தாள்.அன்று மாலை மகள் வீடு திரும்புவதை ஆவ லோடு எதிர்ப் பார்த்திருந்தார். மகளும் வந்தாள்.வந்தவள் படபட வென ஒரு நோட்டை எடுத்தாள்.கடைசித் தாளைப் புரட்டிக் காட்டி அழத் தொடங்கி னாள். இனிமே இவங்களப் பார்க்கவே முடி யாதா அப்பா?! என்றாள். முன் வரிசையில் ஒன்றாக அமர்ந்தி ருந்த, முந்தைய மாணவிகள் தங்கள், பிரிவை எழுதி தாளில் கையெழுத்தும் இட்டி ருந்தார்கள். சில நாளே சந்தித்தோம்.பார்த்துப் பேசி பழகுவதற்குள் இன்றோ பிரிகிறோம். இனி எப்போது சேரப் போகிறோம் ஏஞ்சல்?
