உயிரையும் உடலையும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கும் கம்யூனிஸ்டுகள்
கே.பாலகிருஷ்ணன் பெருமிதம் சென்னை, செப். 12 - சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார். மருத்துவத் துறைக்கு புத்துணர்ச்சி “தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளை அனுசரிக்கும் போது உடல் தானம் செய்து எதிர் கால மருத்துவத் துறைக்கு ஒரு புத்து ணர்ச்சியை ஊட்டும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார். மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உடல் தானம் குறித்து விளக்கிய பால கிருஷ்ணன், “உடல் தான நிகழ்ச்சி என்பது சாதாரணமாக தானம் செய்யும் நிகழ்ச்சி அல்ல.
மனிதன் உயிரோடு இருக்கும் போது மனிதனாக பார்க்கிறார்கள். ஒரு மனிதன் இறந்து விட்டால் உடனே அவரை தெய்வமாக்கி விடுகிறார்கள். ஒரு வர் இறந்து விட்டால், எந்த மதமாக இருந்தா லும் சரி, உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. ஏனென்றால், அவர் மீது கத்தி படக் கூடாது என்கிறார்கள். ஒருவர் இறந்த பிறகு, அவரது உடலை தொட்டாலே தீட்டு எனக் கருதுகிறார்கள். அந்த உடலை எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற மதக் கோட்பாடு தான் நாட்டில் நீண்ட கால மாக நிலவி வருகிறது” என்றார்.
சாதிய அடையாளங்களை மாற்ற “தமிழ்நாட்டில் சாதிக்கென்று தனித்தனி சுடு காடுகள் உள்ளன. மரணத்திற்கு பிறகும் கூட சாதி அடையாளங்களோடு அடக்கம் செய்யப்ப டும் நிலையை மாற்றி, இறந்தவர் எந்த சாதி யாக, மதமாக இருந்தாலும் அந்த உடல் மருத்து வத்திற்கு பயன்படும் என்ற அடிப்படையிலும், இந்த உடல் மண்ணுக்கு போய் வீணாவதை விட, மருத்துவத் துறைக்கு, புதிய ஆராய்ச்சிக்கு அந்த உடலை பயன்படுத்த முடியும் என்ற அடிப் படையிலும் இந்த உடல் தான நிகழ்ச்சி நடைபெறு கிறது” என்று விளக்கினார். கம்யூனிஸ்டுகளின் தியாகம் “உயிரோடு இருக்கும் போது மக்களுக்காக எங்கள் உயிரைக் கூட தியாகம் செய்வோம் என்று கூறும் கம்யூனிஸ்டுகள், உயிர் பிரிந்த பிறகு அந்த உடலும் மக்களுக்காக பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த உடல் தான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த உடல் தான நிகழ்ச்சியில் இந்து, கிறித்துவர், முஸ்லிம் என மதம் பார்க்காமல், சாதி பார்க்காமல், மொழி பார்க்காமல் அனைவரும் உடல் தானம் செய்து உள்ளனர்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் “சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை, தவறான மத கோட்பாடுகளை, சாதிய ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் எதிர்த்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” என்று சுட்டிக்காட்டினார்.
சீத்தாராம் யெச்சூரியின் பங்களிப்பு தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்து பேசிய பாலகிருஷ்ணன், “தற்போது மக்களவையில் பாஜகவின் பலம் குறைந்திருக்கிறது என்றால், எல்லா மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து பாசிச குணம் கொண்ட பாஜகவை வீழ்த்துவ தற்கு களம் காண வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்து, அதை நடைமுறை படுத்திக் காட்டியவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி” என்றார். இடதுசாரிகளின் தேவை “இந்தியாவில் இடதுசாரிகள் இருக்கி றார்களா என்று ஒரு செய்தியாளர் சீத்தாராம் யெச்சூரியிடம் கேள்வி எழுப்பிய போது, இடது சாரிகள் இல்லாத இந்தியா இருக்கிறதா என்று தீர்க்கமாக பதில் அளித்தார்.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், சிறந்த நாடாளுமன்றவாதி” என்று பாராட்டினார். நாட்டின் தற்போதைய நிலை “பாஜக ஆட்சியில் நீடிக்க நீடிக்க நாட்டின் மதச்சார்பின்மை அழிக்கப்படுகிறது. சிறு பான்மை மக்களின் வாழ்க்கை சீர்குலைக்கப்படு கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன உலக தாராளமயக் கொள்கையால் பெரு முதலாளிகள் மேலும் மேலும் செல்வங்களை குவித்து வருகிறார்கள்.
அதேநேரம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் சுருங்கிக் கொண்டே வருகிறது” என்று குறிப்பிட்டார். எதிர்கால உறுதி “இந்த நிலையை இடதுசாரிகளால்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தான் மாற்ற முடியும். ஏகபோக முதலாளிகளின் சுரண்டலுக்கு முடிவு கட்ட, பாஜகவின் பாசிச கொள்கை களுக்கு முடிவு கட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வு களை களைய, ஒரு பொதுவுடமை சமூகத்தை படைக்க உறுதியேற்போம்” என்று கே.பால கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.