articles

இஸ்ரேல் - ஈரான் மோதல்: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்! - பிரியங்கா ஜா பிபிசி செய்தியாளர்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏப்ரல் 1இல் தொடங்கிய பதற்ற நிலை தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து இது குறித்த அச்சம் நிலவி வந்தது. அதனால் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று ஈரான் கூறியது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை இஸ்ரேல் எந்தவித கருத்தையும் தெரி விக்காத நிலையில், வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி யுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இத னால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதி கரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுட னும் இந்தியா நல்லுறவைக் கொண்டி ருப்பதால், இந்த நிலை இந்தியாவுக்கு மேலும் தொந்தரவாக மாறும் என நிபுணர் கள் கருதுகின்றனர். மேலும், மேற்காசிய நாடுகளில் ஏராள மான இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

வெளியுறவு அமைச்சக அறிக்கை

ஈரானின் தாக்குதலுக்குப் பிறகே, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இரு நாடுகளும் ராஜ தந்திர உத்தியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், இந்தியர்கள் இந்த இரு நாடுகளுக்கும் பயணிக்க வேண்டா மென்றும் பயண வழிகாட்டுதல்களை வெளி யிட்டிருந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையி லான மோதலுக்கு மத்தியில், இந்த இரு நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தி யர்களின் பாதுகாப்பே இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இருப்பதாக நிபுணர்கள் நம்பு கின்றனர். தனது பயண வழிகாட்டுதலின்படி, இஸ்ரேல் அல்லது ஈரானுக்கு பயணம் செய்ய எந்தவிதமான தடையையும் இந்தியா விதிக்கவில்லை. மாறாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேலில்  18 ஆயிரம் இந்தியர்

தற்போது இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர், ஈரானில் 5 முதல் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வரு கின்றனர். ஹமாஸுடனான போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழி லாளர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து 10 ஆயிரம் தொழிலா ளர்கள் முழு சோதனைக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர். ஏற்கெனவே ஹரியானாவில் இருந்து சுமார் 530 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு சிக்கல்

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலை சேர்ந்த மூத்த உறுப்பினர் டாக்டர். ஃபஸூர் ரஹ்மான் கூறுகையில், “ 90 லட்சம் முதல் 10 மில்லியன் இந்தியர்கள் வரை மேற்காசிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 முதல் 55 லட்சம் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.” “இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் முக்கிய நாடுகளான சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட முன்னணி நாடு கள் மேற்கு ஆசியாவில்தான் உள்ளன. எனவே இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதி கரித்தால், அது நிச்சயமாக இந்தியாவுக்கு சிக்கலாக அமையும்” என்கிறார். அதேநேரம் ஜாமியா மிலியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மையத்தின் பேராசிரியரான டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகையில், “காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய தாக்கு தலுக்கு பதிலடியாக செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதி கரித்துள்ளன.” “இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள பாதிப்பு  கடல் வர்த்தகப் பாதைகளில் ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்நிலை யில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டால், இந்தியா நீண்ட காலத்திற்கு நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிப்பது கடினம்,” என்கிறார்.

எண்ணெய் விலை உயர்வு

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உறுதியானதையடுத்து, உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியன்று, ஆசியா வில் கச்சா எண்ணெய் விலை மூன்று சத வீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர்களை எட்டி யுள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை புதிய சாதனையாக, அவுன்ஸ் ஒன்றுக்கு 2400 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிப்பதாக பிரேமானந்த் மிஸ்ரா கூறு கிறார். மேலும், “இது மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் காலம். இப்போது பணவீக்கம் அதிகரித்தால் அது இங்கு தேர்தல் அரசியலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும், அதை இந்தியா விரும்பாது” என்கிறார். இந்தியா எண்ணெய்க்காக ஆப்பிரிக்க நாடுகளிடம் செல்லலாம். இருப்பினும் ஈரானி டம் மலிவு விலையில் எண்ணெய் கிடைத் திருக்கும். ஆனால், அது தற்போதைய நிலை யில் கிடைக்காது என்று கூறுகிறார் அவர். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குத லுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்ச கம் இதுகுறித்த தனது கவலையை வெளிப் படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. ராஜதந்திர உறவுகளின் மூலம் வன்முறை மற்றும் தாக்குதலில் இருந்து உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என இந்தியா கூறியது. ஆனால் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் வெளியுறவுக் கொள்கை யில் முரண்பாடு தெரிவதாக நிபுணர்கள் கருது கின்றனர். முன்பு ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த தடைகள் இருந்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை வேறு என்றும் நம்புகிறார் பிரேமானந்த் மிஸ்ரா.

