articles

எது நடக்கக் கூடாதோ அது நடக்கத் துவங்கிவிட்டது!அ.அன்வர் உசேன்

எது நடக்காமல் இருந்தால் நல்லது என கருதப்பட்டதோ அது நடந்துவிட்டது. அக்டோபர் 1 செவ்வாய் அன்று இரவு ஈரான் கிட்டத்தட்ட 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. இந்த தாக்குதலுக்கு சில முக்கிய காரணிகள் இருந்ததைப் போலவே இதன் விளை வுகளும் அழிவுப்பூர்வமானதாக மாறும் ஆபத்து உள்ளது. எனவேதான் இது நடக்காமல் இருந்தால் நல்லது எனும் பொதுவான கருத்து இருந்தது. இந்த தாக்குதலின் விளைவு சில சமயங்களில் வளைகுடா முழுவதுமே போர்க்களமாக மாறும் ஆபத்து உள்ளது. இதனால் உருவாகும் சூழல்கள் உலகம் முழுவதை யுமே பாதிக்கும். எனினும் இத்தகைய சூழலைத் தான் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இஸ்ரே லும் அதனைத் தூண்டிவிடும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளும் உருவாக்கியுள்ளன. 

இஸ்ரேலின் பிம்பத்தை  உடைத்த ஏவுகணைகள்

அக்டோபர் முதல் தேதியன்று ஈரான் சுமார் 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. இத்தகைய தாக்குதலை இஸ்ரேல் தன் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. இவற்றில் பெரும்பாலும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள். அதே சம யத்தில் சில “ஹைப்பர் சானிக்” எனப்படும் ஏவு கணைகளையும் ஈரான் பயன்படுத்தியுள்ளது. இத்த கைய “ஹைப்பர் சானிக்” ஏவுகணைகள் சில குறிப்பிட்ட தேசங்கள்தான் வைத்துள்ளன. இந்த ஏவுகணை களை தடுப்பதும் அதன் பாதையை கண்டுபிடிப்ப தும் மிக சிரமம். இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத் தைவிட 5 முதல் 25 மடங்கு அதிகம் பயணிக்கும்.  ஒரு வினாடிக்கு 3 முதல் 8 கி.மீ. பயணிக்கத் தக்கவை. அதனால்தான் 1800 கி.மீ. தூரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் கடந்து இஸ்ரேலுக்குள் இந்த ஏவுகணைகள் நுழைந்தன. இஸ்ரேலின் இரும்புக் கவசம் (Iron Dome) எனும் வான் பாதுகாப்பு முறை மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிலை நிறுத்திய பேட்ரியாட் எனப்படும் வான்பாதுகாப்பு மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்பு வளையங்களையும் மீறி ஏவுகணைகள் இஸ்ரேல் மீது பாய்ந்துள்ளன. இந்த ஏவுகணைகளில் 90%ஐ தடுத்து அழித்துவிட்டோம் என இஸ்ரேல் கூறுகிறது. ஈரான் தங்களது 80% ஏவுகணைகள் இலக்கை அடைந்தன என கூறுகிறது. சுற்றுக்கு விடப்பட்டுள்ள பல காணொலிகள், ஈரானின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை வெளிப்படுத்துகின்றன. தனது வான் பாதுகாப்பை மீறி ஒரு ஈ கூட இஸ்ரேலுக்குள் நுழைய முடியாது எனும் பிம்பத்தை ஈரானின் ஏவுகணைகள் சுக்கு நூறாக உடைத்துள்ளன. 

ஏவுகணைகளின் இலக்குகள்

இந்த ஏவுகணைகள் மூலம் மூன்று முக்கிய இடங்களை ஈரான் தாக்க முயன்றுள்ளது. 1. டெல் அவிவ் நகரத்தில் உள்ள இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் தலைமையகம். 2. ஹாட்செரிம் விமான தளம். இங்கிருந்து வந்த இஸ்ரேலிய விமா னங்கள் போட்ட குண்டுகளில்தான் ஹிஸ்புல்லா  தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார்.3. நெவடிம் விமான தளம். இது இஸ்ரேலின் பெரிய ராணுவ விமான தளம் என்பது மட்டுமல்ல; இங்குதான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தந்த F-35 எனும் அதி நவீன போர் விமானங்கள் நிறுத்தப்பட்டி ருந்தன. இவற்றில் 5 முதல் 8 விமானங்கள் அழிக்கப் பட்டன என சில தகவல்கள் உள்ளன. 

