ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல - தற்பாதுகாப்புக்காக ஆயுதம் எடுத்தவர்கள்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அரசியல் மட்டுமின்றி அனைத்துத் தளங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, ஆதிக்கம் உள்ளது. ஐ.நா.வில் 143 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீ கரித்தபோதும், இஸ்ரேல் ஆணவத்தோடு ஏற்க மறுக்கிறது என்றால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளின் ஆதரவுதான் காரணம். ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த அமைப்பு. ஆயுதம் மீது நம்பிக்கை கொண்ட போர் வெறியர்கள், பயங்கரவாதிகள் அல்ல. தற்பாதுகாப்புக்காக ஆயுதம் எடுத்துள்ள ஹமாசை பயங்கரவாத இயக்கமாகச் சித்தரித்து இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்துகிறது. இதற்கெதிராகப் பாலஸ்தீனம் பக்கம் இந்தியா நிற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.