articles

img

மார்க்சியமும் தனிமனிதரும் - ஜார்ஜி சிமிர்னோவ்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த  ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.  மார்க்சியம் என்பது ஒவ்வொரு தனி மனிதரையும் புரட்சிகரமான சமூக மனிதராக மாற்றும் வல்லமை கொண்டது. உலகில் தோன்றிய தத்துவங்களிலேயே மார்க்சியத்திற்கு மட்டுமே அத்தகைய சக்தி உண்டு. 1985ல் வெளியான இக்கட்டுரையில் (The Marxist The Marxist Volume: 03, No. 4 October-December, 1985- Marxism And The Individual- G Simirnov ) இதை விளக்குகிறார் சோவியத் ஒன்றியத்தின் மார்க்சிய ஆய்வாளர்களில் ஒருவரும், சோவியத் மார்க்சிய - லெனினிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக செயலாற்றியவருமான ஜார்ஜி சிமிர்னோவ்.

மார்க்சிய-லெனினிய கோட்பாட்டில் தனிமனிதர் பற்றிய ஆய்வு என்பது வெறும் ஓர் அம்சம் மட்டுமல்ல, அதற்கும் மேலானது. வரலாற்றின் பொருள்முதல் விதிகளின் அடிப்படையில் சமூகத்தை புரட்சிகர மாற்றம் செய்வதற்கான மார்க்சியக்  கோட்பாடு என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கும், தனிமனிதனின் பன்முக வளர்ச்சிக்குமான அறி வியல்பூர்வ திட்டமாகும்.

1 தனிமனிதரின் இயல்பு

மார்க்ஸ் ஒரு தனிமனிதரை, ஒருவரது இயல்பு, சுதந்திரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமூகத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைத்துப் பார்க்கிறார். மார்க்சின் பகுப்பாய்வின் தொடக்கப்புள்ளி தனிமனிதர் அல்ல, சமூகமே ஆகும். மக்கள் திரள்களின் செயல்பாடுகளுக்கான அடிப்படை, ஊக்கமளிக்கும் காரணங்கள் அவர்களின் பொருளாதார நலன்களே என்பதே மார்க்சியத்தின் கருத்தாகும். இந்த இரு அம்சங்கள் - பொரு ளாதார நலன்கள் மற்றும்  வர்க்கம்; சமூகக் குழு சார்ந்த அடையாளம் - ஆகியவையே இறுதியில் மக்கள் திரள்களின் பண்புகளையும் நடத்தைகளையும் தீர்மானிக்கின்றன. மனிதரின் இயல்பு பற்றி மார்க்ஸ் கூறும் முக்கியமான முடிவு: ”மனிதரின் இயல்பு சாராம்சத்தில் ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் சுருக்கமல்ல;  அது அனைத்து சமூக உறவுகளின் மொத்தமாகும்.”

2 அந்நியமாதல் பற்றிய கோட்பாடு

உழைப்பின் விளைபொருட்களாக மாறும் செயல்முறையையும் உற்பத்தி முடிந்தவுடன் அந்த உற்பத்திப் பொருட்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் அந்நியமாகி விடுவதையும் சமமாகக் கருத முடியாது. உற்பத்தி இருக்கும் வரை, மனிதரின் ஆற்றல்கள் பொருட்களாக மாறுவது தொடரும். ஆனால் உழைப்பின் அந்நியமாதல் என்பது வரலாற்று ரீதியாக மாறக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இதுஉபரி உற்பத்தியுடன் தோன்று கிறது. இந்த உபரி உற்பத்தியை  சுரண்டும் வர்க்கங்கள் - அடிமை உடைமையாளர்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் - தமக்காக எடுத்துக் கொள்கின்றனர். தனி யார் சொத்துரிமை நிலவும் சூழலில், தொழி லாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்டு குவிக்கப்படும் செல்வம்,  அந்தத் தொழிலாளி யையே சுரண்டும் கருவியாக மாறுகிறது. பொருளாதார கட்டாயம், அரசியல் அடக்கு முறை, ஆன்மீக ஒடுக்குமுறை மற்றும் ஏமாற்று ஆகியவற்றின் அனைத்து வடிவங் களையும் தொழிலாளிக்கு எதிராக திருப்பும் பொருள் சக்தியாக இது மாறுகிறது. இதனால்தான் “தொழிலாளி தனது உழைப்பின் விளைபொருளை பிறருடைய தாக... தனக்கு எதிராக நிற்கும்  பகை சக்தியாக பார்க்கிறார்.” உற்பத்தியின் விளைபொருள் மட்டுமல்ல,  உற்பத்தி  செயல்முறை கூட மனிதரை அந்நியப் படுத்துகிற செயலாக்கமாக உள்ளது: ”தொழிலாளிக்கு உழைப்பு என்பது அவரது இயல்புக்கு வெளியேயுள்ள ஒன்று... அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக மறுக்கிறார்; மகிழ்ச்சியடையாமல் துன்பப்படுகிறார், தனது உடல் மற்றும் மன ஆற்றல்களை சுதந்திரமாக வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக தனது உடலை சோர்வடையச் செய்து தனது மனச் சிந்தனை சக்தியை அழிக்கிறார்.”

