articles

img

கங்காரு - பெரணமல்லூர் சேகரன்

கங்காரு

தத்தித் தாவும் கங்காரு பாரு விசித்திரப் பையில் குட்டி கூறு  கத்துகடல் சூழ் ஆஸ்திரேலியா என்னும் முத்தெனும் நாட்டின் தேசியச் சின்னம்

முன்னங் கால்கள் இரண்டுடன் வாலும் முன்னால் தாவ உறுதி கொண்டவை உடலைச் சமநிலை வைக்க உதவும் திடமாய் உழைத்து உண்ணும் அதுவும்

காட்டு நாய்கள் மனிதர்கள் தம்மை கங்காரு எதிரியாய் பார்க்கும் உண்மை முன்னோக்கி வேகமாய் தாவ வல்லது பின்னோக்கி நடக்க கங்காரு இயலாதது 

இரவில் உணவு தேடிச் செல்லும் பகலில் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காட்டில் வெப்பம் வறட்சி பஞ்சம் கோட்டில் அச்சம் கங்காரு தஞ்சம் 

அந்நிய நாட்டு விலங்கு நோக்கும் தன்னுடன் பையில் சேயாய் காக்கும்  பெண்ணின கங்காரு விலங்கின் சிறப்பு  கண்ணெனப் போற்றிக் காத்தல் பொறுப்பு