articles

img

பெண் தொழிலாளர்களின் “டிஜிட்டல் ஸ்டிரைக்” - சீமாசிங், நிஷா பன்வார், செல்வி, சந்தன்குமார்

“கிக்” (Gig) தொழிலாளர்கள் சமீபத்தில் நடத்திய நாடு தழுவிய முதல் டிஜிட்டல் வேலை நிறுத்தம் அவர்களின் பணி நிலைமை பிரச்சனைகளை  தொழிலாளர்களின் பிர தான நீரோட்டத்துடன் இணைக்கும் சிறிய முயற்சி யாகும். கிக் தொழிலாளர்கள் என்னும் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியான பரிமாண வளர்ச்சிக்கு நடுவில் சமீபத்தில் இந்தியாவில் நாடு தழுவிய ஒரு அற்புத மான இயக்கம் நடந்தது. டிஜிட்டல் ஸ்ட்ரைக் கிக் மற்றும் பிளாட்பார்ம் ஒர்க்கர்ஸ் யூனியன் அமைப்பால் அறை கூவல் விடப்பட்ட இந்த வேலை நிறுத்தம் பெண் தொழிலாளர்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சுரண்டல் மற்றும் தவறான தொழிலாளர் நடைமுறை கள் பிரச்சனையில் நாடு தழுவிய கவனத்தை ஈர்ப்ப தற்காக நடந்த இந்த வேலை நிறுத்தம் பயனாளி களின் ஆதரவையும் நாடியது.

தீவிரமாகும் சுரண்டல்!

இந்தப் பண்டிகை காலங்களில் எங்கு நிறுவ னங்கள் எண்ணற்ற தள்ளுபடி சலுகைகளை வழங்கு வதை ஆன்லைனில் நாம் தேடும்போது தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தள்ளுபடிகள் எங்கிருந்து வருகிறது? அடிமை போல உழைக்க கட்டாயப் படுத்தப்படும் அவர்களின் ஊதியத்தில் வெட்டி எடுத்து தான் அந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது என அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். ஆனால் நுகர்வோரோ அரசாங்கமோ இதைப் பற்றி கவலைப்படுகின்றனவா? இளைஞர்கள் எவ்வாறு  இந்த வேலைகளை கண்டறிவது என்று மட்டுமே அவர்கள் விளக்குகின்றனர். இந்த ஸ்டார்ட் அப் நிறுவ னங்கள் எப்படி இவ்வளவு விரைவான வளர்ச்சி அடைகின்றன? கிக் தொழிலாளர்களை கண்மூடித் தனமாக சுரண்டி தங்களின் லாபத்தை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சியின் பின்னால் மறைந்துள்ள உண்மை.

சுரண்டல்  ஒரு தேச விரோதச் செயல்

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகப்பெரிய இயங்குதள  நிறுவனங்கள் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் ஸ்டாண்ட் அப் நையாண்டி பேச்சாள ருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த சர்ச்சை கள் நினைவு கூரத்தக்கது. நிறுவனங்களின் தயாரிப்புகளின் சேவை குறைபாடுகளுக்கு நிர்வாக அதிகாரி பொறுப்பு ஏற்பாரா என சமூக ஊடகங்களில் சவால் விடப்பட்டது. நையாண்டி செய்பவர் இதற்கு எதிராக பல்வேறு தாக்குதலை எதிர்கொண்டார். ஒரு மூத்த பத்திரிகையாளர் உட்பட பல முக்கிய நபர்கள்  அவரை துரோகி என்று வசை பாடினர். அதே நேரத்தில் தலைமை நிர்வாக அதிகாரியை தேசத்தின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள் என்று பாராட்டினர். ஆனால் இது உண்மையா? கிக் தொழிலாளர்க ளின் சுரண்டலில் கிடைக்கும் லாபமே அந்த செல் வத்தின் அடிப்படை என்பது தானே உண்மை! தொழி லாளர்களின் பங்கை நாம் எப்படி பார்க்கிறோம்? மறைவு உழைப்பை வழங்கி நாட்டின் பொருளா தாரத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் பங்கும்  இல்லையா? உழைப்பு சுரண்டல் ஒரு தேச விரோதச் செயலாக கருத முடியாதா? இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% க்கும் அதிக மான பங்களிப்பை முறைசாரா தொழிலாளர்கள் செலுத்துகிறார்கள் என்பதே உண்மை.

