articles

img

சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கும் தமிழகம் -பெ.சண்முகம்

அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தீண்டாமை கொடுமையும், சாதிய பாகுபாடு களும் இந்தியாவில் குறையவில்லை; தமிழகத்தி லும் குறையவில்லை. மாறாக, சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருப்பது மிகுந்த வெட்கக்கேடானது.

வீட்டுமனைப் பிரச்சனை

வீட்டுமனை என்பது ஒரு மனிதன் குடும்பம் நடத்த கட்டாயம் தேவைப்படுகிறது. சாலை,  சாக்கடையோரத்தில் குடும்பம் நடத்த முடியாது. வீட்டுமனைக்கான இடம் அளிப்பது ஆட்சி யாளர்களின் கடமை. தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருக்கிறது. ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே உத்தரவின் மூலமாக சொந்த வீட்டுமனை இல்லாத 25 லட்சம் குடும்பங்களுக்கு 3 சென்ட் வீதம் கொடுக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு மன மில்லை. பொறம்போக்கு நிலத்திலேயே பிறந்து,  வாழ்ந்து, பொறம்போக்கிலேயே சாகிற எத்த னையோ தலைமுறைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சொந்த குடிமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டு
மனை வழங்கிய பெருமையைப் பெறத்தக்க வகையில் அரசாணைகளை வெளியிட வேண்டும். சொந்த வீட்டுமனை இல்லாத குடும்பமே தமிழகத்தில் இல்லை என்கிற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

வேலையின்மையும் தாராளமயமும்

வேலையின்மை உலகளாவிய பிரச்சனை யாக மாறியிருக்கிறது. பொறியியல் கல்வி பயின்றவர்கள் அதற்கு சம்பந்தமே இல்லாத வேலை செய்து கொண்டுள்ளனர். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, ஊதியம், நிரந்தரமான வேலை சாத்தியமே இல்லை என்னும் நிலைமைக்குத் தான் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஆளாகிக் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் நிரந்தரமான பணிகள் நிரப்பப்படாமலேயே காலி செய்யக்கூடிய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய, மாநில ஆட்சியாளர்கள் நிரந்தர பணியிடங்களை காலி செய்து விட்டு வெளிமுகமைக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் விடுவது என்ற தவறான போக்கிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தாராள மயமாக்கல் கொள்கை என்கிற பெயரில் இந்தியா முழுவதும் இந்நிலை அமுல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

வேலை செய்வதற்கும், உழைப்பதற்கும் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். வேலையையும், உரிய ஊதியத்தையும் கொடு என்று தான் இளைஞர்கள் கேட்கிறார்களே தவிர, வேலை செய்யாமல் சம்பளத்தைக் கொடு என்று கேட்கவில்லை.

வரிச்சுமையும்  விலைவாசி உயர்வும்

சொந்தக் கடை நடத்த வழியில்லாமல் தான் வாடகைக்குக் கடை நடத்துகின்றனர். வாட கைக்கு கடை நடத்துவது குற்றம் என்று சொல்லி ஒன்றிய அரசாங்கம் அந்த வாடகைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதித்திருக்கிறது. டாஸ்மாக் மதுபானங்களைத் தவிர இந்தியாவில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கு வரி போட்டாலும் அந்த வரி மக்கள் தலையில் தான் விழும்.

கடந்த 6 மாத காலமாக கச்சா எண்ணெயின் விலை 18 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல்,  டீசலின் விலை குறையவில்லை. இப்போது தான் லாபம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு, ஆகவே குறைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டதாக பெட்ரோலிய நிறு வனங்கள் கூறுகின்றன. பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்றால் எந்தப் பொருளின் விலையும் குறையாது. இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய ஆட்சியாளர்கள் கவலைப் படாமல் இருக்கிறார்கள். இதனால், மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பழங்குடி மலையாளி சான்றிதழ்

தமிழ்நாட்டின் பல்வேறு மலைகளில் மக்கள் வசிக்கிறார்கள். மலையாளி பழங்குடியின மக்கள் ஏற்கனவே தமிழகத்தில் பழங்குடி பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் கடம்பூர், குத்தியாலத்தூர், பர்கூர் மலையிலும் வசிக்கும் மக்கள் மலையாளி பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. “ஈரோடு” என்ற ஒரு வார்த்தையைச் சேர்ப்பதற்கு கடந்த 45 ஆண்டுகளாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் 1981இல் பிரிந்த பிறகு தமிழ்நாடு அரசாங்கம் ஈரோடு மாவட்ட மலையாளியைப் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையை எம்.ஜி.ஆர். 
காலத்திலிருந்து இப்போதிருக்கிற மு.க.ஸ்டா
லின் வரைக்கும் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசாங்கம் பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லி ஏற்க மறுக்கிறது. மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்கப்படுகிறது. இதனால், இரண்டு தலைமுறை மக்கள் பழங்குடி யினருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

ஒன்றிய அரசாங்கம்தான் “ஈரோடு” என்ற வார்த்தை யை பட்டியலில் சேர்க்க வேண்டும். அல்லது “மாநிலம் முழுவதும்” என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும். வேறு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. அதற்காக 45 வருடங்கள் போராட வேண்டுமா! எனவே, வரும் ஜனவரி 27 முதல் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களும், அவர்களுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுடுகாட்டுப் பிரச்சனை

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அம்பேத்கர் எழுதி வைத்தார். நீக்கமற நிறைந்திருக்கும் போது இப்படி எழுதி வைத்திருப் பது குறித்து கேட்டதற்கு, அப்படியாவது பட்டியல் சாதி மக்களுக்கு உணர்வு பெறட்டும், தீண்டாமை  ஒழிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபடட்டும் என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்.

அரசாங்கத்திற்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சுடுகாட்டிற்கு இடத்தைத் தரவில்லை என்றால், இனிமேல் எங்கள் அமைப்புகள் இருக்கும் எந்த ஊரில் பிணம் விழுகிறதோ அந்தப் பிணங்கள் முழுவதும்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஈரோடு மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டத்தில்  ஆற்றிய உரையின் பகுதிகள்