articles

img

குறைந்தபட்ச ஆதரவு விலையும் பாஜக அரசின் மோசடியும் - கே.பி.பெருமாள்

குறைந்தபட்ச ஆதரவு விலையும் பாஜக அரசின் மோசடியும்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2025-26ஆம் ஆண்டு காரீப் (குறுவை) பரு வத்திற்கு ரூ.2.07 லட்சம் கோடி மதிப்புள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை  (எம்.எஸ்.பி) தொகுப்பை அறிவித்துள் ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பாஜக அரசு தெரிவிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் இந்த அறிவிப்பு 50 சதவீதம் லாபத்தை உறுதி செய்கிறது என்று கூறுகின்றன. ஆனால் இது உண்மையல்ல. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் 2006ஆம் ஆண்டு தனது அறிக்கையில், விவசாயிகளை விவசாய நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு மொத்த உற்பத்தி செலவை (உரம், பூச்சிமருந்து, விதை, கூலி, குடும்ப உழைப்பு உள்ளிட்ட  அனைத்து செலவுகள்) விட குறைந்தது 50 சதவீதம் (C2 + 50% )அதிகமாக ஆத ரவு விலையை வழங்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியது. ஆனால் கடந்த 19 ஆண்டுகளாக அது காகிதத்திலேயே உள்ளது. உண்மையான நிலவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்ட விலைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நெல் விவசாயிகள் பெற்ற சராசரி விலை 2021-22 ஆம் ஆண்டில் மொத்த உற்பத்தி செலவை விட 36 சதவீதம் குறைவாக இருந்தது. தெலுங்கானாவில் துவரை விவசாயிகள் பெற்ற சராசரி விலை, ஆதரவு விலையை விட 11 சதவீதம் குறைவாக இருந்தது. நெல்லுக்கான ஆதரவு விலை 2004-05 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு வெறும் 1.17 சதவீதம் உயர்ந்துள்ளது. இது  2014-15ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 0.53 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 16 பயிர்களில் 9 பயிர்கள் 2014-15 முதல் 2025-26 வரை ஆதரவு விலை வளர்ச்சியில் கூர்மையான மந்த நிலையைக் காட்டு கின்றன. (அட்டவணை) கொள்முதல் நிலையின் கொடுமை விவசாயிகள் செலவு மதிப்பீட்டு ஆணையத்தின் அறிக்கையின்படி கடந்த 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நெல் விவசாயி களில் வெறும் 17.3 சதவீதத்தினர் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் மூலம் பயன டைந்துள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் 5.8 சதவீதம், பீகாரில் 4.1 சதவீதம், அசாமில் 5 சதவீதத் திற்கும் குறைவானவர்களிடம் மட்டுமே அரசு நெல் கொள்முதல் செய்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் துவரம் பருப்பு உற்பத்தியில் 0.23 சதவீதம், நிலக்கடலை உற்பத்தியில் 0.72 சத வீதம், பருத்தி உற்பத்தியில் 9.3 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பரிந்துரைகள் நிராகரிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள பாஜக அரசாங்கம் கூட மக்காசோளத்திற்கான உற்பத்தி செலவை ₹2991 ஆக கணித்து, குவிண்டால் ஒன்றுக்கு ₹4550 என பரிந்துரை செய்தது.  ஆனால் ஒன்றிய அரசின் ஆதரவு விலை வெறும் ₹2400 மட்டுமே. இதன்படி விவசாயிகளுக்கு குஜராத் அரசு கணித்த விலையின்படி கூட ₹591 இழப்பு ஏற்படுகிறது. ஒன்றிய அரசு நைஜர் விதைக்கு ₹820, கேழ்வரகுக்கு ₹596, பருத்திக்கு ₹589, எள்ளுக்கு ₹579 குவிண்டால் ஒன்றுக்கு அதிகரித்துள்ளது என்று பெருமையாக தெரிவிக்கின்றனர்.  ஆனால் இந்த அதிகரித்த விலை கள் மொத்த உற்பத்தி செலவு+50 சத வீதம் அளவுகோலை விட மிகவும் குறை வாக உள்ளது. உற்பத்தி செலவு தொடர்ந்து அதி கரித்து வரும் நிலையில், கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரங்களை அனுப விக்கிறார்கள்.  கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து மாண்டு போகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை - அனைத்து பயிர்களுக்கும் மொத்த உற்பத்தி செலவு+50 சதவீதம் அடிப்ப டையில் வழங்கிடவும், அரசே கொள்மு தல் செய்வதற்கான நடவடிக்கை எடுத் திடவும், விவசாயிகளின் ஒன்றுபட்ட வலுவான போராட்டங்களால் மட்டுமே வெற்றியடைய முடியும்.