articles

img

விளிம்பு நிலை மக்களின் அரசாங்கம் உள்ளாட்சி! =

உள்ளாட்சியில் நமது பங்கு என்ற தலைப்பில் மதுரை, தஞ்சையில் நடைபெற்ற  வாலிபர் சங்க மாநில பயிலரங்குகளில் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் க.பழனித்துரை ஆற்றிய உரை.

இந்திய மக்கள் தொகையில்  பொது விநியோகத் திட்டத்தின் மூலம் 82 கோடி பேர்  உணவு பாது காப்புச் சட்டத்தின் அடிப்படையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெறு கின்றனர். ஆனால் இதே காலத்தில் இந்தி யாவின்  பொருளாதார வளர்ச்சி ஏழு சத வீதமாக உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசாங்கம் தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது. ஏனென்றால்   அரசாங்கம் தெரிவிக்கிற பொருளாதார  வளர்ச்சியா னது அனைத்து மக்களுக்குமானதாக இல்லை. நாட்டின் மக்கள் தொகையில் 58 சதவீத மக்கள் வாங்கும் சக்தி இல்லாத தால் தங்களது உணவுக்கான தேவைக்கு அரசாங்கத்தை நம்பியே உள்ளனர்.  நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் விளிம்பு நிலை மக்கள், துப்புரவு பணியா ளர்கள், மலைவாழ் மக்கள், நாடோடி மக்கள் பற்றிய விவாதங்களே பெரும்பா லும் நடைபெறுவதில்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள் ளன. அதில் எல்லா போராட்டங்களும் கோரிக்கைகளும் வெற்றி பெறுவதில்லை  ஏனென்றால் மக்கள் பார்வையாளராகவே இருந்துள்ளனர். குறிப்பாக தில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டமும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போ ராட்டமும், மேற்கு வங்கத்தில் மருத்துவர் போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது.  ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங் கள் இன்னமும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு சென்றடையாத நிலை உள்ளது. குறிப்பாக கிராமங்கள் அதிகார ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருப்ப தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய விடுதலை இன்னும் கிடைக் கப் பெறவில்லை.  ஆதிவாசி மக்கள், தலித்துகள், பெண் கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்து வம் கிடைக்கும் போது அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதமான இட ஒதுக்கீடு பெண்களு க்கு வழங்கப்பட்டுள்ளது . 

மூன்றாவது அரசாங்கமாக உள்ளாட்சி நிர்வாகம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்  73 மற்றும் 74 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு கிராமங்களை மேம் படுத்த உள்ளாட்சி நிர்வாகம் ஏற்படுத் தப்பட்டது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு  9,9 ஏ படி மூன்றாவது அரசாங்கமாக கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் நாடா ளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு என மூன்று அடுக்கு அரசாங்க அமைப்பு உள்ளது. தற்போது ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடைய அதிகா ரத்தை பறிக்கிறது என மாநில அரசுகள் குற்றம் சாட்டுகின்றன. அதேபோலத் தான் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை மாநில அரசுகளும் பறிக்கின்றன. 

11, 12ஆவது அட்டவணை

1992 இல்  73 ஆவது அரசியலமைப்பு சாசன திருத்தச் சட்டத்தின் மூலம்  சேர்க் கப்பட்ட 11 ஆவது அட்டவணையில்  பஞ்சா யத்துக்கான  அதிகாரங்கள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வீடுகள், சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சார விநியோகம், பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி உள்ளிட்டு 29 வகையான  திட்டங்கள் உள்ளன. 74ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் நகர அமைப்பு திட்டமிடுதல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பொருளா தாரம் மற்றும் சமூக மேம்பாடு  உள்ளிட்டு 18 வகையான திட்டங்கள் உள்ளன.  கிராமப்புற நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு மாநில அரசு நிதி வழங்க வேண்டும். மாநில அரசு உள்ளாட்சி செயல்பாடுகளுக்கான அதிகாரத்தை  சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும்.  கேரள, கர்நாடகா மாநில அரசுகள் சட்டத் தின் மூலம் அதிகாரத்தை வழங்கு கின்றன. சட்டத்தின் மூலமாக வழங்க வேண்டும் என்றால் சட்டமன்றம் மூல மாக தான் வழங்க முடியும்.ஆனால் தமிழக அரசு உட்பட ஏனைய மாநிலங் கள் அரசு ஆணைகள் மூலமாகத்தான் அதிகாரத்தை வழங்குகிறது. 

