articles

img

எப்ஸ்டீனின் நிழல் - வாஷிங்டனிலிருந்து தில்லி வரை - பிருந்தா காரத்

எப்ஸ்டீனின் நிழல் -  வாஷிங்டனிலிருந்து தில்லி வரை

எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப் பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின் சீரழிவுத்தன்மையைவிட மிக அதிகமான சில உண்மைகளை அம்பலப்படுத்தி யுள்ளன. இந்த ஆவணங்கள் அரசியல் அதி காரம்- கார்ப்பரேட்டுகள்- நிதி அமைப்புகள்- பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களி டையே நிலவிய “பிணைப்பின்” புதிய மாடலின் இருண்ட  உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இத்தகைய வர்க்க அடிப்படையிலான கட்டமைப்பு புதியது அல்ல. இந்த கொடூரச் செயல்களில் உள்ள ஆழமான குற்றத்தின் தன்மையோ அல்லது அந்தக் குற்றத்துக்கு தண்டனை இல்லை எனும் தகுதியோ கூட புதியது அல்ல. ஆனால் இந்தக் கோப்புகள் (முத லாளித்துவ சமூகத்தின்) அழுகிய தன்மை எந்த அளவுக்கு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. தனியார் லாபத்துக்கு அர்ப்ப ணிக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு தார்மீகத்தின் குறைந்தபட்ச பெயரளவுக்கான அடையாளத்தைக் கூட தேவை இல்லை என அகற்றிவிட்டது என்பது அம்பலப்பட்டுள்ளது.  முதலாளித்துவத்தின் சீரழிவை  புரிந்து கொள்ள ஒரு சாளரம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தைகளை பாலியல் ரீதியாகச் சீரழித்த ஒரு மனித மிருகம். ஏனைய பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவன்.

இது அவனது பல தகுதிகளில் ஒன்று. அத்தகைய ஒரு மனிதன் எந்த ஒரு நாகரிக சமூகத்திலும் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டு தண்டனை பெறுவான் என்றுதான் ஒருவர் சிந்திப்பார். ஆனால் உலகத்துக்கு ஜனநாயகம் குறித்து பிரச்சாரம் செய்ய முனையும் அமெரிக்காவில் இத்தகைய கொடூரத் தகுதிகள்தான் இளம் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் ரீதியாகச் சுரண்டும் செயலை உள்ளடக்கிய வணிக உறவுகளில் உலக அளவில் ஒரு புதிய மாடலை உரு வாக்கிட எப்ஸ்டீனுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியது.  அமெரிக்காவில் பணக்கார வெள்ளை இன மனிதர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் ஜனாதி பதிகள், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் வங்கி முத லாளிகள், மேற்கு ஆசியாவின் ஷேக்குகள் மற்றும் இந்தியாவின் தொடர்புகள் என அனைவரின் பெயர்களும் இந்தக் கோப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளன.

இந்தக் கோப்புகளில் குறிப்பிடப்பட்ட வர்கள் அனைவரும் பாலியல் குற்றம் அடிப்படை யிலான “பிணைப்பில்” பங்கேற்றனர் என கூறிவிட இயலாது. எப்ஸ்டீனின் சேவைகள் பலதரப்பட்டவை. அனைத்தும் பாலியல் அடிப்படையிலானது அல்ல. மேல்மட்ட மனிதர்களின் குற்றம் என்னவெனில் அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் எப்ஸ்டீனுடன் நெருக்கமாக இருந்ததால் இத்தகைய “பிணைப்பு” மாடலை சகஜமாக்கியது தான் இவர்களின் பெரிய குற்றம்.  உடந்தையும் சீரழிவும் இந்தக் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலருக்கும் இத்தகைய தளங்களில் ஈடுபட்ட அனுப வப் பகிர்வு உருவானது. இந்தத் தளத்தில் சிறு பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டனர்; தவறாகப் பயன்படுத்தப்பட்டனர். இதில் பங்கேற்பு என்பது பரஸ்பர சார்ந்திருக்கும் தன்மையை உருவாக்கியது. இந்த சார்புத்தன்மையின் பிரிக்க இயலாத இணைப்பு என்னவெனில்  ரகசியம் மற்றும் குற்றங்களில் உடந்தையாக இருந்தது என்பதாகும். இணையத்தில் வெள்ளம் போல பெருக்கெடுத்து வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல்களை மேலோட்ட மாகப் படித்தால் கூட பாலியல் சீரழிவுத்தன்மைக்கான சங்கேத மொழிகளும் பெரு வணிக ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களும் நிதிப் பரிமாற்றங்களும் தென்படுகின்றன. வங்கிகள் எச்சரிக்கை மணியை உதாசீனப்படுத்தியதும் பெரிய இடத்து அரசியல் மற்றும் நிதித் தொடர்புகளுக்கு வாய்ப்பு உருவாக் கப்பட்டதும் வெளிப்படுகின்றன.  இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று பிணைந்துள் ளன. இத்தகைய செயல்களுக்கு எப்ஸ்டீன் தரகராக வும் இவற்றை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துபவ ராகவும் செயல்பட்டுள்ளான்.  இத்தகைய நீசத்தன மான செயல்களை சாத்தியமாக்கிட குழந்தைக ளும் பெண்களும் பாலியல் ரீதியாக பயன்படுத்தப் பட்டனர்.  

