articles

img

கவிதைகளின் ஆல்பம் - ப.முருகன்

கவிதைகளின் ஆல்பம்

கவிஞன் கண்டாலே கவிதை, காண் பவர் கண்டாலே காதல் - என்றார் கவிஞர் கண்ணதாசன். அதுவே ஒரு புகைப்படக் கலைஞன் கண்டால் அனைத்தும் அழகிய புகைப்படங் கள் ஆகிடும் அல்லவா? அத்துடன் கவிஞ னும் (புகைப்படக் ) கலைஞனும் இணைந்த தால் அழகுமிகு கவிதை ஆல்பம் கிடைத்திருக் கிறது. கவிதை ரசிகர்களுக்கும் புகைப்பட ரசிகர்களுக்கும் அற்புதமான ஓர் அழகோவி யம் கண்களுக்கு விருந்தாகி இருக்கிறது. இந்த அழகிய அனுபவத்தை கொடுத்திருக் கிறார் கவிஞர் இரா.அ. தென்றல் நிலவன். 80 பக்க நூலில் முன்னுரை, அணிந்துரைகளுக்கு 15 பக்கம் போக 64 பக்கங்களில் அழகோவிய ஹைக்கூ கவிதைகள் கண்கொள்ளாக் காட்சியாக நம் சிந்தையைக் கவருகின்றன. கவிதைகளுக்காகப் படங்களா?. படங்களுக்காக கவிதைகளா?  நல்ல கவி விருந்து, கலை விருந்து. அட்டைப் படமே நம்மை அசரடிக்கிறது கூடி அமர்ந்து விளையாடுகிறது / குழந்தைகள் / அலைபேசியில் ..! ... வீதியில் விபத்து / விரைந்தன கரங்கள் ../செல்போனில் படம் எடுக்க..? ... இன்றைய மனித சமூகத்தின் குரூர மனநிலையின் அருமையான எள்ளல். எரிந்த குடிசைகள் / அணையாமலிருந்தது ../ ஜா’தீ’ என்ன சொல்ல? இந்த ஹைக்கூவின் உண்மை நம் உள்ளத்தைச் சுடுகிறது. எல்லாக் கவிதைகளும் என்னைக் குறிப்பிடு என்றே கூறுகின்றன. ஆனால் விடுபடும் கவிதைகள் வருத்தப்படுமே! என் செய்ய? கடனைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் தலா 3 கவிதைகள் ரசிக்கத் தக்கவை. கடைசி காலத்தில் / காப்பாற்றியது வங்கி /காவலர் வேலை -  காலி பாட்டில் நிறைத்தது / குப்பை பொறுக்குவோர் / வயிற்றை ! இவை சொல்வதை கடப்பது எப்படி? நிறைவாக அந்த முத்தாய்ப்புக் கவிதை. நரைத்த தார்சாலையை / மை பூசி அழகாக்குகிறது/ மழை. பல கவிதை தொகுப்புகளைத் தந்த கவிஞர் தென்றல் நிலவன் இந்த நூலுக்காக கால் நூற்றாண்டு காத்திருந்தாராம். பாராட்டுகிறார் ஹைக்கூ விற்பன்னர் மு.முருகேஷ். நாம் காத்திருக்காமல் கவிதைகளை ருசிப்போம்.