உள்ளாட்சி பிரதிநிதி சட்டம் 1950-இன்படி கிராம சபை

ஒவ்வொரு கிராம சபையும் வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும். அரசியலமைப்பு சாசனப்படி ஒன்றிய, மாநில அரசுகளை விட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கூடுதலாக உள்ளது.  இதுவரை ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டம் போய்ச் சேராத விளிம்பு நிலை மக்களுக்கு பொருளாதாரம் மேம்பாடு, சமூகநீதி விவாதம் மற்றும் பங்கேற்பு ஜனநாயகத்தை கிராமசபை மூலமாக வழங்குவதே நோக்கம்.  அடித்தட்டு மக்களின் மேம்பாடு என்பது தலித்துகள், ஆதிவாசிகள், பெண் கள்,  விவசாயக் கூலிகள் இவர்களுடைய குடும்ப மேம்பாடு. 

சமூகநீதி

காலங்காலமாக அடிமைப்படுத்தப் பட்ட மக்களுக்கு சமூகநீதி சமத்துவத்தை அரசியல் சாசனம் வழங்குகிறது. ஆனால் சமூகம் அதை நிராகரிக்கிறது. தேர்தல் அர சியல் வலுவான சமூகத்தின் வாக்குகள் தேவை என்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் உள்ளாட்சி அதை செய்தாக வேண்டும் என்கிறது. 

நிதி ஒதுக்கீட்டில் முன் மாதிரி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் உலகத்திற்கே முன்மாதிரி யாக சீன தேசம் தான் உள்ளது. அந் நாட்டின் நிதியில் 42 சதவீதம் நிதியை  உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குகிறது.

விவாத ஜனநாயகம்

உலகிலேயே  அதிகமான எண்ணிக் கையில் மக்களுக்கு விவாத   ஜனநாய கத்திற்கும் பங்கேற்கும் ஜனநாயகத் திற்கும் கிராமசபை மூலமாக வழிவகை செய்துள்ள நாடு இந்தியா மட்டுமே.  இந்தியாவில் 2,50,000 கிராம சபை கள் உள்ளன. இந்த கிராம சபைகள் முறையாகக் கூடி விவாதம் நடந்திருந் தால், கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தால் பல சமூகங்கள் விடுதலை அடைந்தி ருக்கும்.  இந்த நாடு 1947-இல் சுதந்திரம் அடைந்திருந்தாலும் இன்று வரை இன்னும் பல சமூகங்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அடிமைகளாகவே புதிய காலனி ஆதிக்க சமூகத்தில்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  அதிலிருந்து விடுதலை பெற வேண்டு மானால் இந்த உள்ளாட்சி தான் அதற்கு பணி செய்ய முடியும். 