அதிகாரம், லாபக்கொள்ளை, தொடர்பு வலைப்பின்னல் உருவாக்கிட கட்டமைக்கப்பட்ட செங்கற்களில் ஒரு தொடர்பு அங்கமாக பெண்களும் குழந்தைகளும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப் பட்டனர். தார்மீக ரீதியாக திவாலாகிப்போன முதலா ளித்துவத்தின் சீரழிவுத்தன்மையை பார்க்கவும் புரிந்து கொள்ளவும் எப்ஸ்டீன் கோப்புகள் ஒரு சாளரத்தை திறந்துள்ளன.  எப்ஸ்டீனுக்கு  புஷ் அரசாங்கத்தின் உதவி குற்றத்தில் பல அடுக்குகள் இருக்கலாம். ஒரு குற்றத்தில் நேரடியாகப் பங்கேற்பதற்கும் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கும் உள்ள  வேறுபாடுகளை சட்டக்கோட்பாடுகள் வேறுபடுத்திப் பார்க்கின்றன. குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதி லும் தீவிரம் அதிகம் அல்லது தீவிரம் குறைவு என பல அடுக்குகள் உள்ளன. ஆனால் 2008க்கு பின்னர் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த எவரும் தனக்கு எப்ஸ்டீனின் குற்றங்கள் பற்றி தெரியாது என சொல்லி தப்பிக்க முடியாது. எப்ஸ்டீனுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு 2005ஆம் ஆண்டு சுமத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பால்ம் கடற்கரையில் உள்ள ஒரு தாய் தனது 14 வயது மகளை எப்ஸ்டீன் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். காவல்துறையின் புலனாய்வு மேலும் ஒரு டஜன் பாதிக்கப்பட்ட சிறு பெண்கள் இருந்ததை வெளிப்படுத்தியது.  இந்தப் புலனாய்வு அடிப்படையில் தீர்மானகர மான நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக அன்றைய ஜனாதிபதி புஷ் அரசாங்கம் எப்ஸ்டீ னின் வலுமிக்க வழக்கறிஞர்களுடன் தண்டனை யற்ற ஒரு சமரசத்தை ஏற்றுக்கொண்டது. குற்றச் சாட்டில் உள்ள வீரியம் குறைந்த குற்றமான “ஒரு பாலியல் தொழிலாளியையும் ஒரு சிறு பெண்ணை யும் தவறான உறவுக்கு அழைத்தது” என்பதை எப்ஸ்டீன் ஏற்றுக்கொண்டான். 13 மாதத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனைக் காலத்திலும் எப்ஸ்டீன் தினசரி காலை தனது அலுவலகத்துக்குச் சென்று இரவில் சிறைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டான். அதற்கு அடுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும், அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், பாதிக்கப் பட்டவர்களின் குமுறலையும் அழுகையையும் புறக்கணித்தனர். எவ்விதத் தண்டனை பயமும் இல்லா மல் எப்ஸ்டீன் தனது மோசமான செயல்களை தொடர்ந்தான்.  பாதிக்கப்பட்டவர்களின்  தொடர் போராட்டம் உயிர்பிழைத்த பாதிக்கப்பட்டவர்களின் தைரியம், இடைவிடாத போராட்டம் காரணமாகத்தான் 2019 ஜூலையில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டான். 2008 ஒப்பந்தத்தில் இடம் பெறாத வேறு குற்றச் சாட்டுகளில் இந்த கைது நடந்தது. விசாரணை தொடங்கும் முன்பே அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரி விக்கப்பட்டது.

