articles

வெறும் 5 % பணக்காரர்களிடம் 100 கோடி ஏக்கர் நிலம் - பி.வெங்கட்

வெறும் 5 % பணக்காரர்களிடம் 100 கோடி ஏக்கர் நிலம்

இன்றைக்கு நாம் வாழ்வதற்கே எந்த அளவிற்கு போராட வேண்டியுள்ளது என்பதை அறிவீர்கள். ஒன்றிய அரசு மக்கள் மீது சுமத்தும் வரிகள், இந்தியாவின் மீதான தாக்குதல்கள், தமிழ்நாட்டை வஞ்சிக் கும் செயல்கள் - இவற்றை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.  சம்பள ஏற்றத்தாழ்வு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உட்பட நாட்டின் பல பகுதிகளில் உழைப்பாளி பெண்க ளுக்கு சம்பளம் 300 ரூபாய். ஆனால் கேர ளாவில் உழைப்பாளி பெண்களுக்கு 800 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேரளாவில் தினசரி சம்பளம் 800 முதல் 1000 வரை சம்பாதிக் கிறார்கள். வேறு எந்த மந்திரமும் மாயமும் இல்லை! அது சிவப்பு கொடியின் சக்தியால், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால், கிராமப்புற மக்களை உயர்த்தும் திட்டங்கள் இருப்பதால் நடக்கிறது. இன்றைய விலைவாசியின் அடிப்படையில் ஒன்றிய அரசு நிச்சயமாக குறைந்தபட்ச கூலியை தினமும் 600 ரூபாயாக மாற்ற வேண்டும். அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் கேட்க வேண்டும் - “குறைந்தபட்ச ஊதியம் 600 வழங்க என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்?” என்று. மீன் கதை - இந்தியாவின் நிலவரம் ஒரு கார்ட்டூனில் பார்த்த கதையை உங்களி டம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு இளைஞன் வேலைக்குப் போய் 500 ரூபாய் சம்பாதித்து 400 ரூபாய்க்கு மீன் வாங்குகிறார். மனைவி திட்டுகிறார் - “அரிசி வாங்க காசு இல்லை, இதை எதற்கு வாங்கி வந்தீங்க? திரும்பக் கொடுத்து விடுங்கள்.” அவர் மீனை திரும்ப கடையில் கொடுத்து விடுகிறார். மற்றொரு நபர் அந்த மீனை வாங்கி வீட்டுக்குப் போகிறார். “பாதி குழம்பு வைக்கவும், பாதியை பொரித்து வைக்கவும்” என்கிறார். மனைவி சொல்கிறார் - “இங்கு சமைக்க கேஸ் இல்லை, முதலில் சிலிண்டர் வாங்கி வாருங்கள்.” மூன்றாவது ஒருவர் மீன் வாங்குகிறார். மனைவி சொல்கிறார் - “சிலிண்டரும் இல்லை, எண்ணெய்யும் இல்லை, எப்படி நான் சமைப்பது? மீனை திரும்பக் கொடுத்து விடுங்கள்.” பின்னர் அந்த மீனை தண்ணீரில் விட்டு விட்டார். அந்த மீன் வெளியே வந்து சில அரசியல் தலைவர்களின் பெயர் சொல்லி, அவர்கள் வாழ்க என்று சத்தம் போட்டது. அவர் கேட்டார் - “என்ன மீனே! நான் உன்னை சமைக்காமல் தண்ணீரில் விட்டேன். நீ இவர்களை ஏன் சொல்கிறாய்? என்னை அல்லவா சொல்ல வேண்டும்?” மீன் பதில் சொன்னது - “நான் எப்படி உன்னைச் சொல்வேன்? எதார்த்தத்தில் என்ன நடந்தது? முதலில் வாங்கிய வீட்டில் அரிசி இல்லாததால் நான் தப்பித்தேன். இரண்டா வது வீட்டில் கேஸ் இல்லாததால் தப்பித்தேன். மூன்றாவது உங்கள் வீட்டில் கேஸ், எண்ணெய் இல்லாததால் தப்பித்தேன். இதற்கு காரணம் யார்? விலைவாசி உயர்வுக்குக் காரணமான வர்களுக்குத்தானே நான் நன்றி, வாழ்த்து சொல்ல வேண்டும்?” இதுதான் உண்மை. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மோடியின் பொய்யான வளர்ச்சி மோடி சொல்கிறார் - “நம் நாடு உலகில் பெரும் பொருளாதார நாடாக மாறப்போகிறது.” அவரிடம் நாம் கேட்கிறோம் - “கிராமங்களுக்கு வந்து பாருங்கள். சமூகப் பாதுகாப்பு எப்படி இருக்கிறது, விலைவாசி எப்படி இருக்கிறது, மக்கள் எப்படி வாழ்கிறார் கள், வறுமை எப்படித் தாண்டவம் ஆடுகிறது?” இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் இவர்கள்தான். 