உள்ளாட்சிச் செயல்பாடு

இந்த புதிய உள்ளாட்சியை கைக் கொள்வதற்கான நடைமுறைப்படுத்து வதற்கான திறனும் ஆற்றலும் நுணுக்க மும் தெரிந்தவர்களாக உள்ளாட்சியில்  இருக்க வேண்டும். இங்கே சிக்கலே  என்ன வென்றால் பதவியை பிடிக்க ஆட்கள் தயா ராக இருக்கிறார்கள். பதவியைப் பிடித்தப் பிறகு அதிகாரத்தை பயன்படுத்தி  அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க,  சாதாரண மக்களை மேம்படுத்துவ தற்கான யுக்திகளும் ஆற்றலும் தெரிய வில்லை. இதுதான் இந்திய சமூகத்தின் வீழ்ச்சி. ஜனநாயகத்தின் வீழ்ச்சி. குறைந்தபட்சமாக இந்த உள்ளாட்சி யாரை நோக்கி பயணிக்கச் சொல்கி றதோ, யாரை நோக்கிச் செல்ல வேண்டு மோ, யாருக்காக  உள்ளாட்சி வந்ததோ அதை  நடைமுறைப்படுத்த, எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்க வேண்டும்? அடித்தட்டு மக்களுக் காகப் போராடுகிற    இயக்கங்களுக்குத்  தான் இருக்கிறது.  இப்போது காங்கிரஸ் கட்சி இருக்கி றது என்றால் அது  ஒரிஜினலாக காந்தி வைத்திருந்த காங்கிரஸ் இயக்கமாக  இல்லை. அது சந்தை கையில் உள்ளது. அதே போல் இன்னும் உள்ள கட்சிகள் சந்தை கையில் உள்ளன.  சந்தைக்குள் போகாத இயக்கம் என் றால் அது இடதுசாரிகளாக தான் இருக்க முடியும்.  விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதி வாசிகளுக்கும் பெண்களுக்கும் இட துசாரிகள் முயற்சி செய்யும் போது உள்ளாட்சியில் தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஏராளமான பணிக ளும் இருக்கின்றன. இன்றைய தேர்தல் அரசியல் உள்ள சூழலில்  இடதுசாரிக ளுக்கு  பொறுப்புகளை அடைய வாய்ப்பு இருக்கிறதா, உள்ளதா என்று கேட்டால் உங்களுக்கு சட்டம் தெரிந்து, அமல் படுத்தும் யுக்தி அறிந்திருந்தால், ஆற்றல் இருந்தால் பொறுப்புகளில் இருக்கிறீர்க ளோ இல்லையோ, நீங்கள் தான் மக்கள் தலைவராக இருப்பீர்கள். ஏனென்றால் அங்கே ஒரு இடைவெளி இருக்கிறது.

கிராம சபை அதிகாரம்

கிராமமாக இருந்தால் கிராம சபை, நகரமாக இருந்தால் பகுதி சபை. கிராம சபைக்கு உள்ள வலு நகர சபைக்கு இல்லை. அரசியலமைப்பு சாசனத்தால் உருவாக்கப்பட்டது தான் கிராம சபை. அது கட்டாயமாக ஆண்டிற்கு 6  முறை தமிழகத்தில் கூட்டியிருக்க  வேண்டும். தமிழக அரசின் சட்ட விதிகளின்படி, ஆணைகளின்படி அதிகமான அதிகாரம் கிராம சபைகளுக்கு தான் இருக்கிறது.  1.அரசாங்கத்தின் அவ்வளவு திட்டங்க ளும் கிராமத்திற்கு வருகிற போது திட்டத்தின் பயனாளிகளை கண்டறிந்து அனுமதி கொடுக்கிற அதிகாரம் தலைவ ருக்கோ துணைத் தலைவருக்கோ அல்லது வார்டு உறுப்பினருக்கோ கூட இல்லை. கிராம சபைக்குத்தான் உண்டு.  2.அரசாங்கம் கொண்டு வரும்  திட்டங்கள் சாலை அல்லது கட்டிடம் கட்டுவது என்று எந்த பணியாக இருந்தாலும் அதற்கு அங்கீகாரம் கொடுப்பதும்  இடத்தை தேர்வு செய்வதும் கிராம சபை தான்.  3.பணிகளை இறுதிப் படுத்துவதும் வரவு செலவுகளை சரி  பார்ப்பதும் கிராம சபை தான்.  கிராம சபை கூட்டத்தில் எழுப்பப் படும் கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை அல்லது  ஏற்கனவே முடிவு எடுத்த திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை; அது குறித்து துறை அதிகாரி களிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டும் பதில் கிடைக்க வில்லை என்றால் பஞ்சாயத்து ஆய்வா ளர் (inspector of panjayath - மாவட்ட ஆட்சியர்) அவர்களிடம் எழுத்துப்பூர்வ மாக புகார் அளித்தால்  அவர்கள் நடவ டிக்கை எடுப்பதற்கு அதிகாரம் உண்டு. 

நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு இணையானது

புதிய அரசாங்கமாக உருவாகியுள்ள உள்ளாட்சி அரசாங்கம் தனியாக அல்லாமல் கூட்டுச் செயல்பாடாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த கிராம சபை எப்படி சுருக்கப்பட்டுள்ளது என்றால்  காலையில் கிராம சபை கூடும்.  அங்கு விவாதம் நடக்காது. வடையும் டீயும் தரப்படும்.  மக்க ளும் வருவார்கள், கையெழுத்து போடு வார்கள். கிளார்க் அஜண்டாவை படிப்பார். இது தான் நாம் தற்போது பார்த்து வரும் கிராம சபை.  ஆனால் நாடாளுமன்றத்தை விட, சட்ட மன்றத்தை விட  சிறப்பாக நடைபெறும் கிராம சபைகளும் தமிழகத்தில் உண்டு. ஆய்வுகள்  என்ன சொல்கிறது என்றால், உள்ளாட்சி அரசாங்கமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த அரசாங்கத்திற்கு அதி காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை  மாநில அரசு கொடுக்கவில்லை. அரசி யலமைப்பு சாசனம் கொடுத்திருக்கிறது. அதை எடுத்து சரியாக பயன்படுத்தக் கூடிய தலைவர்களும் இருக்கிறார்கள். இதில் மிகவும் முக்கியமானது உள் ளாட்சி அரசாங்கத்தில் அதிகாரம் பரவ லாக்கப்படும். அதிகாரம் பரவலாக்கப் படும் பொழுது மக்கள் அதிகாரப் படுத்தப்படுவார்கள். அதிகாரப்படுத்தப் பட்ட மக்கள் கேள்வி கேட்பார்கள். பங்கேற்பார்கள். ஆக அங்கே பங்கேற்பு ஜனநாயகம் உருவாகும். கேள்வி கேட்கும் போது, பங்கேற்கும் போது வளர்ச்சிப் பணிகளில் பங்கீட்டு நிதி ஒழுங்காகும். தமிழகத்தில் மட்டும் உள்ளாட்சி களில் 400 திட்டங்கள் உள்ளன. தலித் மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உதவித் தொகை உள்ளது.  உள்ளாட்சி பற்றிய முழுமையான புரிதல் தேவை. உள்ளாட்சி என்பது அர சாங்கம். ஒன்றிய, மாநில அரசுகள் போல உள்ளாட்சியும் செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தலைவர்களுக்கான அதி காரத்தை எந்த அதிகாரியும் தர மாட்டார் கள். ஏனென்றால் உள்ளாட்சியில் பொறுப் புக்கு வரும் தலைவர்களுக்கு விபரம் தெரியாது என்று தெரிந்து வைத்துள்ளார் கள். எங்கே யெல்லாம் விபரம் தெரிந்த தலைவர்கள் இருக்கிறார்களோ அங்கே திறம்படச் செயல்படுகிறார்கள். 

உலக வங்கி ஆய்வு

இந்தியாவில் 17 மாநிலங்களில் 241 கிராமங்களில் 8150 குடும்பங்களில்  உள்ளாட்சி  வருவதற்கு முன்பும் பின்பும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவு தெரிவிப்பது உள்ளாட்சி வந்த பிறகு  சாதாரண மக்களுக்கு குடிநீர் வழங்கப் பட்டிருக்கிறது. பெண்களுடைய பல  பிரச்சனைகள் கிராம சபைகளில் விவா திக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டுள்ளன.  உள்ளாட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் முயற்சியால் போடப்பட்ட சாலைகள், அதிகாரிகளால் போடப்பட்ட சாலைகளை விட தரமானதாக இருக்கி றது. இது போன்ற நிறைய சாதனைகளை உள்ளாட்சிகள் செய்திருக்கின்றன.  இந்த ஆய்வு அறிக்கைகள் சொல்வது என்னவென்றால், எந்த கிராமத்தில் தலை வருக்கு திறன் இருக்கிறதோ, ஆற்றல் இருக்கிறதோ அந்த கிராமத்தில் அந்த தலைவர் மக்களுடைய நம்பிக்கையை பெற்றவராக இருக்கிறாரோ அங்கே இந்த செயல்பாடுகள் நடந்திருக்கிறது. 

