articles

img

பீகார்: அம்பலமாகும் நவ பாசிச செயல் திட்டம் - இரா.சிந்தன்

பீகார்: அம்பலமாகும் நவ பாசிச செயல் திட்டம்

பீகார் மாநில வாக்காளர் பட்டிய லில் தேர்தல் ஆணையம் மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ‘சிறப்பு தீவிர திருத்தம்’ என்ற முகமூடி அணி விக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தடுத்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் அந்த முகமூடிக்கு பின் இருக்கும் உண்மையான செயல் திட்டத்தை அம்பலமாக்கி வருகின்றன.

 யார் முடிவு செய்தார்?  கடந்த 2003 ஆம் ஆண்டு பீகாரில் செய்யப்பட்ட ‘சிறப்பு தீவிர திருத்தத்தின்’ போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. அரசியல் கட்சிகளிடமும் விவாதிக்கவில்லை. இப்போதைய நடவடிக்கை க்கான தேவையை எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் முடிவு செய்தது, சுயேச்சையான ஆய்வு செய்யப்பட்டதா என்ற தகவல் உரிமைச் சட்டக் கேள்விக்கு, ‘விவரம் இல்லை’ என்று தேர்தல் ஆணையம் பதில் கொடுத்துள்ளது.  

இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பதிலாகும்.  ஏனென்றால் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் இத்தகைய முக்கியமான முடிவை எடுக்கும் முன், தேர்தல் ஆணையம் முறையான ஆய்வு செய்திருக்க வேண்டும். எந்த ஆய்வும், ஜனநாயக விவாத மும் இல்லாமல் இவ்வளவு பெரிய திட்டத்தை திணித்தவர்கள் யார்? எங்கே முடிவு எடுக்கப் பட்டது? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கா தது, இந்த செயல்திட்டத்தின் மீதான சந்தேகங் களை அதிகப்படுத்துகிறது.  நீக்கப்பட்டவர்கள் யார்?  முதல் கட்டம் முடிந்ததும், 65 லட்சம் பெயர்களை நீக்கியிருப்பதாக தேர்தல் ஆணை யம் கூறியது. உச்ச நீதிமன்றத்தில் போராடிய பின்னரே நீக்கப்பட்டோர் பட்டியல் பொது வெளிக்கு வந்தது.  இந்த பட்டியலை ஆராய்ந்ததில், நீக்கப்பட்டவர்களில் ஆண்களைவிடப் பெண்கள் 7 லட்சம் அதிகம் என்று தெரிந்தது. இடம் பெயர்ந்து சென்றதால் நீக்கப்பட்டோரின் பெயர்களில் பாதிக்கும் மேல் (55%) பெண் களாக இருப்பதும் தெரிந்தது.

ஆண்களே குடும்பங்களை விட்டு இடம் பெயரும் வழக்கமுள்ள பீகாரில் இந்த விவரம் நம்ப முடியாத ஒன்றாகும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் சீமாஞ்சல் பிராந்தியத்திலும், எல்லை மாவட்டங்களிலும் நீக்கம் அதிகமாக உள்ளது.  80 வாக்குச் சாவடிகளில் இறப்பு காரணமாக நீக்கப்பட்ட பெயர்களை ஆய்வு செய்ததில் அவர்களில் பாதிக்கும் மேல் 50 வயதுகூட ஆக வில்லை. உதாரணமாக பகல்பூரில் ஒரு வாக்குச் சாவடியில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்ட 58 பேரில் வெறும் 8 பேர் மட்டுமே 50 வயதுக்கு மேலானோர். சுமார் 2 ஆயிரம் வாக்குச் சாவடி களில் மொத்த வாக்குகளில் பெரும்பகுதி நீக்கப்பட்டுள்ளது. 421 வாக்குச் சாவடிக ளில் நூற்றுக்கணக்கானோர் இறந்துபோயி ருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

373 வாக்குச் சாவடிகளில் நீக்கப்பட்ட அனைவருமே இறந்து விட்டதாக காரணம் பதியப்பட்டுள்ளது.   ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ‘இல்லை’ என்று குறிப்பிட்டு நீக்கம் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். 663 வாக்குச் சாவடிகளில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. புள்ளியியல் செய்தியாளர் ஸ்ரீனிவாசன் ரமணி இவற்றை மிகவும் ‘அசாதாரணம்’ என்கிறார். நீக்கப்பட்ட எல்லோருமே ‘இறந்துவிட்டார்கள்’ என்பதும், இடம் பெயர்ந்து சென்றதாக வகைப்படுத்தி நீக்கியிருப்பதும் புள்ளியியல் ரீதியாக விளக்கமுடியாதவை, அப்படி நடக்கச் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.  பெயர்கள் குத்துமதிப்பாக நீக்கப்பட்டுள் ளன. அவசரகதியில் வேலை நடந்திருக்கிறது. பாலினம், மதம், பொருளாதார நோக்கில் பார பட்சமான மனநிலையோடு இது நடந்துள்ளது. வாக்காளர் பட்டியல், நீக்கப்பட்டோர் பட்டியல் என இரண்டிலுமே இல்லாமல் போய் ‘மறைந்து விட்ட’ பெயர்களும் உள்ளன.