2002 முதல் 2019 வரை நடந்த தற்பொ ழுது வெளியிடப்பட்ட மின்னஞ்சல் போக்குவரத்து மற்றும் ஆவணங்கள் இந்தக் குற்றங்களில் தொடர்பு டையவர்கள் குறித்து வெளிப்படுத்துகின்றன. எனினும் பல பெயர்களை கருப்பு மையால் மறைத்ததன் வாயி லாக டொனால்டு டிரம்ப்பின் கீழ் உள்ள நீதித்துறை பல வலுவான பெரிய மனிதர்களின் அடையாளத்தை வெளிவராமல் காப்பாற்றியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் வரலாற்றில் காணப்படாத பெரிய முயற்சிகள் எடுத்து இந்த பெரும் குற்றத்தை மறைக்க முயன்றது என பாதிக்கப்பட்டவர்கள்  திரும்பத் திரும்பக் கூறினர். தமது அமைப்புகளில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்வது அமெரிக்க மக்களின் பொறுப்பு. நியாயமும் தவறுகளுக்கு பொறுப்பேற்பும் தேவை என தைரியத்துடன் போராடும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் இந்தியாவிலிருந்து நமது ஆதரவையும் ஒருமைப்பாடையும் தெரிவிக்கிறோம்.  இந்தியத் தொடர்பு ஆனால் இந்த மோசமான நிகழ்வுகள் அமெரிக்காவுடன் முடியவில்லை. மின்னஞ்சல்களில் இரண்டு இந்தியப் பெயர்கள் வெளிப்பட்டுள்ளன. முதல் பெயர் தொழிலதிபர் அனில் அம்பானியுடையது. அனில் அம்பானி ஆளும் நிர்வாகத்தின் தலைமை க்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிந்த ஒன்று. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக கூட்டாளியாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கப்பட்டது என்பது இதனை நிரூபிக்கிறது. இரண்டாவது பெயர் ஹர்தீப் பூரி.  எப்ஸ்டீனுடனான திரு. அம்பானியின் மின் னஞ்சல்கள் அவர்களிடையே பழக்கம் உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் அது பாலியல் தன்மையுடனும்  உள்ளது மட்டுமல்ல; பெண்களை இழிவுபடுத்தும் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு இந்தியா வின் பிரதமர் பயணத்துக்கு முன்பாக அம்பானி எப்ஸ்டீனுக்கு எழுதினார்:

“ஜரேட்டை (டிரம்ப்பின் மருமகன்) சந்திக்கவும் ஸ்டீவ் பேனானையும் (டிரம்பின் பாதுகாப்பு அலோச கர்) மிக விரைவாகச் சந்திக்கவும் உங்களது உதவியை எனக்கு தருமாறு “தலைமை” விரும்புகிறது. பிரதமர் மே மாதம் வாஷிங்டன் வருகிறார். டிரம்ப்பை சந்திக்க  திட்டம். அதற்கும் உங்களது உதவி தேவை”