கிராம சபை உறுப்பினர்கள்

எந்த கிராமத்தில் இந்த கிராம சபை  உறுப்பினர்கள் (மக்கள்) கிராம சபை என்ன என்கிற புரிதலோடு - கிராம சபைக்கு வந்து  கேள்வி எழுப்பினார்களோ அங்கு நடந்திருக்கிறது.  அடுத்து மிக முக்கியமானது  கிராம சபை உறுப்பினர்கள் தங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.  தாங்களும் ஒரு குடிமகன் அல்லது குடிமகள்   என்கிற புரிதலோடு செயல்பட்டு இருக்கிறார்கள். 

பயனாளி உளவியல்

இந்த 75 ஆண்டு காலத்தில் நாம் என்ன வாக மாறியிருக்கிறோம்? நமது ஒன்றிய,  மாநில அரசாங்கங்கள் நம்முடைய பொது மக்களை ஒரு புதிய  உளவியலுக்குள் பணித்திருக்கிறது. அது என்னவென்றால் பயனாளி உளவியல்.அரசாங்கம் பொதுமக்களை பயனாளி என்கிறது. பயன்களை அரசாங்கம் தருகிறது. எனவே அரசாங்கத்தை பொதுமக்கள் அவர்களுக்கு சேவை செய்ய வந்த அமைப்பாக கருதுகிறார்கள். அரசாங் கத்திற்கு அதிகாரத்தை கொடுத்தது பொதுமக்கள். அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் நாம் சொல்கிறோம் அரசாங்கம் தான் வலு வானது. ஆம், செயல்பாட்டில் வலுவா னது. அந்தச் செயல்பாடு யாருக்கானது? மக்களுக்கு என்றால் எந்த மக்களுக்கு? யாரெல்லாம்  அரசாங்கத்தை பயன் படுத்துகிறார்களோ அவர்களுக்குச் செயல்படுகிறது. யாரெல்லாம் அரசாங் கத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கி றார்களோ அவர்களுக்கு பயன் இல்லை.  ஆக இந்த இடத்தில் தான் உள்ளாட்சி அமைப்பு இருக்கிறது. 

கிராம சபைகளில் விழிப்புணர்வு

தமிழகத்தில் 200 கிராமசபைகளில் ஆய்வு நடந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். குடிமக்கள் என்பது யார், அவர்க ளுக்கு என்ன பொறுப்புகள் இருக்கிறது என்று ஓர் ஆண்டு முழுவதும் 6 கிராம சபை களில்  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தி இருக்கிறார்கள். எங்கே விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்களோ அங்கே கேள்வி கேட்டுள்ளார்கள்; விவாதம் செய் துள்ளார்கள். திட்டமிடலையும் தனி மனித பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும் கிராம சபை தான் முடிவு எடுத்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 400  வகையான திட்டங்களை அரசு வழங்கியி ருக்கிறது.  அது குறித்த விளக்க கையேடுகளை யும் ஊராட்சி தலைவர்களுக்கு கொடுத் துள்ளது. இதை படித்து புரிந்து செயல் படக் கூடிய பஞ்சாயத்து தலைவர்களும் இதே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பஞ்சாயத்து பொறுப்பு களுக்கு வர வேண்டும் என்றால், இன்றைக்கு இருக் கிற  அதிகார அரசியல், கட்சி அரசியல், சந்தை அரசியலாக இருக்கிறது. இதில் நாம் என்ன செய்வது? குறிப்பாக இடது சாரி அரசியல் இதில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்  கொண்டு ஒரு கிராம சபை  உறுப்பினராக இருந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, பஞ்சாயத்து தலைவராக  வேண்டும் என்றால் தேர்த லில் போட்டியிட வேண்டும். ஆனால்  கிராம சபை உறுப்பினராக வாக்காளராக இருந்தாலே போதும். அரசியலமைப்பு சாசனப்படி கிராம சபை செயல்பாடு களில்  நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு சமமானது. ஆனால் ஊராட்சித் தலை வர்களுக்கு இந்த புரிதலும் தெளிவும் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி.  இதே ஒன்றிய அரசு பல புதிய சட்டங்க ளை கொண்டு வந்துள்ளது.  முன்னேற்றம் என்பது உரிமை.  அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தி மற்றும் தகவல் கேட்பது உரிமை, கல்வி அடிப்படை உரிமை.  ஆதிவாசிகளுக்கு, சாலையோர வியா பாரிகளுக்கு, கையால் மலம் அள்ளுப வர்களுக்கான சிறப்பு திட்டங்கள், உரிமைகளை வழங்கியிருக்கிறது.  அரசியலமைப்புச் சாசனம் இவ்வளவு உரிமைகளையும், அதற்கடுத்ததாக அரசாங்கம் அதில் பங்கேற்பதற்கான பங்கேற்பு ஜனநாயகத்திற்கான வாய்ப்பு களையும் வழங்கியிருக்கிறது. இவை அனைத்தையும் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை வசதி களை செய்து கொடுப்பதற்காகத்  தான் கொடுத்துள்ளது. இதை ஒன்றிய, மாநில அரசுகள் செய்ய முடியாது. இதை உள்ளாட்சி தான் மக்கள் பங்கேற்புடன் செய்ய வேண்டும். உள்ளாட்சியில்  மக்கள் பங்கேற்பு என்பது குப்பைகளை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியா ளர்களை சக மனிதனாக மதித்து குப்பை களை பிரித்து கொடுத்து உதவிடுவது உள்ளிட்ட பணிகளில் மக்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். 

