தோழர் ஆர் என் கே எனும் வாழும் வரலாறு
பொதுவுடமை இயக் கத்தின் அடையாள மாக விளங்கும் தோழர் ஆர். நல்லகண்ணு குறித்து தி இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டுள்ள அருமையான வர லாற்று ஆய்வு நூல் இது. இளமையில் போராளி தோழர் நல்லகண்ணுவின் இளம் வயது போராட்டங்களையும், அவர் அனுபவித்த சிறைக் கொடுமைக ளையும் அறியும் அனைவருக்கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உருவாகும். குறிப்பாக அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய வரலாற்றைப் படிக்கும் இளைய தலைமுறையினர், மக்களுக்காகத் தொண்டு செய்ய இப்படியும் ஒரு உறுதிமிக்க தலை வர் இருக்க முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்துபோவார்கள். அரசியல் கொள்கைகளைக் கடந்த தலைமை அரசியல் கொள்கை மாறுபாடு கள் இருந்தாலும், சாமானிய மக்க ளைப் பாதிக்கும் பொதுப் பிரச்சனை களில் கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதற்கு தோழர் நல்லகண்ணு சிறந்த முன்னு தாரணம். அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் தமிழ்நாட்டைக் கட்டமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்தவர். தியாக வாழ்வு வாழ்க்கை நெடுகிலும் நாட்டுப் பற்று மட்டுமே அவரிடம் நிறைந்து வழிந்ததே தவிர, சுயநலம் என்பது அறவே இல்லை. ஏழரை ஆண்டுகா லம் சிறையில் கடுமையான சித்திர வதைகளைச் சகித்தவர். மக்க ளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட வாழ்வை மக்களுக்காகவே முழுமை யாக வாழ்ந்திருக்கிறார். கட்சி எல்லைகளைக் கடந்த உறவுகள் தமிழகக் கம்யூனிஸ்ட் தலை வர்களில் தோழர் ஜீவாவுக்குப் பிறகு கட்சி எல்லைகளைத் தாண்டிப் பழ கியவர். எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், திரைத் துறையினர், படைப்பாளிகள் என அனைவருடனும் தொடர்ந்து உரை யாடி வருபவர். நூற்றாண்டு கண்ட இளமை நூற்றாண்டு கண்டுள்ள நிலை யிலும் வாசிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் என்பது ஆச்சரி யம். வாலிப வயதில் முதுமைத் தன்மை அடையும் மனிதர்களைப் பார்க்கும் காலத்தில், நூற்றாண்டு கண்டு இளமையுடன் தொண்ட றம் பேணும் நல்லகண்ணு பொது வாழ்க்கைக்கு பேரொளியாகவும், இன்றைய இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாகவும் திகழ்கிறார். தனக்கென வாழாமல் பிறர்க் கெனவே வாழும் தலைவர்கள் அரிது. காந்தியத்தின் எளிமையையும் கம்யூனிசத்தின் நெறிமுறைகளையும் இன்றுவரையும் கடைப்பிடித்து வருபவர். நூலின் சிறப்பு 480 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் தமிழ்நாட்டின் அரசியல் தலை வர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள் உள்ளிட்ட பலரது கட்டு ரைகளும் நேர்காணல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டு வர லாற்றையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றையும் விவரிக்கும் இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.