articles

img

சமூக மாற்றத்திற்கு வித்திட சங்கமிப்போம்! - ஜி. பிரமிளா

சமூக மாற்றத்திற்கு வித்திட சங்கமிப்போம்!

தனது குடும்பத்திற்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்க ளிப்பு செய்து வரும் பெண்கள், தமக்குரிய அங்கீ காரத்தை பெற முடியாமல் பல கட்டங்களில் பாகு பாடுகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர். காலம் காலமாக பெண்கள் குடும்பங்களிலும் சமூகங்களிலும் அவர்களு டைய தனிப்பட்ட திறமைகள் நிராகரிக்கப்பட்டு நான்கு சுவர்களுக்குள் தங்களை முடக்கிக் கொண்டு சலிப்பூட்டும் வேலைகளில் கொத்தடி மைகளாக மூழ்கடித்துக் கொண்டுள்ளனர். சட்டங்கள் இருந்தாலும்... 1946ல் உலகப் பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில், சமூகம் மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய கமிஷன் அமைக்கப்பட்டு மனிதராகப் பிறந்த அனைவரும் சமம் என்கிற சர்வதேச அறிவிப்பு 1948ல் வெளியானது. 1949ல் பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. 1951ல் பெண்க ளுக்கான சமத்துவத்தை உறுதி செய்து சதி தடுப்பு  சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பாலியல் வணிகம் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டன. 1952ல் பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது. இவையனைத்தும் இருந்தாலும், முத லாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூகக் கட்ட மைப்பில் அரசியல் பொருளாதார காரணிகள், சட்டம், சமூக கட்டுப்பாடுகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், மத ரீதியான பழக்க வழக்கங்கள், வாக்குரிமை, கல்வி வேலைகளில் வாய்ப்புகள், ஊதியம், சொத்துரிமை என அனைத்திலும் பாகுபாடுகளையும் புறக்கணிப்புகளையும் ஒடுக்குமுறைகளையும் பெண்கள் இன்றும் அனுபவித்து வருகின்றனர். இணையதள வன்முறைகள் இன்றைய காலச் சூழலில் தகவல் தொழில்நுட்பங்கள் நமது அன்றாட வாழ்க்கை யில் பிரிக்க முடியாத அம்சங்களாக மாறி யுள்ளன. 51 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 38% பெண்கள் இணையதளம் மூலம் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. டிஜிட்டல் ரீதியான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எல்லா சமூக ஊடகங்களின் மூலமாகவும் வன்முறைகள் நடக்கின்றன. தமிழகத்தில் சைபர் குற்றம் பாலியல் குற்றமாக குண்டர் சட்டத்தின் கீழ் வருகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சைபர் உலகில் பின்தொட ரப்பட்டு கேலி செய்யும் ‘டிஜிட்டல் ஸ்டாக்கிங்’ குற்ற ங்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன. இணையவழி வன்முறைகள் பெரும்பா லும் நேரடியான வன்முறைகளுக்கு வித்திடு கின்றன. இணையவழி வன்முறை மூலம் வன்முறை நிகழ்த்துபவர் அருகிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வன்முறை மற்றும் பாலியல் பற்றிய தகவல்கள் மிக விரை வாக இணையதளத்தில் பகிரப்பட்டு நீண்ட நாட்கள் உலா வரக்கூடிய ஆபத்தும் உள்ளது. பாலினப் பாகுபாடும்  சமூகத் தடைகளும் சட்டங்கள் பல இருந்தாலும் கல்வி, வேலை வாய்ப்பு, ஊதிய பாகுபாடு என பல தடைகள் இன்றும் நீடிக்கின்றன. ஒரே வேலை செய்தாலும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் சில துறைகளில் இன்றும் வழங்கப்படுகிறது. முறைசாரா துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வேலை உறுதி இல்லை, சமூகப் பாதுகாப்பு இல்லை, சட்டப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவி வருகிறது. சாதியும் மத அடிப்படைவாதமும் எப்போ தும் பெண்களை கலாச்சார ரீதியாக ஒடுக்கு கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் 11 ஆண்டு கால ஆட்சியில் மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெய ரால் அட்டூழியங் களுக்கு மிகப்பெரிய தைரியத்தை அளித் துள்ளது. மத அடிப்படைவாதம் பெண் அடிமைத்தன த்தையும் ஆணாதிக் கத்தையும் கற்பிக் கிறது. கருக்கொலை, சிசுக்கொலை, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, வரதட்ச ணை மரணங்கள், குழந்தை திருமணங்கள், சொத்து மற்றும் கல்வி மறுப்பு, உழைப்புச் சுரண்டல் என பல வன்முறைகள் பெண்கள் மீது