வெண்கொடி ஏந்துவோம் சுயமரியாதையுடன் வாழ்வோம்
நெருப்பில் படுத்து தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும், ஆனால் வறுமை யில் பசித்த வயிற்றோடு படுத்து உறங்கு வது இயலாத ஒன்றாகும் எனத் திருவள்ளுவர் கூறி யுள்ளார். படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று அனைத்துப் பெண்களும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட வேண்டும். குடும்பப் பொறுப்பு களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனக்கான தேவைகளை தாங்களே ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கான உரிமை இதன் மூலம்தான் கிடைக்கும். ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்றால் போதும் என்ற நிலை மாறி, ஆணும் பெண்ணும் இணைந்து வேலை பார்த்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை தற்போது வந்துள்ளது. எதற்கும் உதவாத கணவனாக இருந்தால் குழந்தைகளைப் பாதுகாத்து படிக்க வைத்து ஆளாக்கிட பெண் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. இப்படி எண்ணற்ற கனவுகளும் தேவைக ளும் பெண்கள் வேலைக்குச் செல்வதால் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
பெண்கள் வேலைக்குச் செல்வது ஏன் முக்கியம்?
அனைத்து பெண்களும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுதல், குடும்ப பொறுப்புகளில் பங்கு கொள்ளுதல், தனக்கான தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் உண்மை யான உரிமை பெற முடியும். பிறரை சார்ந்து நிற்காமல் தானாகவே வாழ முடியும். தாய் வழிச் சமூகமாக இருந்த போது உணவைச் சேகரிப்பது, பகிர்ந்து கொடுப்பது, பாதுகாப்பது என அனைத்துப் பணிகளையும் பெண்களே மேற் கொண்டுள்ளார்கள். சொத்துடைமை சமூகமாக மாறுகிற போது வேலை என்பது புருஷ லட்சணம், மனைவியின் கடமை குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அவர்களைப் பாதுகாப்பதும் குடும் பத்தில் உள்ள மூத்தவர்களைப் பாதுகாப்பதும் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும் தான் என ஏராளமான பொறுப்புகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டது. முதலாளித்துவ சமூகம் தொழிற்சாலைகளைத் துவங்கி உற்பத்திகளைத் துவங்குகிற போது பெண்க ளும் ஓரளவுக்கு வெளியில் சென்று வேலை பார்க்கத் துவங்குகிற நிலைமை ஏற்பட்டது. அதுவே பெண்க ளின் உரிமைக்கான முதல் படியாகும். இப்படி வேலை க்குச் செல்வதற்கு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி பெண்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு கட்டுமான தொழிலில் இருந்து விமானம் ஓட்டுவது வரை பெண்கள் முன்னேறியுள்ளார்கள் என்பது பாராட்டத்தக்கது, மகிழ்ச்சிகரமானது.
அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்
ஆனால் இன்று இந்தியப் பெண்கள் வேலைக்கு செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி சர்வே புள்ளி விவரங்கள் வெளியிட்டி ருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு 43% பெண்கள் வேலைக்கு சென்றார்கள். தற்போது இது 27%ஆக குறைந்துள்ளது. நேபாளம் 80%, சீனா 64%, அமெரிக்கா 54%, இலங்கை 36% ஆக, பெண்கள் வேலைக்குச் செல்லும் விகிதம் உள்ளது. இந்த நாடுகளை விட இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை பின்தங்கி யுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் ஆணாதிக்கம், கலாச்சாரம், மகப்பேறு, பேறுகால விடுப்புக்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் நின்று விடுவது, இவர்களைத் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ளவும் தயங்குவது, பாலியல் தொல்லைகள் காரணமாக வேலைக்குச் செல்வதில் தயக்கம், குழந்தைகளுக் காகவே சிலர் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது போன்ற காரணங்களும் ஒரு பகுதியாகச் சொல் லப்படுகிறது.