100 நாள் வேலைத் திட்டத்தின் நிலை 100 நாள் வேலையில் 336 ரூபாய் கேட்டால், கையில் 150-210 ரூபாய்தான் கிடைக்கிறது. மோடி என்ன செய்கிறார்? 100 நாள் வேலை அட்டையை ஆதாரோடு, போட்டோவோடு இணைக்கச் சொல்கிறார். உங்களின் அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் இணைக்கச் சொல்கிறார். ஆனால் சம்பளத்தை மட்டும் நிறுத்தி வைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார், போட்டோ இணைப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு தடவை அட்டெண்டன்ஸ் போட வேண்டும் - காலையில், மாலையில். அப்படி இல்லையென்றால் பாதி சம்பளம்தான். ஆனால் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு அட்டெண்டன்ஸ் இல்லை.  நில உரிமைப் பிரச்சனை 40 கோடி ஹெக்டேர் (100 கோடி ஏக்கர்) நிலத்தை வெறும் 5 சதவீத பணக்காரர்கள் மட்டுமே கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார்? கிராமங்களிலும் நகரங்க ளிலும் இருக்கும் வசதி படைத்தவர் கள் - டாக்டர்கள், அரசியல்வாதிகள், முக்கி யஸ்தர்கள், பிரமுகர்கள், ஆதிக்கவாதிகள். இவர்கள்தான் இதை வைத்து அனுபவிக் கிறார்கள். கடந்த 14ஆம் தேதி திண்டுக்கல்லில் விவசா யிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மாபெரும் நிலவுரிமை மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் அரசு ஏழை எளிய சாதாரண மக்களுக்கு நிலவிநியோகம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம். உபரி நிலங்கள், அரசு நிலங்கள், தரிசு வைத்து அனு பவிக்கும் நிலங்கள் - இவையெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். செப்டம்பர் 30 - போராட்ட நாள் நிலமற்றவர்களுக்கு நிலம், உழுபவருக்கு நிலம் சொந்தம், குடிமனைப் பட்டா, கைவசம் உள்ள நிலத்திற்குப் பட்டா வழங்க வேண்டும்; அந்த உரிமையின் அடிப்படையில் அந்த நிலங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் நாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்னாலும் மக்களைத் திரட்டி நாம் போராட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் இன்றைக்கு சிவப்புக் கொடியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் சிவப்புக் கொடியை நோக்கித் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நாட்டின் எல்லாவிதமான உழைப்பாளி மக்களை யும் பாதுகாக்கும் வர்க்க அடிப்படையிலானது சிவப்பு கொடி.நாம் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு மறுபக்கத்தில் பெரும் பணக்கார வர்க்கம் இருக்கிறது. அந்தப் பணக்கார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் தொழி லாளர் வர்க்கப் பார்வையுடன் நாம் விவசாயத் தொழிலாளர்களை மட்டுமல்ல, கிராமங்களில் இருக்கும் உழைப்பாளிகள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்களையும் திரட்டி அந்த ஆதிக்க சக்திக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த வேண்டும். ஹிட்லர் உலகம் முழுவதையும் பிடித்து ஆளும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த ஹிட்லரை சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின் தூக்கி எறிந்தார். அதேபோல் நரேந்திர மோடியை இந்தியாவில் இந்தச் சிவப்புக் கொடி தூக்கி எறியும். கிராமங்களுக்குச் சென்று மக்களைத் திரட்டி, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட் டங்களை நடத்துவோம். செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் மாபெரும் நிலவுரிமை இயக் கத்துக்குத் தயாராகுங்கள். மதுரையில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க பேரவையில் ஆற்றிய உரையிலிருந்து... தொகுப்பு : பா.ரணதிவே