articles

img

சீனாவில் தகவல் தொழில்நுட்பத்துறை சர்வதேச பயிலரங்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சுதிர் பங்கேற்பு

சீனாவில் தகவல் தொழில்நுட்பத்துறை சர்வதேச பயிலரங்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சுதிர் பங்கேற்பு

சென்னை, செப். 23- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் நடை பெறும் சிறப்பு பயிலரங்கில் பங்கேற்ப தற்காக இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இளம் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான இரா.சுதிர், சீனா சென்றுள்ளார். சீனாவில் மிகப்பிரம்மாண்டமான தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி  குறித்த பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. செப்டம்பர் 16 முதல் சீனத் தலைநகர் பெய்ஜிங் உள் ளிட்ட நகரங்களில் உலகின் பல்வேறு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளது சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளம் ஊழியர்கள் இந்த  நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். அவர் களில் ஒருவராக இரா.சுதிர் பங்கேற்றுள் ளார்.  செப்டம்பர் 16 அன்று பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச வெளியீட்டகத்தில் நடைபெற்ற துவக்க  நிகழ்வில் சீனத்தின் நவீன சர்வதேச ஊடக நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் லி சுவாங்வு, லாவோஸ் நாட்டின் செய்தி நிறுவன துணை இயக்கு நர் செங்தோங் பசவத் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்தினர்.  சீனத்தின் மிகப்பெரும் நிறுவன மான சின்குவா நிறுவனத்தின் இயக்கு நர் லியு ஹாங், சீனாவின் உலக தகவல் தொடர்பு மையத்தின் துணைத் தலை வர் குவான் ஹோங் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.  சர்வதேச சீன நவீன ஊடக நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு ஹூய், இலங்கையின் மக்கள் விடு தலை முன்னணி (ஜேவிபி) ஊடகப் பிரிவு உறுப்பினர் விமுக்தி யெசாஸ், தாய்லாந்து மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மேலாளர் சுபாச்சாய் சியாங்ஜுன், சீன நியூஸ் வீக்லியின் நிர்வாக துணைத் தலைமையாசிரியர் வென் லோன்ங்க்ஜி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.  தொடர்ந்து, சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பல்வேறு அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.