ஐரோப்பா ஒரு ‘மூன்றாவது வழியை’ வழங்க முடியுமா?
டொனால்டு டிரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக மட்டுமன்றி, அமெரிக்க குடி மக்களுக்கு எதிராகவே கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க தாராளவாத (Liberal) வட்டாரங்க ளுக்கு இடையே ஒரு புதிய போக்கு உருவாகி யுள்ளது. இன்றைய உலகின் இரு பெரும் சக்திக ளான சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டிற்கும் மாற்றாக, ஒரு ‘மூன்றாவது வழியை’ அல்லது ஒரு புதிய ‘மாதிரியை’ ஐரோப்பா வழங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க தாராளவாதிகள் ஒருபோதும் சீனாவால் ஈர்க்கப்பட்டவர்கள் அல்ல; எனவே அவர்கள் சீன மாதிரியை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயகம் சிதைந்து வரும் நிலையில், பொருளாதார வெற்றி யையும், பயனுள்ள ஜனநாயகம், மனித உரிமை கள் மற்றும் சமூக நீதியையும் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் ஐரோப்பாவில் காண்கிறார்கள். இந்தச் சாத்தியம் நனவாக வேண்டு மானால், ஐரோப்பா தனது பொருளாதாரத்தைச் சீரமைப்பதோடு, தீவிர வலதுசாரி சக்திகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள். ஐரோப்பிய ஜனநாயகமும் ஏகாதிபத்தியமும் அமெரிக்க தாராளவாதிகளுக்கு ஐரோப்பிய ஜனநாயகம் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், மூன்றாம் உலக நாடுகளின் பார்வையில் அது எப்போதும் ஏகாதிபத்தியத்துடனேயே தொடர்புடைய தாக இருந்து வருகிறது. காலனித்துவ பேரரசுகள் முறைப்படி முடிவுக்கு வந்த பின்னரும் இந்த நிலை தொடர்கிறது. ஈரானின் மொசாடெக், காங்கோ வின் பாட்ரிஸ் லுமும்பா முதல் இராக்கின் சதாம் உசேன் வரை, தங்கள் நாட்டு இயற்கை வளங்களின் மீது சுதந்திரமான இறையாண்மையை உறுதி செய்ய முயன்ற ‘பிடிவாதமான’ மூன்றாம் உலக அரசாங்கங்க ளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தீட்டிய பெரும்பாலான சதித்திட்டங்களில் பிரிட்டன் ஒரு தீவிர கூட்டாளியாக இருந்துள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை, ‘பிராங்கோபோன் ஆப்பிரிக்கா’வில் காலனி ஆதிக்க நீக்கம் என்பது முழுமையடையவே இல்லை. முறைப்படி சுதந்திரம் பெற்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகள் பலவற்றில் பிரெஞ்சுப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப் பட்டுள்ளன. புர்கினோ பாசோவின் தாமஸ் சங்காரா பிரெஞ்சுப் படைகளை வெளியேற்ற முயன்றபோது, அவர் ஒரு சதித்திட்டத்தின் மூலம் தூக்கியெறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின்னால் பிரான்சின் வலுவான ஆதரவு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போதுதான் புர்கினோ பாசோ உள்ளிட்ட சில மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிரெஞ்சுப் படைகளை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஐரோப்பா அளிக்கும் ஆதரவு இதே பாணியின் ஒரு பகுதியாகும். மேலும், பல ஐரோப்பிய தாராளவாதிகள் தங்கள் அரசாங்கங்களின் இந்த நிலைப்பாட்டோடு மறைமுகமாக உடன்படுகிறார்கள். உதாரணமாக, பெர்லின் திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவரான ஜெர்மன் திரைப்பட இயக்குநர் விம் வெண்டர்ஸ், இந்த இனப்படுகொலை குறித்த கேள்விக்கு, அரசியலையும் திரைப்படங்களையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று பதிலளித்தது இதையே காட்டுகிறது. உக்ரைன் போரைத் தடுத்திருக்கக்கூடிய ‘மின்ஸ்க் ஒப்பந்தங்களை’ (Minsk agreements) சீர்குலைத்த தற்கு ஐரோப்பாவே பொறுப்பு என்பதையும், இன்று அந்தப் பிரச்சனையில் எந்தவொரு அமைதித் தீர்வு களையும் கடுமையாக எதிர்ப்பதும் ஐரோப்பா தான் என்பதையும் நாம் சிறிது நேரம் மறந்துவிடுவோம்; நேட்டோ அமைப்பை ரஷ்ய எல்லை வரை விரிவு படுத்தும் முயற்சிக்கும், உக்ரைனின் விக்டர் யானுகோவிச் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதற்கும் ஐரோப்பா துணை நின்றதைக்கூட விட்டுவிடுவோம்; ஐரோப்பா ஒரு ‘மூன்றாவது வழியை’ வழங்கு வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய குறுகிய வாதத்தை மட்டும் இப்போது ஆராய்வோம்.
