articles

img

காசாவில் பட்டினியால் மக்கள் செத்து மடியும் பேரவலம்! இஸ்ரேலுக்கு 100 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

காசாவில் பட்டினியால் மக்கள் செத்து மடியும் பேரவலம்! இஸ்ரேலுக்கு 100 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

காசா, ஜூலை 25 -  இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான இனப்படுகொலை யுத்தத்தால், காசா முழுவதும் பட்டினிச் சாவுகள் பேரவலமாக மாறியிருக்கின்றன. மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இதனைக் குறிப்பிட்டு, சர்வதேச அளவில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் வேதனை வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பை அழிக்கப் போகிறோம் என்ற பெயரில், சுமார் 21 மாத காலமாக பாலஸ்தீனர்கள் மீது  இஸ்ரேல் ராணுவம் கொடூர யுத்தத்தை நடத்தி வருகிறது.  காசாவில் உள்ள சுமார் 20 லட்சத் துக்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் குண்டு வீசி அப்பகுதியை விட்டு வெளி யேற்றி வருவதுடன் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களைக் கூட கொடுக்காமல் பாலஸ்தீனர்களை பட்டினிப்படு கொலை செய்து வருகிறது.  ஐ.நா. நிவாரண வாகனத்தையும் - உதவியையும் தடை செய்து விட்டு நாங்களே நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் அறிவித்தன. எனி னும், பாலஸ்தீனர்களின் வாழ்வுக்குத் தேவையான போதிய உணவு, குடிநீர், மருத்துகள், தண்ணீர் சுத்திகரிப்பு, மாத்திரைகள் என எந்த உதவிகளை யும் முறையாக கொடுக்கவில்லை.  இதனால் கடந்த 21 மாதக்கால இஸ் ரேல் ராணுவத்தின் இனப்படுகொலை யில் 20 லட்சத்துக்கும் அதிகமான பால ஸ்தீனர்கள் மிகப்பெரிய அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 20-க்கும்  அதிகமான பாலஸ்தீனர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பலியாகி யுள்ளனர். இதில், பெரும்பாலானோர் குழந்தைகள். இவ்வாறு பட்டினியை மிகப்பெரும் ஆயுதமாக பாலஸ்தீனர் களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.  இந்நிலையில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (MSF), ‘சேவ் தி சில்ட்ரன்’, ‘ஆக்ஸ்ஃபாம்’ உள்ளிட்ட 111  அமைப்புகள் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் “எங்கள் சகாக் களும், நாங்கள் யாருக்கு சேவை செய்கிறோமோ அவர்களும் உண வின்றி மெலிந்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளன. பேச்சுவார்த்தை மூலமாக உடனடி  போர் நிறுத்தம் மேற்கொள்வது, காசா விற்கான அனைத்து நிலவழி எல்லை களையும் திறப்பது, ஐ.நா. தலைமை யிலான வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் பாலஸ்தீனர்களுக்கு தடை யற்ற உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவ்வ மைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.  பாலஸ்தீனர்களுக்கு கொடுப்ப தற்காக பல ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் காசாவிற்கு வெளியே அப்படியே உள்ளன. காசாவிற்கு உள்ளேயும் உள்ளன. அப்படி இருந்தும் கூட அவர்களுக்கு முறையாக உணவுகளை கொடுக்க முடியாத படி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. உணவு விநியோக மையங் களுக்கு வரும் பாலஸ்தீனர்களை சுட்டுப்படுகொலை செய்து வருகிறது. பாலஸ்தீனர்கள் உடல் ரீதியான உளவியல் ரீதியான சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர் எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  காசா முழுவதையும் கைப்பற்றி அதன் கடற்கரையில் மிகப்பெரிய ரிசார்ட், ஹோட்டல்கள் கட்டி, ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.