தொழிற்சாலைகளில் பெண்களின் நிலை
சென்னையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பாலி யல் சமத்துவம் வேலை நேரத்திலும் இல்லை, சம்ப ளத்திலும் இல்லை. சில மருந்து கம்பெனிகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 16-20 வயது பெண்கள் பொறுமையாக இருப்பார்கள், சொன்ன வேலையைச் செய்வார்கள், கொடுத்த கூலியை வாங்கிக் கொள் வார்கள், எதிர்த்துக் கேட்க மாட்டார்கள்; எனவே இந்தப் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சில தனியார் நிறுவனங்கள் கூறுவது அதிர்ச்சி யளிக்கிறது. சில நிறுவனங்களில் திருமணமான பெண்களை வேலைக்கு சேர்க்க மாட்டார்கள். திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களுக்கு உடல் பலம் இருக் காது, அவர்களால் நிறுவனத்திற்கு ஆதாயம் இருக்காது என்ற எண்ணம் தனியார் நிறுவனங்க ளுக்கு உண்டு. ரசாயனங்களைத் தயாரிக்கும் மருந்துக் கம்பெனிகள், பீடி, தீப்பெட்டி, பட்டாசு, பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் இடங்களில் பணி செய்யும் பெண்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படு கிறது. மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் வரும் போது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். திருப்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் ஆடை கள் தயாரிக்கும் இடங்களில் சாயப்பட்டறைகளில் பணியாற்றும் பெண்களின் நிலை மிகவும் மோச மானதாக உள்ளது. தனியார் பெரிய ஜவுளிக்கடை கள், மால்களில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே பணி செய்ய வேண்டியுள்ளது. இங்கு இளம் பெண்கள் 90% ஆவர். அலைபேசியைப் பயன்படுத்த உரிமை கிடையாது. கழிப்பறைக்குச் செல்வதும் கண்கா ணிக்கப்படுகிறது. சக ஆண்கள், மேனேஜர்களால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
விவசாயத் தொழிலாளர் பெண்கள்
விவசாயத்தில் பணிபுரியும் பெண்களின் நிலையும் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 15-59 வயது பெண்கள் 44% விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர். இது தற்போது 25%ஆக குறைந்துள்ளது. கிராமங்களில் படித்த மற்றும் படிக்காத இளம் பெண்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 60% பெண் விவசாயத் தொழிலாளர்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் 75% பயனாளிகள் பெண் தொழி லாளர்கள். இதனால் குடும்ப வருமானம், குழந்தை களின் கல்வி, சிறு சேமிப்பு போன்ற பல வழிகளில் குடும்பங்களுக்கு ஓரளவு பலன் ஏற்பட்டுள்ளது. ஆனால் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டத்தின் விதிமுறைகள் எந்த ஊராட்சிகளிலும் தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. குறைந்தபட்சம் 20-80 நாட்கள் வரை மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் கூறி யுள்ளபடி வேலைத்தளங்களில் முதலுதவி பெட்டி, பாது காக்கப்பட்ட குடிநீர், நிழற்கொட்டகை, குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்படவில்லை.
தேவையான மாற்றங்கள்
பெண்கள் நிர்ப்பந்தம் இல்லாமல் தைரியமாகவும் சுதந்திரமாகவும் தன்மானத்துடனும் சம ஊதியத்து டனும் பாலியல் துன்புறுத்தல் அச்சமின்றி வேலைக்குச் செல்வதற்கான உத்தரவாதத்தை அரசும், நிறுவ னங்களும், சட்டங்களும் உறுதி செய்திட வேண்டும். 100 நாள் வேலையைப் பாதுகாப்பதற்கான உத்தர வாதம் ஏற்படுத்த வேண்டும். வேலையை 200 நாளாக அதிகப்படுத்தி கூலி 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். ஒன்றுபட்ட போராட்டம் விவசாயத் தொழிலாளர் பெண்களை, முறை சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை, பாது காப்பற்ற பணிகளில் பணியாற்றும் பெண்களை, வேலையில்லாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பெண்களைப் பாதுகாத்திட வேலை உத்தர வாதப்படுத்தப்படுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியது முக்கியமான தேவை. ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று துவங்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 17ஆவது மாநில மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். மாநில மாநாட்டு பேரணி- பொதுக்கூட்டத்தில் சிறப்பிப்பதற்கு அனைவரும் ஓரணியில் கூடி வாரீர்!