182 ஏவுகணைகளை ஈரான் செலுத்தினாலும் ஒரு இஸ்ரேலியர் கூட கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த ஏவுகணை யின் ஒரு துண்டு விழுந்து பாலஸ்தீன இளைஞர்  ஒருவர்தான் உயிரிழந்தார். இஸ்ரேலின் தாக்கு தல்கள் பெரும்பாலும் சாதாரண மக்களைக் கொல் கின்றன. இதற்கு நேர்மாறாக ஈரானின் தாக்குதல் அமைந்தது என்பதை பலரும் கவனிக்கத் தவற வில்லை. இயல்பாகவே, இந்த தாக்குதல்கள் காசா  மற்றும் அரேபிய மக்களிடம் உடனடி மகிழ்ச்சியை விளைவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களால் துயருற்றிருக்கும் மக்களிடம் பெரும் மகிழ்ச்சி உருவானது புரிந்து கொள்ளக்கூடியதே! அதே சமயம் அமெரிக்கா உட்பட கிட்டத்தட்ட அனைத்து மேற்குலக தேசங்களின் தலைவர்களும் ஈரானின் தாக்குதலை “மூர்க்கத்தனமானது” என கண்டித் துள்ளனர். இதே தலைவர்கள் இஸ்ரேல் அரங்கேற் றிய காசா இனப்படுகொலைகளையோ அல்லது லெபனான் படுகொலைகளையோ ஒருமுறை கூட கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவர்க ளுக்கு அனைத்து உயிர்களும் சமமானவைஅல்ல. சில உயிர்கள் முக்கியமானவை. பல உயிர்கள் துச்சமானவை. 

ஈரானின் நிலை

இத்தகைய போரில் ஈடுபடலைத் தவிர்க்கவே ஈரான் பெரிதும் விரும்பியது. இஸ்ரேலைத் தடுக்க உலக நாடுகள் முன்வராத சூழலில் ஐ.நாவும் செய லிழந்த நிலையில் - குறிப்பாக இஸ்லாமிய தேசங் களே கூட கண்டன அறிக்கைகளை தாண்டி எதுவும் செய்ய விரும்பாத சூழலில் -தான் மட்டும் போரில் ஈடுபட்டால் பெரும் இழப்பு என்பதை ஈரான் உணர்ந் திருந்தது. எனவே சாத்தியமான அளவுக்கு போரைத் தவிர்க்கவே ஈரான் முனைந்தது. 

ஈரான் ஜனாதிபதி சமீபத்தில் வெளிப்படுத்திய கூற்று மிகவும் முக்கியமானது: “ஈரானுக்கு வருகை தந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்தே இஸ்ரேல் படுகொலை செய்த பின்னர், இஸ்ரேலை திருப்பித் தாக்க வேண்டிய நிர்ப் பந்தம் எங்களுக்கு இருந்தது. எனினும் அமெரிக்க- ஐரோப்பிய தலைவர்கள் பொறுமை காக்குமாறும் காசாவில் விரைவில் அமைதி உருவாக்க தாங்கள் முனைந்துள்ளதாகவும் திரும்பத் திரும்பக் கூறினர்.  ஆனால், காசாவில் அமைதியும் உருவாகவில்லை. எங்கள் தாக்குதலும் நடக்கவில்லை. இப்பொழுது இஸ் ரேலின் தாக்குதல் லெபனானுக்கும்பரவியுள்ளது.” 

ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவது மிக அபூர்வமானது. இதனை ஏன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஈரானிய ஜனாதிபதி உணரவில்லை என்பது புதிர். 

இஸ்ரேலின் ராணுவ தளபதி முகம்மது பக்கேரிஈரானின் தாக்குதலுக்கு பின்னர் கூறினார்:

“இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்குப் பின்னர் நாங்கள் இஸ்ரேலைத் தாக்குவதை தவிர்க்கவே விரும்பினோம். காசாவில் அமைதி வந்தால் போதும் என நினைத்தோம். ஆனால் எங்கள் தளபதி அப்பாஸ் நில்ப ரோஷன் மற்றும் நஸ்ரல்லாவின் படுகொலைக்குப் பின்னர் எங்கள் பொறுமை அகன்றுவிட்டது.”

