மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் வழங்கிய எழுச்சிமிகு வாழ்த்துரை!
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சிஐடியு (CITU) 18-ஆவது அகில இந்திய மாநாடு, வெறும் ஒரு அமைப்பின் சந்திப் பாக மட்டுமல்லாமல், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்தக் குரலாகவும், சித்தாந்த ரீதியான ஒருமைப்பாட்டைப் பறைசாற்றும் களமாகவும் மாறியுள்ளது. துவக்க மாநாட்டின் ஒரு பகுதியாக நடை பெற்ற மத்திய தொழிற்சங்கத் தலைவர்களின் வாழ்த்துரை அமர்வில், இந்தியாவின் முன்ன ணித் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒரே மேடையில் அணிவகுத்து நின்றது, இந்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), ஏஐயுடியுசி (AIUTUC), டியுசிசி (TUCC), சேவா (SEWA), ஏஐசிசிடியு (AICCTU), யுடியுசி (UTUC) ஆகிய அமைப்பு களின் தலைவர்கள் நேரடியாகவும், தொமுச (LPF) தலைவர் கு.சண்முகம் வாழ்த்துச் செய்தி வாயிலாகவும் பங்கேற்று, தற்போதைய நவீன பாசிச மற்றும் நவதாராளவாதத் தாக்குதல் களுக்கு எதிராக ஒரு வலுவான வர்க்கக் கூட்டணியின் அவசியத்தை வலியுறுத்தினர்.
வகுப்புவாதச் சூழ்ச்சியும் வர்க்க விழிப்புணர்வும்
ஏஐடியுசி (AITUC) பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் பேசுகையில், தற்போதைய அரசியல் சூழலைச் சித்தாந்த ரீதியாக அம்பலப் படுத்தினார். “இந்த அரசு தொழிலாளர்களை மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் பிரித்தாள நினைக்கிறது. வகுப்புவாத நஞ்சைப் பாய்ச்சி தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதன் மூலம், கார்ப்பரேட் கொள்ளையை எளிதாக்கலாம் என ஆட்சியாளர்கள் கணக்குப் போடுகிறார்கள். ஆனால், நாம் இன்று கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்த 18-வது மாநாடு அந்த ஒற்றுமையை இன்னும் பலப்படுத்தும். தொழிலாளர்கள் தங்களைச் சுரண்டப்படும் வர்க்கமாக உணரும்போது, எந்த வகுப்புவாத சக்தியும் நம்மைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாக முழங்கினார்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் : உரிமைகள் மீதான போர்
ஏஐசிசிடியு (AICCTU) சார்பில் பேசிய கிளிப்டன், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் (Labour Codes) குறித்து ஒரு தீவிரமான எச்சரிக் கையை விடுத்தார். “இந்தச் சட்டத் தொகுப்புகள் என்பது வெறும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங் கள் அல்ல; அவை நமது அடிப்படை உரிமை களான சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை மீதான நேரடித் தாக்குதல். நூறாண்டு காலப் போராட்டத்தின் மூலம் ஈட்டிய உரிமைகளைத் தாரைவார்த்துவிட்டு, தொழிலாளர்களை 18-ஆம் நூற்றாண்டின் அடிமை முறைக்குத் தள்ள அரசு முயல்கிறது. இதை முறியடிப்பது என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்” என்று அவர் விளக்கினார்.
பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் சமூக நீதியும்
பெண் தொழிலாளர்களின் பிரதிநிதியாகப் பேசிய சேவா (SEWA) அமைப்பின் சோனியா ஜார்ஜ், முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான சமூகப் பாதுகாப்பற்ற சூழலை விவ ரித்தார். “புதிய சட்டத் தொகுப்புகளில் மகப்பேறு காலச் சலுகைகள் மற்றும் அடிப்படைப் பாது காப்பு உரிமைகள் கூடப் பறிக்கப்பட்டுள்ளன. இது உழைக்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் வர்க்க அநீதி. பெண்களின் உழைப்பைச் சுரண்டிவிட்டு அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும் முதலாளித்துவச் சிந்தனை யை நாம் வீழ்த்த வேண்டும்” என்று அவர் ஆவேச மாக கூறினார். முறையான ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு என்பது பெண்களின் அடிப்ப டை உரிமை என்பதை அவர் வலியுறுத்தினார்.
தேசத்தின் சொத்துக்களைக் காக்கும் போர்
ஐஎன்டியுசி (INTUC) தலைவர் மந்திரி ராஜசேகர் பேசுகையில், விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டித்தார். “பொது த்துறை என்பது வெறும் கட்டடங்கள் அல்ல, அவை நமது நாட்டின் இறையாண்மை. 32 தியாகிகளின் ரத்தத்தால் உருவான விசாகப் பட்டினம் உருக்காலையைக் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க நினைப்பது தேசத்துரோகம். இந்த மண்ணைக் காக்க சிஐடியு முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எமது சங்கம் என்றும் தோ ளோடு தோள் நிற்கும்” என்று உறுதி அளித்தார். ஏஐயுடியுசி உள்ளிட்ட பிற சங்கங்களின் தலைவர்கள் பேசுகையில், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டனர்.
பிப்ரவரி 12: தொழிலாளர் வர்க்கத்தின் ஒருமித்த முழக்கம்
வாழ்த்துரை வழங்கிய அனைத்துத் தலைவர்களும் தங்களின் உரையில் ஒரு பொதுவான செய்தியைத் திரும்பத் திரும்ப வலி யுறுத்தினர்: “பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்தியப் பொது வேலைநிறுத்தம் இந்தியாவை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். அது மோடி அரசுக்கு நாம் கொடுக்கும் கடைசி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலா ளர்களின் வயிற்றில் அடிக்கும் எந்தச் சட்டமும் இங்கு நிலைக்காது என்பதை நாம் நிரூபிப்போம்.” தங்களின் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து, தொழிலாளர்களின் வாழ்வுக்காகவும் தேசத்தின் சொத்துக்களைக் காக்கவும் அனைத்து மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கைகோர்த்து நின்ற காட்சி, மாநாட்டிற்கு வந்தி ருந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்குப் பெரும் தன்னம்பிக்கையை வழங்கியது. தொமுச (LPF) பொதுச்செயலாளர் சண்முகம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டு, ஒற்றுமையின் வலிமை உறுதிப் படுத்தப்பட்டது. தொழிலாளர்களின் இந்த ஒரு மித்த குரல், நவீன பாசிச மற்றும் கார்ப்பரேட் சக்தி களின் கோட்டையைத் தகர்க்கும் உறுதியுடன் அமைந்தது.