கருப்பு தீபாவளி

பெண் தொழிலாளர்கள் தீபாவளி என்னும் புனிதமான நாளை தேர்ந்தெடுத்து அன்று இந்த டிஜிட்டல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். கருப்பு தீபாவளி என்றும் அழைத்தனர். மீடியா, மக்கள் பய னாளிகள் உள்ளிட்ட  எல்லோரும் அமோகமாக ஆத ரித்தனர்.ஆனாலும் இது ஒரு நீண்ட கால போராட்டம் என்பதை நன்கு அறிந்து உணர்ந்திருந்தனர். அவர்தம் முக்கிய கோரிக்கைகள் பிரதான தொழிலாளர்களின் கோரிக்கைகளுடன் இணைக்கப்படவில்லை. இயங்கு தள  நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.மீறல்கள் நடக்காதவாறு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் . அரசாங்கமும் பெரும்பான்மையான கிக்  தொழிலா ளர் அமைப்புகளும் குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அரசியல் அமைப்பு உத்தரவாதம் செய்யும் தொழிலாளர் நலக் கொள்கைகள் முழுமை யாக அமலாக்கப்பட  வேண்டும். தகுந்த வேலை நேரம், பாதுகாப்பான நிலைமைகள், வாழ்க்கை ஊதியம் மற்றும் முறையான பணி நிலைமைகளைப் பெற தொழி லாளர்கள் நூறாண்டுகளுக்கு மேலாக போராடி வரு கின்றார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு தலைப்பட்சமாக நியமிக்கப்படும் வேலைவாய்ப்புகள்

அழகுக் கலை நிபுணர்கள், சமையல்காரர்கள், வீட்டுப் பணியாளர்கள் என்று வரலாற்று ரீதியாக பழமை யான ஆணாதிக்க கட்டமைப்பை நிலை நிறுத்தும் வேலைகளில் ஈடுபட  டிஜிட்டல்  தளங்கள் பெண்களைக் கட்டாயப்படுத்துகின்றன. தன்னிச்சையாக  நிர்பந்திக் கப்படும் வேலைகளிலும் அவர்கள் பணியாற்ற வேண்டி யுள்ளது. சுரண்டலைத்  தீவிரப்படுத்தும் நெறிமுறை களை ஒருவேளை அவர்கள் எதிர்த்தால் வேறு துறை களில் பணி அமர்த்த முடியாதபடி தடுக்கப்படுவார்கள்.  வேலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியே வீசப்படுவார்கள்.  இதில் பெண்கள் வெறும் எண்ணிக்கைகளாக மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள்.கணவனைப் பிரிந்து தனியாக வாழும் தாய்மார்கள், விவாகரத்து பெற்றவர்கள், கணவனை இழந்தவர்கள், குடும்ப வன்முறையில் பிழைத்தவர்கள் இந்த கிக் வேலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது மலிவு உழைப்பின் தொகுப்பாகவே இருக்கிறது . இயங்கு தல நிறுவனங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவர்களுடைய லாபத்தை அதிகரிக்க தொழிற்சங்க உரிமைகளையும் மறுக்கின்றனர். தொழிலாளர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி தொழிலாளர் சட்டங்களை இயற்றுகின்றனர்.