3 சுதந்திரமும்  சமூக மாற்றமும்

மார்க்சிய-லெனினியம் கூறுவது என்னவெனில், தொழிலாளியின் சுதந்திரம் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் உற்பத்தி சாதனங்களின் மீதான தனியார் சொத்துரிமை ஒழிப்போடு நேரடியாக தொடர்புடையது.  கம்யூ னிஸ்டுகள் அனைத்து சொத்துக்களையும் அழிக்க விரும்புகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், மார்க்சும் ஏங்கெல்சும், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையில் கூலி உழைப்பைச் சுரண்டும் ‘சுதந்திரத்தை’ - பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி சிறுபான்மையாக உள்ள முதலாளிகள் வளர்வதற்கான சுதந்திரத்தை - பொதுவான தனிமனித சுதந்திரமாக காட்ட முயற்சிப்பதை மறைக்கவே பயன்படுத்தப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தினர். வர்க்கப் போராட்டங்களும் வர்க்க முரண்பாடுகளும் நிறைந்த பழைய சமூகத்திற்கு பதிலாக, உழைக்கும் மக்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியே அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கான நிபந்தனையாக இருக்கும். முதலாளித்துவ தனிமனிதரின் நலனும் சுதந்திரமும் அவரது சொத்தை -செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு தனிமனித சுதந்திரம் என்பது கூலி உழைப்பை சுரண்டும் சுதந்திரத்திற்கு சமமானது. அதே நேரத்தில், பாட்டாளி வர்க்க  தனிமனிதரின் நலனும் சுதந்திரமும் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதிலும், உற்பத்தி சாதனங்களின் கூட்டுடைமையிலும், சுதந்திரமான ஆக்கப்பூர்வமான சுய வெளிப்பாட்டிலும், அவரது ஆற்றல்கள் மற்றும் திறமைகளின் வளர்ச்சியிலும் உள்ளது.

4  சோசலிசத்தில்  தனிமனித வளர்ச்சி

சோசலிச சமுதாயத்தில்தான் முதன் முறை யாக மக்களின் சமூகப் பண்புகள் முக்கி யத்துவம் பெறுகின்றன. மத, இன, தேசிய அல்லது பிற குழு அடையாளங்களை விட  பொதுவான சமூக அடையாளங்களே முன்னிலை பெறுகின்றன. இது கூட்டு உணர்வு மற்றும் சர்வதேசிய மனப்பான்மை வளர்ச்சியில் வெளிப்படுகிறது. மக்கள் தங்கள் உழைப்பால் நாட்டை வலுப்படுத்துவதிலும், சமூக மேலாண்மையில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். சோசலிச தனிமனிதர் என்பவர் கம்யூனிச சித்தாந்தத்தின் நோக்கங்களையும் கொள்கை களையும் உள்வாங்கிக்கொண்ட வர். தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக பொது நலன்களை முன்னிறுத்துபவர். ஆனால் இந்த மாற்றம் தானாக நிகழ்வதில்லை. மக்களை கூட்டுறவு மனப்பான்மையில் கல்வி புகட்டி மறு உருவாக்கம் செய்வதில் சில சிரமங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

நடைமுறை செயல்பாடுகள்

சோசலிச சமூகத்தின் இயல்பு என்ன வென்றால், அது மக்கள் திரளின் செயல்பாடு கள் மூலமாகவும், மக்களின் உயர்ந்த செயல்திறன் மூலமாகவும் மட்டுமே வெற்றிகர மாக செயல்பட முடியும். லெனின் வலியுறுத்தி யது போல, சோசலிசம் மேலிருந்து ஆணைகளால் கட்டப்படுவதில்லை - அதுமக்களின் படைப்பாக்கமே.  பொருளா தாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு என எந்த  பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும், அதன் சோசலிச தீர்வுக்கு மக்கள் திரளின் உணர்வுப்பூர்வ மான பங்கேற்பு தேவைப்படுகிறது. ஏனெனில் இது அவர்களின் நலன்களைப் பற்றியது, அவர்களின் ஒற்றுமை, திறமை மற்றும் கடின உழைப்பை பொறுத்தது.

நிறைவாக...

மார்க்ஸின் அறிவியல் முன்னறி விப்புகள், முதலாளித்துவத்தின் உண்மை யான போக்குகளை ஆய்வுசெய்ததன் விளைவாக, மனிதவாழ்க்கையால் பரந்த அளவில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. நிச்சயமாக மனித வாழ்க்கையானது கோட்பாட்டு ஆய்வுகளை விட சிக்கலானது, பன்முகமானது மற்றும் முரண்பாடுகள் நிறைந்தது. எனினும், உண்மையான சோசலிச சமு தாயத்தின் உருவாக்கம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் கூறியவற்றின் உண்மைத்தன்மையை உறுதியாக நிரூபிக்கிறது.

மனிதனின் இயல்பு வெறும் கருத்தியல் அல்ல; அது அனைத்து சமூக உறவுகளின் மொத்த வடிவமே

தொழிலாளி தனது உழைப்பின் விளைபொருளை எதிரியாகவே காண்கிறார்

முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுதலை பெறாத எந்த சுதந்திரமும் வெறும் ஏமாற்றமே

தனிப்பட்ட நலனுக்கு மேலாக  பொது நலனை முன்னிறுத்துவதே சோசலிச மனிதரின் பண்பு

ஒவ்வொரு வரின் சுதந்திர வளர்ச்சியே அனைவரின் சுதந்திர வளர்ச்சிக்கான நிபந்தனை