அளவில்லாமல் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. எல்லா மதமும் பெண்களுக்கு எதி ரான ஒடுக்குமுறைகளை மட்டுமே பரிந்துரைக் கின்றன. பண்பாட்டின் பெயரில் அடிமைத்தனம் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இன்றைக்கும் இளம் பெண்கள் பார்க்கப்படுகின்றனர். தன் கண்ணியத்தை இழந்தாலும், சுயமரி யாதையை இழந்தாலும் குடும்ப மானத்தை யும் கௌரவத்தையும் பாதுகாத்திட வற்புறுத்தப் படுகின்றனர். தன் விருப்பத்திற்கு கல்வி, உடை  வேலை என எதையும் தேர்வு செய்யும் உரிமை பெரும்பான்மையான பெண்களுக்கு இல்லை. பெண் பிள்ளைகள் திருமணம் ஆனதும் பிறந்த வீட்டைப் பிரிந்து கணவரது குடும்பத்து டன் இணைந்து வாழ்வதுதான் பாரம்பரியம் என கருதப்படுகிறது. திருமணத்தின்போது பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வற்புறுத்தப்படுகிறது. பெண்களை சுமையாக கருதும் எண்ணம் காரணமாக பெண் பிள்ளை களை விட ஆண் பிள்ளைகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கப்படுகிறது. இளம் பெண்களின் மனஅழுத்தம் சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக இளம் பெண்கள் மனச்சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை, தற்கொலை முயற்சி போன்றவற்றுக்கு அதிக அளவில் உள்ளாகிறார்கள். தமிழ்நாட்டில் இளம் பெண் களின் தற்கொலை விகிதம் அதிகம் பதிவாகி வருவது கவலைக்குரியதாகும்.  பணிக்குச் செல்லும் பெண்கள் நேர மின்மை, குடும்பச் சூழல் போன்ற காரணங் களால் உணவைத் தவிர்க்கும் பழக்கம் உள்ளதால் அதிக ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். சொந்த ஆரோக்கியம் குறித்து பெண்கள் கவலைப்பட இயலவில்லை; ஆண் களும் கவலைப்படுவதில்லை; அரசுகளும் கவலைப்படுவதில்லை. கல்வியும்  பொருளாதாரமும் போதுமா? பொதுவாக பெண்களின் முன்னேற்றம் கல்வி, பொருளாதாரத்தை வைத்தே அளவீடு செய்யப்படுகிறது. தற்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் கணிசமான வளர்ச்சியைப் பெண்கள் கண்டிருந்தாலும் அது  மட்டுமே முன்னேற்றம் என்று கூறிவிட முடியுமா? கல்வியும் பொருளாதாரமும் சமத்துவத்தை உறுதிப்படுத்திவிட முடியுமா?  கல்வி, சுயசார்பு நிறைந்த எத்தனையோ பெண்கள் கொடூரமாக பாலியல் வன்மு றைக்கு இக்காலத்திலேயே உட்படுத்தப் பட்டிருக்கிறார்களே? எனவே சமூக மாற்றம் என்பதுதான் அவசியம். குடும்ப சுமையை குறைக்க பெண்கள் பொருள் ஈட்ட வேலை களுக்குச் செல்வது அதிகரித்துவிட்டது. ஆனால் பெண்களின் குடும்ப சுமையை எத்தனை ஆண்கள் பங்கிட்டுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்? காதலை மறுத்தால் கொலை, ஏற்றுக் கொண்டால் சாதி ஆணவக் கொலை, திருமணமானால் குடும்ப வன்முறை, பாலியல் சீண்டல்கள், பாலினம் கண்டறிந்து கொலை செய்வது என்று வன்முறைகள் எதுவும் குறைய வில்லை. மாற்றத்திற்கான வழி தேசம் பல ஆண்டுகளுக்கு முன்னால் விட்டொழித்த பல ஆணாதிக்க கருத்தியல்களை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் புத்துயிர் ஊட்டும் வேலையை பத்தாண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது. “ஆண்கள் மட்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று சொன்ன ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மனுநீதியின் பெண் அடிமைத்தனத்தை இந்தியாவில் பண்பாடாக மாற்றிட முயற்சித்து வருகிறார். சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால் “ஒரு சமுதாயத்தில் சாதனை படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டும் என்றால் அந்த சமுதாயம் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்” என்றார். அப்படிப்பட்ட சமூக மாற்றத்தை நோக்கியே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடி வருகிறது. இரவை மட்டுமல்ல, விண்ணையும் மண்ணையும், ஏன் உலகத்தையே நம தாக்கிக் கொள்ளும் திறமை நமக்குள் இருக்கிறது. பன்முகத்திறன் கொண்ட லட்சம் போராளிகளின் மாதர் சங்கத் திருவிழா செப்டம்பர் மாதம் 24 முதல் 27ஆம் தேதி வரை மார்த்தாண்டத்தில் நடைபெற இருக்கிறது. பெண்கள் மீதான வகுப்புவாத வன்முறை களை, குடும்ப - பாலியல் வன்முறைகளை, இணையதள குற்றங்களை, குழந்தை திரு மணங்களை முழுமையாக வேரறுக்க சங்க மிப்போம், போராடுவோம், வெற்றி பெறுவோம்!