கவர்ச்சி சலுகைகள்

வேலை நேரத்தை தேர்ந்தெடுக்கவும் நிதி சுதந்தி ரத்தை பெறவும் வசதி செய்து தருகிறோம் என்றும் தங்கள் குடும்பக் கடமைகளை சமநிலைப்படுத்தும் வேலையும் தருகிறோம் என பெண்களை நிறுவ னங்கள் கவர்ந்து இழுக்கின்றன. இத்தகைய கவர்ச்சி கர சொல்லாடலுக்கு பின் இருண்ட பக்கமும் உண்டு. இலக்குகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் கொடுப்பதுதான் அது.போக்குவரத்து செலவுகள், பிளாட்பார்ம் கட்டணங்கள் உட்பட பல பெரும் நிதிச் சுமைகளும் அவர்களின் மீது சுமத்தப்படும். நியாய மான,  மிக அத்தியாவசிய வருமானம்  மற்றும் சமூக  பாதுகாப்பும் கூட கிடைக்காமல் போகும்.

போலி கோஷங்கள்

இது விசித்திரமானது. நிறுவனங்களின் தொழி லாளர் விரோத  நடைமுறையை தடுக்க இந்த அரசிடம் உறுதி எதுவும் இல்லை. தரவு தனி உரிமை சட்டங்கள் ( Data Privacy Act)இல்லாத நிலையில் இந்த பகாசுர நிறுவனங்கள் பெண்களின் உழைப்பை சுரண்டி வளரவும் வழிவகை செய்கிறது. ஆழமாக உட் பொதிக்கப்பட்ட ஆணாதிக்கக் கூறுகள் இந்தியாவில் பெண் தொழிலாளர்களுக்கு மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை பெறுவதை தடுக்கிறது. “பேட்டி  பச்சாவோ, பேட்டி பதாவோ” என்று நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெறுகிறது. ஆனால் சுரண்டலை எதிர்த்து பல பெண்கள் இன்று போராடுவது வெட்கக் கேடானது.

டிஜிட்டல் ஆணாதிக்கம்

இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வலிமையை அதிகரித்து வேலை வாய்ப்பு களை உருவாக்குகிறது என விளம்பரம் நடைபெறு கிறது. ஆனால் சுரண்டல் சுழற்சியில் இருந்து பெண்கள் இன்னும் தப்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. சமூகத்தில் புரையோடிப் போன ஆணா திக்கம் டிஜிட்டல் மூலமாகவும் அதிகரிப்பதால் பொரு ளாதாரச் சுரண்டல் மேலும் ஆழமாகிறது.

தொழிலாளர்களை வஞ்சிக்கவே செயற்கை நுண்ணறிவு

GIPSWU (கிக் தொழிலாளர்கள் சங்கம்) ஒரு நுணுக்கமான அணுகுமுறையோடு நீண்ட கால போராட்டங்களை திட்டமிட வேண்டும். இந்த டிஜிட்டல் வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து வெற்றிப் பாதைகளுக்கான  வழியை திறந்து விட்டுள்ளது. கிக் தொழிலாளர்கள் சுரண்டப்படுவ தற்கு எதிராக இதற்கு முன் உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் இவ்வளவு வலிமையாக ஒலித்ததில்லை.இது ஒரு பெருமைமிகு தருணம். தொழிலாளர்களை திரட்டி போராடுவதை தவிர இதற்கு மாற்று ஏது மில்லை. எதிர்காலத்தில் பொருத்தமான கொள்கை கள்,தகுந்த சட்டங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்த இது உதவும். கிக் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் முன்னேற்றுவோம்!

கட்டுரையாளர்கள் : சீமா சிங் புது தில்லி கிக் தொழிலாளி. நிஷா பன்வார் மும்பை கிக் தொழிலாளி. செல்வி பெங்களூர் கிக் தொழிலாளி. சந்தன் குமார் புனேவில் உள்ள தொழிலாளர் ஆர்வலர். எழுத்தாளர்கள் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் சர்வீசஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் (GIPSWU) நிறுவனர்கள்.  தி இந்து 11/11/24  தமிழில் : கடலூர் சுகுமாரன்