அதிகாரப் பரவல்

உள்ளாட்சியில் அதிகாரத்தை பரவ லாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதிகாரத்தை அனுபவித்தவர்கள் அவ்வளவு எளிதாக விட மாட்டார்கள். அதிகாரப் பரவல் சவால் மிகுந்தது. அதிகார பரவல் போராட்டம் மூலமாகத் தான் நடைபெறும். 

நகர்ப்புற உள்ளாட்சி

தமிழகத்தில்  வெட்கக்கேடு என்ன வென்றால் 73ஆவது சட்டத்திருத்தத்தை உள் வாங்கி 1994இல் கிராமப்புற உள்ளாட்சி சட்டம் வந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சிக்கு 74ஆவது சட்ட திருத்தம் வந்தும் நடைமுறைக்கே கொண்டு வரவில்லை. 15 ஆண்டுகள் தொடர்ந்து  இடதுசாரிகள் தான் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அறிக்கைகள் வெளியிட்டார்கள். வேறு கட்சிகள் தலையிடவில்லை.  இந்த முறை அந்த சட்டத்தை திருத்தி புதிய உள்ளாட்சி வந்துள்ளது. அதில் தான் மேயர், துணை மேயர் இருக்கி றார்கள். ஆனால் அந்த புதிய உள்ளாட்சி குறித்து உலக வங்கி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில்   குறைந்தபட்ச அதிகாரம் உள்ளதாக கிராமப்புற உள்ளாட்சி  இருக்கிறது. ஆனால் அந்த குறைந்தபட்ச அதிகாரம் கூட இல்லாததாக அதிகாரிகள் கையி லேயே அதிகாரம் கொண்டதாக நகர்ப்புற உள்ளாட்சிகள் இருக்கின்றன என்று உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சிகள்,  ஆணையர் கையில் தான் இருக்கிறது.  தமிழக அரசின்  சட்ட விதிகளின் படி  கிராமப்புற உள்ளாட்சி வலுவாக இருக்கி றது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி வலு விழந்து அதிகாரிகளின் கையில்  உள்ளது. உதாரணமாக வீட்டு வரியை உயர்த்த வேண்டுமென்றால் மேயர்,  துணை மேயர், மாமன்ற உறுப்பி னர்களை கேட்காமல் ஆணையர் உயர்த்தக் கூடாது. ஆனால் அவர் கேட்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்டால், ஆணையர் சொல்லும் பதிலை  சொல்லு கிற நிலையில் தான் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.  உள்ளாட்சியில் மக்களை ஒருங்கி ணைப்பதற்கான வாய்ப்புகள் இடதுசாரி களுக்கு மட்டுமே இருக்கிறது.

தொகுப்பு : கே.ஆர்.பாலாஜி
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்