பொருளாதாரக் காரணிகளும் தாராளவாதத்தின் வீழ்ச்சியும் டொனால்டு டிரம்ப்பின் அட்டூழியங்கள் அனைத்தும் அவரது தனிப்பட்ட குறைபாடுகளால் மட்டுமே ஏற்படுகின்றன என்று இந்த வாதம் பொது வாகக் கருதுகிறது. ஆனால், அத்தகைய நபர் எப்படி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தார்; அமெரிக்காவில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது போல, ஐரோப்பா விலும் தாராளவாத ‘நடுத்தரப் பாதை’ ஏன் வீழ்ச்சி யடைந்து வருகிறது என்ற கேள்விகளை அது எழுப்புவதில்லை. சுருக்கமாகச் சொன்னால், இந்த வாதம் டிரம்ப்பின் வெற்றியையோ அல்லது ஐரோப்பா வின் அரசியல் எதிர்காலத்தையோ அடிப்படைப் பொருளாதாரக் காரணிகளுடன், குறிப்பாக முதலா ளித்துவத்தின் தற்போதைய நிலையுடன் இணைத்துப் பார்ப்பதில்லை. நவீன முதலாளித்துவத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இரண்டிலுமே தேசிய வருவாயில் உழைக்கும் வர்க்கத்தின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்றால், 2011-இல் ஒரு சராசரி அமெ ரிக்க ஆண் தொழிலாளியின் உண்மையான கூலி, 1968-இல் இருந்ததை விடக் குறைவாக இருந்தது என்று பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் குறிப்பிடுகிறார். ஐரோப்பாவிலும், 2022-23ல் கடுமை யாக வீழ்ந்த உண்மையான கூலி, 2024-ன் நான்காம் காலாண்டு வரை அதன் 2021 நிலையை எட்டவில்லை என்று ஐரோப்பிய மத்திய வங்கி கூறுகிறது. உக்ரைன் போரினால் ஜெர்மனியில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி அந்நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. பல பத்தாண்டுகளாக நீடிக்கும் நவ தாராளவாத உலகமயமாக்கலால் (Neo-liberal globalization), மூலதனத்தின் தங்குதடையற்ற நகர்வு ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைகளைப் பலவீனப்படுத்தியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் மலிவான உழைப்புச் சக்தியோடு போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நவ தாராளவாத பொருளாதார ஆட்சியை ஊக்குவித்த தாராளவாத அரசியல் ஆட்சிகள் மீது மேம்பட்ட முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் மிக முக்கியமானது; நியாயமானது.
தீவிர வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடைப் பட்ட ‘நடுத்தர’ தாராளவாத அரசியல் சக்திகளின் பலவீனம் இதன் நேரடி விளைவாகும். உண்மையில், அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டனின் ‘நியூ லேபர்’, பிரான்சின் மேக்ரான் அல்லது ஜெர்மனியின் பிரெட்ரிக் மெர்ஸ் போன்ற இந்த ‘நடுத்தர’ சக்திகள் தங்கள் நாட்டு தொழிலாளர்களின் அவலநிலை குறித்து எந்த விழிப்புணர்வும்; அல்லது அனுதாபமும் அற்றவர்க ளாக உள்ளனர். மெர்ஸ் போன்றவர்கள் பிளாக்ராக் (Blackrock) போன்ற நிதி நிறுவனங்களில் பணி யாற்றிய பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள். இதன் காரணமாகவே தொழிலாளர்கள் ஒருபுறம் தீவிர வலதுசாரிகள் அல்லது மறுபுறம் இடதுசாரிகளை நோக்கித் திரும்பியுள்ளனர். பிரிட்டனில் ஜெர்மி கோர்பின் அல்லது அமெரிக்காவில் பெர்னி சாண்டர்ஸ் போன்ற இடதுசாரித் தலைவர்கள் தாராள வாதிகளின் சூழ்ச்சியால் முடக்கப்பட்டபோது, தொழி லாளர்கள் பெருமளவில் தீவிர வலதுசாரிகளை நோக்கிச் சென்றனர். பிரான்சில் மட்டுமே ஒரு ஒருங்கிணைந்த இடதுசாரி அணி இத்தகைய சூழ்ச்சிகளை