நெருக்கடியில்  வெளியுறவுக் கொள்கை

தற்போது இஸ்ரேலுடனான உறவைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியா விரும்பி னால், அது ஈரானுடனான உறவை மோச மாக்கிவிடும். இதுவே ஈரானுடன் நெருங்கிப் பழகினால், அது இஸ்ரேல் மற்றும் அமெ ரிக்காவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். மேலும் அவர் கூறுகையில், “இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது, இந்தியாவிலும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது என்ப தற்கான அறிகுறி. இந்தக் குழப்பமான சூழ்நிலை ஒரு சவால் இல்லை என்றா லும்கூட, இது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கான நெருக்கடி.” “என்னைப் பொறுத்தவரை, இதுபோன்ற பிரச்சனைகளில் இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை அதிகமாக நடுநிலையே என்பதால், ஒரு ராஜதந்திர நெருக்கடி உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு நடுவில் இந்தியா மாட்டிக்கொண்டிருக்கிறது,” என்கிறார். இந்தியாவை பொறுத்தவரை ‘முன்னால் கிணறு, பின்னால் குழி’ என்ற சூழலில் சிக்கிக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார் பிரேமானந்த் மிஸ்ரா. தொடர்ந்து அதி கரித்து வரும் பதற்றம் காரணமாக, இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பது அல்லது நீண்ட காலம் நடுநிலையாக இருப்பது கடினமானதாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்.

ஈரான் உறவு நீண்டகால உறவு

இஸ்ரேலுடனான இந்தியாவின் ராஜீய உறவின் வரலாறு ஒன்றும் மிக நீண்டதல்ல. 1948ஆம் ஆண்டில்தான் இஸ்ரேல் ஒரு நாடாக உருவானது. இந்தியா அதனுடன் 1992இல் ராஜீய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால், அன்றிலிருந்து இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு நாளுக்கு நாள் வலு வடைந்து வந்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் இஸ்ரேலும் உள்ளது. மாறாக, ஈரானுடன் இந்தியா நீண்ட கால உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தி யாவுக்கு எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஈரானும் ஒன்று. அணுசக்தித் திட்டம் காரணமாக ஈரான் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவிற்கு அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் இருந்தது.

சபாஹர் துறைமுக கட்டுமான திட்டத்தில் முதலீடு

சர்வதேசத் தடைகள் இருந்தபோதிலும் கூட, இந்தியா ஈரானுடன் சமநிலையான உறவைக் கடைப்பிடித்து வந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த ஆண்டு ஈரானுக்கு பயணம் சென்றிருந்தார். அந்த நேரத்தில் சபாஹர் துறைமுகம் குறித்தும் விவாதிக் கப்பட்டது. சபாஹர் துறைமுக கட்டுமான திட்டத்தில் இந்தியாவும் முதலீடு செய்துள்ளது. மூலோபாயக் கண்ணோட்டத்தில், இந்தத் துறைமுகம் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியமானது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தத் துறைமுகம் ஈரானுக்கு உதவியாக அமையும். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா, பாகிஸ்தான் வழியாகச் செல்ல வேண்டியதில்லை.

ஈரான் தூதரின் கருத்து

இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “காசா வில் நடந்து வரும் போரை நிறுத்த இந்தியா சர்வதேச அமைப்புகளின் வழியாகத் தீவிர பங்காற்ற வேண்டும்” என்றார். இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்வது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. பிரேமானந்த் மிஸ்ரா இதுகுறித்துக் கூறு கையில், “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனையே, அவை குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்ப டையில் இயங்குவதுதான். இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது எளிதல்ல. உதாரணமாக, பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. ஆனால், இந்த விஷ யத்தில் இஸ்ரேல் இல்லாமல் எந்த அங்கீ காரமும் இல்லை.” “அதே நேரம், இந்தியா இருநாட்டு தீர்வின் (Two State Solution) மீது நம்பிக்கை வைத்துள்ளது . இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதலாக இந்தியா கருதுகிறது. ஆனால் ஈரான் அப்படிக் கருதவில்லை. இதுபோன்ற சூழலில், ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினம்.” இருப்பினும், பல சிக்கல்கள் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், இதற்கு ஓர் எளிய பதில் இருக்க முடியாது என்று நம்புகிறார் பிரேமானந்த் மிஸ்ரா. குறிப்பாக ஜூன் மாதம் வரை தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இருக்கும்போது அது மிகவும் கடினம்தான் என்கிறார் அவர்.

 

 

;