articles

img

சட்டமன்றத்தில் புயலை கிளப்பிய ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து! - அப்துல் அக் ஷீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந் தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அது குறித்த பேச்சுக்கள் மக்களிடையே துவங்கியுள்ளது. மாநில சட்டமன்றத்தின் முதல் அமர்வில் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்கான தீர்மா னங்களும் அதற்கு எதிர் தீர்மானங்களும் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்த சலசலப்பை ஏற்படுத்தினர்.  ஐந்து நாள் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவ காரம் சபையில் ஆதிக்கம் செலுத்தியது. சமூக ஊட கங்களில் குறிப்பாக x தளங்களில் பல நாட்களாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நகரைச் சார்ந்த அரசியல் விமர்சகர் பேராசிரி யர் நூர் பாபா,” பிரிவு 370 இல் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது. பொது உரையாடலின் பகுதியாகவும் தற்போது மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் விவாதிக்கின்றனர். இதற்கு எதிரான பாஜகவின் கண்ட னங்கள் முதல் ஆதரிப்பது வரை பல வகையிலான கண்ணோட்டங்கள் எழுந்துள்ளன” என்று கூறினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூடிய அமர்வில் முதல் நாளில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) சட்டமன்ற உறுப்பினர் பக்கிர் பாரா 370 பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தீர்மானம் முன்மொ ழிந்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்த்ததால் சபையில் புயலை அது கிளப்பியது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் சிறப்பு அந்தஸ்து, அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மற்றும் அரசியலமைப்பு வழிமுறை களை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஜம்மு-  காஷ்மீர் சட்டமன்றம் அழைப்பு விடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள்

பிடிபி, மக்கள் மாநாடு உள்ளிட்ட பாஜக அல்லாத எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குழு சட்ட பிரிவு 370 மற்றும் 35 ‘ஏ’  வை அவற்றின் அசல் வடிவத்தில் உடன டியாக மீட்கக் கோரி சட்டமன்றத்தில் ஒரு புதிய தீர்மா னத்தை முன் வைத்தனர். 2019 ஆம் ஆண்டின் முந்தைய மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் யூனியன் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மாற்றங்களையும் திரும்பப் பெறவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.  மக்கள் சமூக ஊடகங்களில் இது குறித்து தீவிர மாக பேசி வருவதாக பொறியாளர் ரஷீத் கட்சியின் தலை வர் ஷேக் ஆஷிக் கருத்து தெரிவித்தார். தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கம் எங்களின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்கு முயற்சி செய்யும் என எதிர் பார்ப்பதாகவும் எங்கள் அனைவரின் பார்வையும் அதன் மீது தான் பதிந்துள்ளது என்றும் கூறினார். இந்த தீர்மானத்தை விவாதிக்கும் போது சமூக ஊடகங்களிலும் மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என சஜித் லோன் கேட்டுக் கொண்டார்.  இந்த விவகாரம் தலைப்புச் செய்தியாகி முக்கிய இடத்தை பிடித்த போதிலும் 370 ஆவது பிரிவு ஒரு  முடிந்து போன அத்தியாயம். அதைப்பற்றி விவாதிப்பது நேரத்தை வீணடிக்கும். அதை யாராலும் திரும்ப கொண்டு வர முடியாது என பாஜக தொடர்ந்து கூறு கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு 370 உலகில் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என பிரதமர் மோடி சவால் விடுகிறார். இந்நிலையில், வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தி லிருந்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கேட்டுக் கொண்டார். எங்கள் நிகழ்ச்சி நேரலை வாட்ஸ்அப், முகநூல் அல்லது ட்விட்டர் முடிவு செய்யாது. மாறாக ஜம்மு - காஷ்மீர் மக்களே அதை முடிவு செய்வார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கி றேன் என்றும் கூறினார்.

 நன்றி : தி ட்ரிப்யூன்,10/11/24 
தமிழில் சுருக்கம் : கடலூர் சுகுமாரன்