முறியடித்து, தீவிர வலதுசாரி மரின் லெ பென்னை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. மாற்றத்திற்கான வழி: இடதுசாரித் தலையீடு தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு குறைவதைத் தடுத்து நிறுத்துவது ஜனநாயகம் பிழைத்திருப்பதற்கான அத்தியாவசிய நிபந்தனையா கும். இதற்கு அரசின் தீவிரமான நிதித் தலையீடு (Fiscal Intervention) தேவை. ஆனால், மூல தனத்தின் மீதான கட்டுப்பாடு இல்லாத உலகில் இத்தகைய தலையீடு சாத்தியமற்றது; ஏனெனில் எந்தவொரு நாடும் அத்தகைய முயற்சியை எடுத்தால், அங்கிருந்து மூலதனம் வெளியேறிவிடும். எனவே, நவ தாராளவாத ஆட்சியிலிருந்து வெளியேறாமல் தொழிலாளர்களின் பங்கினை உயர்த்த முடியாது. இதை இடதுசாரிகளால் மட்டுமே செய்ய முடியும். தீவிர வலதுசாரிகள் தொழிலாளர்களுக்குப் பொய் வாக்குறுதிகளை அளிக்கலாம், ஆனால் அவர்கள் இறுதியில் பெருநிறுவன முதலாளிகளின் ஆதர வையே நம்பியிருப்பதால் அந்த வாக்குறுதிகளை நிச்சயம் மீறுவார்கள். ஐரோப்பா ஒரு புதிய ‘மாதிரியை’ வழங்கும் என்று நம்பும் அமெரிக்க தாராளவாத வட்டாரங்கள் இந்த அடிப்படைப் புள்ளியைத் தொடுவதில்லை. அதாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கீன்சியப் பொருளாதாரம் எனும் கலப்புப் பொரு ளாதாரம் என்ற பெயரில், பொருளாதாரத்தில் அரசுத் தலையீட்டிற்குப் பிறகு, நவ தாராளவாதம் மீண்டும் கொண்டுவந்த முதலாளித்துவத்தின் ‘தன்னிச்சை யான போக்கு’, வருமான சமத்துவமின்மையை அதி கரித்து உழைக்கும் வர்க்கத்தைத் துயரத்தில் ஆழ்த்தி யுள்ளது. இதன் விளைவாகவே தீவிர வலதுசாரிகள் எழுச்சி பெற்றுள்ளனர். மூலதனக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நவ தாராளவாதத்தின் பிடியிலி ருந்து பொருளாதாரத்தை மீட்கக்கூடிய இடதுசாரி அரசாங்கங்கள் அமைந்தால் ஒழிய, ஐரோப்பாவால் எந்த ‘மாதிரியையும்’ வழங்க முடியாது. ஐரோப்பியப் பொருளாதாரங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமுமே இன்று ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளன.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், உழைக்கும் மக்க ளின் (தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்) ஆதரவைப் பெற்ற அரசாங்கங்கள் ஆட்சிக்கு வர வேண்டும். ஐரோப்பாவின் செயல்பா டுகளுக்கான தடைகள் ஐரோப்பிய ஒருங்கி ணைப்பால் ஏற்பட்டவை அல்ல, மாறாக நவ தாராள வாதத்தின் இறுக்கமான பிடியால் ஏற்பட்டவை. எனவே, ஐரோப்பாவின் இன்றைய நிலை அமெரிக்காவிலிருந்து வேறுபட்டதல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வர்க்க சக்திகளின் சமநிலையால் ஐரோப்பா வேறுபட்ட பொருளாதார வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்று நவ தாராள வாத முதலாளித்துவத்தின் தாக்கத்தால் அனைத்தும் ஒன்றாகிவிட்டன. டொனால்டு டிரம்ப் தனது வரி விதிப்பு நடவடிக்கைகளின் மூலம் நவ தாராளவாதத்தை எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும், எல்லை கடந்த மூலதனப் புழக்கத்திற்கு அவர் இன்றும் ஆதரவாகவே இருக்கிறார். எனவே, அமெரிக்கா விலிருந்து மாறுபட்ட ஐரோப்பிய ‘மாதிரி’ என்பதைத் தேடுவதை விட, நவ தாராளவாத முதலாளித்துவத்தை முறியடிப்பதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, பிப்ரவரி 22, 2026 தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.