இஸ்ரேலின் எல்லையற்ற மூர்க்கத்தனம் காரண மாக ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. நஸ் ரல்லாவின் படுகொலை ஹிஸ்புல்லாவுக்கு மட்டு மல்ல; பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைகளுக்கும் பெரும் இழப்பு. அந்த இழப்பு பெரும் சோர்வை உரு வாக்கியது; இஸ்ரேலின் கை ஓங்கியது எனில் மிகை அல்ல. இதனை தடுக்க வேண்டிய நிலை ஈரானுக்கு உருவாகியுள்ளது. எனவே இந்த தாக்குதல்கள்.

அமெரிக்காவின் நிலை

ஈரானின் நிலை இதுவெனில் அமெரிக்காவின் நிலை வேறுமாதிரியானது. ஈரானுடனான போரைத் தவிர்க்க அமெரிக்காவும் விரும்பியது. இது நல்ல எண்ணத்தால் அல்ல. நவம்பரில் நடக்கவுள்ள ஜனா திபதி தேர்தலுக்கு முன்னர் ஈரானுடன் மோதினால் முடிவுகள் என்ன ஆகும் எனும் கவலை பைட னுக்கும் கமலா ஹாரிசுக்கும்  இருந்தது. இது டிரம்பு க்கு சாதகமாக அமைந்துவிடுமோ எனக் கருதினர். ஒருபுறம் உக்ரைனுக்கும் மறுபுறம் இஸ்ரேலுக்கும்  எல்லையின்றி ஆயுதங்களைத் தர அமெரிக்காவி டம் போதுமான ஆயுதங்கள் இல்லை. உக்ரை னுக்கு அதிக ஆயுதங்கள் தந்தால் அமெரிக்கா வில் உள்ள இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோபம் கொள்கின்றனர். இஸ்ரேலுக்கு அதிக ஆயுதங்கள் எனில் உக்ரைனில் ரஷ்யா முன்னேற அது வழி வகுக்கிறது. இந்தச் சூழலில் ஈரானுடன் நேரடி மோதலைத் தவிர்ப்பது நல்லது என அமெரிக்கா நினைத்தது. இராக்/ லிபியா/ தலிபான் ஆகியோரை துவம்சம் செய்தது போல ஈரானை சிதைக்க இய லாது. மேலும் ஈரானுக்கு ரஷ்யாவும் சீனாவும் துணை நிற்பதும் அமெரிக்காவின் தயக்கத்துக்கு ஒரு காரணம். 

மறுபுறத்தில் எப்படியாவது ஈரானை போரில் ஈடுபடுத்தி அமெரிக்காவை போர் வளையத்துக்குள் இழுக்க வேண்டும் என இஸ்ரேல் முயன்றது. ஈரான் நேரடியாக போரில் ஈடுபட்டால் அமெரிக்கா வும் களத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவா கும் என்பது இஸ்ரேலுக்கு தெரியும். அது இப்பொ ழுது நடந்துவிட்டது போல தோன்றுகிறது. இஸ்ரே லுக்கு பாதுகாப்பு தருவோம் என அமெரிக்கா பகி ரங்கமாக கூறியுள்ளது.

இனி என்ன?

“எங்கள் தாக்குதல்கள் முடிந்துவிட்டன; இனி எங்களது தாக்குதல் தொடராது. ஆனால் இஸ்ரேல் திருப்பித் தாக்கினால் இப்பொழுது நடந்ததைவிட மிகப்பெரிய பதிலடி நடக்கும்” என ஈரான் எச்சரித்துள் ளது. தன்னை யாரும் நெருங்க முடியாது எனும் இஸ்ரேலின் பிம்பம் ஈரான் தாக்குதலில் சிதைந்துள் ளது. எனவே திருப்பித் தாக்கும் ஆத்திரத்தில் அது  உள்ளது. அடுத்த கட்ட தாக்குதல்கள் ஈரான்- இஸ்ரேல் என மட்டும் இருக்காது. அமெரிக்காவும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது. ஈரானிடமும் இஸ்ரேலிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அணு ஆயுதப்போரை விளை வித்துவிடும். குறிப்பாக எந்த கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் மூர்க்கத்தனமாக இயங்கும்இஸ்ரேல் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்காது. 

உக்ரைன்-ரஷ்ய போர்/ தென் சீன பெருங்க டல் மோதல்கள் ஆகியவற்றுடன் இஸ்ரேலின் இனப் படுகொலையும் ஈரானுடனான மோதலும் பெரும் பதற்றச் சூழல்களை உருவாக்கியுள்ளன. இந்த  மூன்று பதற்றங்களுக்கு பின்னாலும் அமெரிக்கா வின் கைங்கர்யமே உள்ளது. வளைகுடா பதற்றம்  எந்த திசையில் பயணிக்கிறது என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.