அமெரிக்காவின் வரி தாக்குதல், யுத்த வெறிக்கு எதிராக வெகுண்டெழுவோம் - கே திருச்செல்வன்
அமெரிக்கா பிற நாடுகளின் அரசியல், உள்விவகாரங்களில் தலையிடுவது, பொருளாதார ரீதியான ஆதிக்கம் செலுத்துவது, தனது கட்டளைகளுக்கு இணங்க மறுக்கும் நாடுகளை பொருளாதார தடை என்ற பெயரில் நிலைகுலையச் செய்வது என தனது ஏகாதிபத்திய அதிகாரத்தை செலுத்தி வருகிறது.
யுத்தங்களுக்குப் பின்னால்
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பல நாடு களுக்கிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் யுத்தங்களுக்குப் பின்னால் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் கை உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம்: இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் யுத்தத்தில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர். வீடின்றி, உணவின்றி பட்டினியால் மக்கள் மடிந்து போகும் துயரக் காட்சிகளை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் குழுவால் கடத்தப்பட்ட தனது நாட்டு மக்களை மீட்டெடுக்கவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறும் இஸ்ரேல், குடியிருப்பு பகுதிகளையும், மருத்துவமனைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இஸ்ரேலின் உண்மையான இலக்கு காசா உள்ளிட்ட மேற்குக் கரைப் பகுதிகளை முழுமை யாக தன்வசமாக்குவதே. இது தான் இந்த இனப் படுகொலை தொடர்வதற்கான காரணம். இந்த யுத்தக் களத்தில் அமெரிக்கா நேரடியா கவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டுமல்ல, தாக்கு தலை ஊக்குவிக்க ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு களைக் கொடுத்து வருகிறது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்: இஸ்ரேல் பாலஸ் தீனத்தின் மீதான தாக்குதலை நீட்டிக்கொண்டே, அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம்சாட்டி ஈரானையும் தாக்கியது. ஈரான் கொடுத்த பதிலடி யால் இஸ்ரேலின் பல பகுதிகள் நிர்மூலமாக்கப் பட்டன. இஸ்ரேலுக்குத் துணையாக அமெரிக்கா வும் தன் பங்குக்கு ஈரான் மீது தாக்குதலை நடத்தி யது. எனினும் ஈரானின் தொடர் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் இஸ்ரேல் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேவைப்பட்டால் அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது.
ரஷ்யா மீதான தாக்குதல்
இதே காலகட்டத்தில் உக்ரைன் நேட்டோவில் அங்கம் வகிக்க எடுத்த முயற்சிக்கு எதிராக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இரு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் அமெரிக்கா அப்பட்டமாக உக்ரைனை ஆதரித்து வருகிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்து விருந் தோம்பல் செய்தது. ரஷ்யாவுக்கு எதிராக பல லட்சம் கோடி டாலர் நிதி ஒதுக்கியும், ராணுவ ஆயுதங்க ளை வழங்கியும் யுத்தத்தைத் தொடரச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்ட டொனால்டு டிரம்ப், உக்ரைன் நாட்டில் உள்ள கனிம வளத்தைக் குறிவைத்தே ரஷ்யாவுக்கு எதி ராக பொருளாதாரத் தடை விதித்து நெருக்கடி கொடு த்தார். இந்த நெருக்கடியை ரஷ்யா எதிர்கொண்டு தனது வர்த்தகத்தைத் தொடரத்தான் செய்கி றது. இந்தத் தடையால் ஐரோப்பிய நாடுகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அதே வேளையில் இந்தியா தனது தேவைக்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துகொண்டு தான் உள்ளது.
வரி யுத்தம்
இத்தகைய பின்னணியில் வெளிநாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தால் அமெரிக்கா சுரண்டப்படு வதாகவும், அத்தகைய நாடுகளுக்கு எதிராக வரி யுத்தத்தையும் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பால் வர்த்தகப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஆயுதமாக வரி யுத்தத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கையில் எடுத்துள்ளது. இதன் விளைவாக பிற நாடுகளிலிருந்து அமெ ரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவிகிதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டது. அதே வேளையில் சீனாவுக்கு 54 சதவிகிதம், வியட் நாமுக்கு 45 சதவிகிதம், லாவோசுக்கு 48 சதவிகி தம், இலங்கைக்கு 48 சதவிகிதம், வங்கதேசத்தி ற்கு 37 சதவிகிதம், தாய்லாந்துக்கு 36 சதவிகிதம், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் என பல நாடுகளு க்கு இறக்குமதி கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தியாவின் மீதான தாக்குதல்
இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட வேண்டுமென்று அமெ ரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டலைப் பொருட் படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமி ருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரு கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாகக் கூடுதல் வரி விதித்து தனது ஏகாதிபத்திய அடக்கு முறையை ஏவியுள்ளார். இப்போதாவது மோடி அரசுக்குத் தைரியம் வந்துள்ளதே என்று பார்த்தால், அந்தத் தைரியம் நாட்டையும், நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு வந்ததல்ல. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் கணிசமாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் செல்கிறது. அங்கு கச்சா எண்ணெய்யைத் தரம் பிரித்து, பெட்ரோல், டீசல் என சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இந்தக் கச்சா எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் ஏற்றுமதியில் மக்களுக்கு ஆதாயம் இல்லை. அம்பானிக்குத்தான் ஆதாயம் கிடைக்கிறது.
கடும் விளைவுகள்
அமெரிக்காவின் இத்தகைய அதீத வரி விதிப்பி னால் பின்னலாடை, ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி மற்றும் கடல் உணவுகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இலட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்படும் என்பது மட்டுமல்ல, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தோராயமாக ஒரு சதவிகிதம் குறையும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில்: தமிழ்நாட்டில் மேற்கு மாவட் டங்களில் பின்னலாடை, ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளித் தொழில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும். வடக்கு மாவட்டங்களில் தோல் மற்றும் தோல் பொருட்கள் தொழிலும் நெருக்க டியில் சிக்கித் திணறும் நிலை ஏற்படும். அமெரிக்காவின் வரி யுத்தத்தின் விளைவாக உற்பத்தியான பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடையும் நிலையும், இந்த நிலையில் மீண்டும் உற்பத்தி செய்ய முடியாத நிலையும் ஏற் படும். இதனால் இலட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வேலையிழந்து ஊதியமிழந்து வாழ்வாதா ரப் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
மோடி அரசின் மௌனம்
இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் ஏற்பட்ட போது, “என் தலையீட்டால் தான் தாக்குதல் நிறுத்தப் பட்டது” என்று வெளிப்படையாகவே டிரம்ப் பேசி னார். இப்போதும் அதையே சொல்கிறார். அவரது கருத்தை மறுத்தோ, ஆதரித்தோ இதுநாள் வரை பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. “டிரம்ப் எனது நண்பர்” என கூறும் மோடி, தன் நண்பன் வரி விதிப்பு என்ற பெயரில் நாட்டின் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தி வரும் நிலை யிலும் டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. நாடும், நாட்டு மக்களும் பெரும் கவலைய டைந்துள்ள நேரத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் தொழில்களை, வர்த்தகத்தை, மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பாஜக மோடி அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார ஆதிக்கம், ராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மேலோங்கச் செய்வோம்.