திரு.அம்பானி பிரதமரின் பயணம் குறித்து தன்னை அவரின் பிரதிநிதியாக முன்னிறுத்திக் கொண்டார். அமெரிக்க மேல் மட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க எப்ஸ்டீனின் உதவியை நாடியுள்ளார். இது உண்மை எனில் – இதுவரை எவராலும் இது பொய் என மறுக்கப்படவில்லை- இந்த மின்னஞ்சல்கள் சில தீவிரமான நிர்வாகக் கேள்விகளை விளைவிக்கிறது. ஒரு இந்திய முதலாளி பாலியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட நபருடன் தலைமையின் பெயரைப் பயன்படுத்தி ஏன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும்? அவருக்கு அந்த அதிகாரம் தரப்பட்டதா? இது பற்றி ஏதாவது விசாரணை உண்டா? மின்னஞ்சல்களில் உள்ள பிரதமர் தொடர்புகள் குறித்த இந்த செய்திகள் “ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் குப்பைக்கு சமமான அசை போடப்பட்ட கூற்றுகள்” என வெளியுறவு அமைச்சகம் கடந்து செல்ல முயல்கிறது. ஆனால் இங்குள்ள பிரச்சனை எப்ஸ்டீனின் நம்பகத்தன்மை குறித்து அல்ல. இவை அம்பானியின் வார்த்தைகள். அவருக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அல்லது உண்மையிலேயே அவர் அரசாங்கத்தின் சார்பாகத்தான் செயல்பட்டாரா? அரசாங்கம் பதில் தர வேண்டும்.  அமைச்சரின் மோசமான நியாயப்படுத்தும் செயல் திரு. பூரி அவர்கள் தற்போது நரேந்திர மோடி அரசாங்கத்தில் ஒன்றிய அமைச்சர். நாடாளு மன்றத்தில் அவரை பாதுகாக்க அனைத்து உபாயங்க ளையும் அரசாங்கம் பயன்படுத்தியது. எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து விவாதம் முடக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் திரு.பூரி தான் 2014இல் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பொழுது அவரது மோசமான செயல்கள் குறித்து தனக்குத் தெரியாது என தனது தொடர்பை நியாயப் படுத்த முயன்றார். எனினும் அவர் பலமுறை எப்ஸ்டீ னை சந்தித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அது மட்டு மல்லாது கீழ்க்கண்ட அவரது மின்னஞ்சல்களை பாருங்கள்: “அருமை ஜெஃப் – வாழ்த்துக்கள். உங்களது அற்புதமான கிளர்ச்சி தரும் வெளிநாட்டு தீவிலிருந்து எப்பொழுது திரும்புவீர்கள் என தெரிவிக்கவும். உங்களுடன் பேச நான் வர விரும்புகிறேன்” பின்னர் ஒரு மின்னஞ்சலில் கூறுகிறார்: “நீங்கள் திரும்பியவுடன் எனக்கு ஒரு சத்தம் கொடுங்கள். கேளிக்கை அனுபவியுங்கள். இதற்காக மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு ஊக்கம் தேவை இல்லை”  எப்ஸ்டீன் குறித்து தனக்கு தெரியாது என பூரி கூறுவதை இது நிரூபிக்கிறதா? அதே பத்திரிகையாளர் சந்திப்பில் திரு.பூரி எப்ஸ்டீ னின் கொடூரக் குற்றங்களை அற்பப்படுத்தினார். அவை விவாதிக்கும் அளவுக்கு குற்றங்கள் அல்ல என்பதை போல பேசினார். அவர் கூறினார்: “அவர் ஒரு பாலியல் தொழிலாளியையும் சிறு வயதுடைய ஒரு பெண்ணையும் தவறான உறவுக்கு அழைத்ததற்காக தண்டிக்கப்பட்டார். அவ்வளவுதான்!” உண்மையிலேயே அவ்வளவுதானா திரு. பூரி? வயது குறைவான ஒரு பெண்? அதாவது குழந்தை என நீங்கள் சொல்கிறீர்களா? எப்ஸ்டீனுடன் அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க அவன் ஒரு குழந்தை யை பாலியல் இச்சைக்காக அழைத்த ஒரு குற்றம் போது மான காரணம் என நீங்கள் நினைக்கவில்லையா? மக்களுக்கு தடை இல்லை அவர் மேலும் “ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்” தன்னிடம் மற்றவர்கள் பொறாமையாக உள்ளனர் என கூறியதாகவும் அதற்கு ஏதாவது நடந்திருந்தால் மட்டுமே தான் பேசப்போவதாக பதில் சொன்னதாகவும் கூறுகிறார். யார் அந்த பெண் உறுப்பினர்? பெண்களுக்கு எதிரான தவறான கருத்தியலையும் நடவடிக்கைகளையும் ஏதோ நகைச்சுவை போல பேசிய அந்த பெண் உறுப்பினர் யார்? நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவலட்சணம் குறித்து இத்தகைய செயல்கள் வெளிப்படுத்துவது என்ன? திரு.பூரியின் சொந்த வார்த்தைகளிலேயே கூறுவதானால் பாலியல் சுரண்டலுக்கு பேர் போன “அந்த கிளர்ச்சி தரும் தீவில்” நடக்கும் செயல்களில் பங்கேற்றது என்பது ஒரு பொறாமைக்குரிய செயலாகப் பார்க்கப்பட வேண்டும் போலும்.

அவரது வாதம் என்னவெனில் பொறாமையை விளைவிக்கும் அளவுக்கு அவர் எதையும் செய்துவிடவில்லை.  இவை ஏதோ தற்செயலான சிறிய சறுக்கல்கள் அல்ல. பாலியல் வன்முறைக் கலாச்சாரம் வலு வாக்கப்படுவதற்கான உதாரணங்கள் இவை! தண்டனை பெற்ற ஒரு பாலியல் குற்றவாளியுடன் தொடர்பை தெரிந்தே பராமரித்ததையும் அதனை பின்னர் நியாயப்படுத்தும் குணம் கொண்ட ஒருவர் ஒன்றிய கேபினட் அமைச்சராக இருப்பது என்பது இந்தியாவுக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறது. அவர் பதவியில் தொடர்வதற்கு  பிரதமரின் அங்கீகாரம் உள்ளதா? எப்ஸ்டீன் கோப்பு களை விவாதிக்க நாடாளுமன்றம் அனுமதிக்கப்பட வில்லை. அத்தகைய எந்தத் தடையும் இந்திய மக்களுக்கு இல்லை. நன்றி: தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் தமிழில்: அ.அன்வர் உசேன்