87 வயதான  போஜ்பூரி எழுத்தாளர் கே.டி.சிங், தான் அவ்வாறு மறைக்கப்பட்டிருப்பதை ஊடகங்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த எண்ணிக்கை தெரியவில்லை.  இறுதியான பட்டியலில் போலிகள்!  7.24 கோடி வாக்காளர்களோடு உருவாக்கப் பட்ட புதிய பட்டியல் சரியானதா? ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ என்ற இணையதளத்தின் 4 பத்திரி கையாளர்கள், மொத்தமுள்ள 243 தொகுதி களில் 39-இல் மட்டும் செய்த ஆராய்ச்சியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 643 பேருக்கு இரட்டை வாக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊரிலிருந்து 5 ஆயிரம் வாக்குகள் அப்படியே பீகாரில் இடம் பெற்றிருப்பதை அம்பலப்படுத்தினார்கள்.  ‘ஸ்க்ரோல்’ இதழ், ஒரே முகவரியில் 947 வாக்காளர்கள் வாழ்வதாக வெளியான முறை கேட்டைப் பின்தொடர்ந்து ஆய்வு செய்தது. அந்த ஆராய்ச்சியில் பல மதங்கள், பல சாதி களைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் வாழ்வதாகச் சொல்லி 5 தொகுதிகளில் மட்டும் 1.5 லட்சம் வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.

இதில் 14 வீடுகளுக்கு அவர்கள் நேரில் சென்று உண்மையை உறுதி செய்தனர்.  பீகாரில் மழை வெள்ளக் காலம் என்பதால் சுயேச்சையான ஆய்வுகளும், கட்சிகளின் நேரடி ஆய்வுகளும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. இருப்பினும், புதிய பட்டியல் போலிகளும், பிழைகளும் நிறைந்தது என்பதை நிரூபிக்க இதுவே போதுமானது. தேர்தல் ஆணையத்தின் வசம் இருக்கும் மென்பொருள்களை பயன்படுத்தி எளிதாக நீக்கிவிட முடிந்த பிழைகளும் கூட அப்படியே தொடர்கின்றன.  இனிமேல் எழும் புதிய சவால்!  இந்த பட்டியலில் உள்ளவர்களில் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேர்க்கப்பட்ட கோடிக் கணக்கான வாக்காளர்கள் மற்ற ஆவ ணங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால்:  *    பிறப்புச் சான்று: 2000 ஆண்டுக்குப் பின்னர் வெறும் 3.7 சதவீதம் பிறப்புகள் மட்டுமே பதிவு. *    பாஸ்போர்ட்: வெறும் 2% பேர் வைத்துள்ளார்கள். *    கல்விச் சான்று: 10ஆம் வகுப்பு முடித்தோர் 14% மட்டுமே. *    அரசு ஊழியர், ஓய்வூதியர் 20 லட்சம் பேர் மட்டுமே. *    நிலமுள்ளவர்கள் மொத்தக் குடும்பங்களில் 35 சதவீதம் மட்டுமே. எனவே நிலப்பட்டா உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைவு.  இவை எதுவும் இல்லாதவர்களால் வசிப்பிடச் சான்று பெற சாதாரண காலத்திலேயே 15 நாட்கள் எடுக்கும்.

குடும்பப் பதிவுக்குச் சான்று  பெற உள்ளாட்சி நிர்வாகங்களில் விண்ணப்பம் செய்து, 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும். 1987 ஆம் ஆண்டுக்கு முந்தைய அடையாள ஆவணங்கள் பரவலாக இல்லை. வன உரிமைச் சான்று 191 பேருக்கு மட்டும் உள்ளது. சாதிச் சான்று பற்றிய விவரங்கள் இல்லை. 2003-க்கு முன் இடம் பெற்றிருந்த வாக்காளர் களுக்கும், போலிகளுக்கும் இதுபோன்ற பிரச்சனை இல்லை.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஆதார் அட்டை ஏற்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் இடைக்கால ஆறுதல் கிடைத்துள்ளது.  குடியுரிமை நீக்கம்!  அதேவேளையில், பி.டி.ஐ நிறுவனத்தின் செய்தியின்படி, தேர்தல் ஆணையம் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையை ‘சந்தேகத்திற்குரியதாக’ குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது.  

மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை செய்தபடி, தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் செயல்திட்டத்  தின் கருவியாக மாற்றப்படுகிறது. பீகாரில் தொடங்கியிருக்கும் இந்த பரிசோதனையின் நோக்கம் வாக்குரிமையை பறிப்பது மட்டுமல்ல, குடியுரிமையை பறித்து சொந்த மக்களையே அகதிகளாக மாற்றும் திட்டமும் இணைந்துள்ளது.  உலகம் முழுவதும் செயல்பட்டுவரும் நவபாசிச சக்திகள் தேர்தல் முறையை முற்றாக ஒழிப்பதில்லை, மாறாக தேர்தல்களை அப்படியே வைத்துக்கொண்டு அவற்றைச் சாரமிழக்கச் செய்கிறார்கள். அதற்காக வாக்குரி மையை சிக்கலாக்குகிறார்கள். சொந்த மக்க ளில் ஒரு பகுதியை ‘மற்றவர்கள்’, ‘வந்தேறிகள்’ ஆக சித்தரித்து மோதவிடுகிறார்கள்.  இவ்வாறான அபாயத்தை நோக்கி தேர்தல் ஆணையத்தின் புதிய நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணி யில் பீகாரில் மையம் கொண்டு உருவாகியுள்ள எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை மிக முக்கியமான வளர்ச்சியாகும். வாக்குரிமை காத்திடவும், குடி யுரிமை காக்கவும் எழும் இந்தக் கிளர்ச்சிகள், நவபாசிச செயல்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தட்டும்.