இலங்கையில் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) யின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா நேர்காணல்...
கேள்வி: தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: நாடாளுமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவு கள் வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றி ருக்கிறது. இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க அரசியல் திருப்புமுனையாகும். பிரதிநிதித்துவ வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஓர் அரசியல் கட்சி இத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
கேள்வி: எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளீர்கள்? அது எவ்வாறு பரவலாக உள்ளது?
பதில்: நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 225 இடங்களில் 159 இடங்களை நம்மால் வெல்ல முடிந்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒரு சிறப்பான அர சியல் தன்மை முன்னுக்கு வந்திருக்கிறது. கிழக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் திரிகோண மலை ஆகிய இரு மாவட்டங்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். கடந்த காலங்களில் ஒரு விதமான அரசியலால் ஆதிக்கம் பெற்றிருந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான மலை நாட்டிலும் நாம் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம்.
கேள்வி: இந்த வெற்றியின் சிறப்பம்சங்கள் என்ன?
பதில்: நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே லட்சி யத்தை நோக்கி முன்னேறும் விதத்தில் வெற்றிக்காக கைகோர்த்திருக்கிறார்கள். எனவேதான் இந்த வெற்றியை மிகவும் சிறப்பான ஒன்றாக நாம் கருதுகி றோம். மேலும், அரசு ஊழியர்களில் 80 விழுக்காட்டி னரும் தங்கள் ஆதரவை நல்கி இந்த வெற்றிக்குத் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கட்டளை முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்டளையாகும். இதுவரையி லும், இதற்கு முன்னிருந்த பல கட்சிகளின் கூட்டணி களால் கட்டமைக்கப்பட்ட வெற்றிகளைக் காட்டிலும் இந்த வெற்றியானது ஓர் அரசியல் ஆழத்தையும் சாராம்சத்தையும் கொண்டுள்ளது.
கேள்வி: இந்த வெற்றிக்கு பங்களித்தவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: இந்த இயக்கத்தை இந்த வெற்றிக்கு கொண்டு வருவதில் பலர் தாங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை சகித்துக்கொண்டனர். பலர் தியாகம் செய்து உழைத்துள்ளனர். மேலும், நமக்கு வாக்க ளித்து உதவியவர்களும் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், நீண்டகாலமாக துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நாங்கள் எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம். அந்த மக்கள் அனைவரின் துணிச்சலும்தான் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது.
கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கிடைத்த ஆதரவு குறித்து என்ன கருதுகிறீர்கள்?
பதில்: குறிப்பாக, வட பகுதி மக்கள் வரலாற்றில் முதன்முதலாக மற்றொரு பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இனவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு தென்னிலங்கை மக்களுடன் கரம்கோர்த்துள்ளார்கள். இதற்கு நாங் கள் அளப்பரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றோம். இனவெறியை விசிறிவிடும் தலைவர்களால் பரப்பப்படும் பொய்கள், புழுகு மூட்டைகள், தவறான கருத்துக்கள் மற்றும் கற்பனைக்கதைகளைக் கொஞ் சம்கூட நம்பாமல் நம்முடன் கைகோர்த்திருப்பதற்கா கவும், நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்று சிந்தித்திருப்பதற்காகவும் நாம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தில் உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவினார்கள்?
பதில்: சிலர், சமூகத்தில் எங்கள் கருத்தை எடுத்துச் செல்வதற்காக, எங்களிடமிருந்து எதையும் எதிர் பாராமல் எங்களுக்குப் பணம் அளித்து உதவியிருக்கி றார்கள். சில இதழாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறு வனங்களில் தங்களுக்கு வேலையிழக்கும் ஆபத்து இருந்தபோதிலும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு எங்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாட்டை முற்றிலு மாக மாற்ற வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் ஏராள மான மக்கள் எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.
கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது இப்போது வாக்குகள் எவ்வளவு அதிகரித்துள்ளன?
பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வெற்றியின் வேகத்தைப் பார்க்கும்போது, சுமார் 56,34,000 வாக்குகளைப் பெற்றிருந்தோம். இந்த பொ துத் தேர்தலில் அதை 68,63,000 ஆக உயர்த்தி இருக்கி றோம். ஒன்றரை மாதங்களில் 12 லட்சம் அதிகரித்தி ருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பல வேகய சுமார் 43,63,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 19,68,000 ஆகக் குறைந்துள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 24 லட்சம் வாக்குகளை இழந்துள்ளனர். ஜனாதி பதித் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட அவர்களால் பெற முடியவில்லை.
கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் என்னவாயின?
பதில்: ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்க சுமார் 22,99,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அவரால் சுமார் 5,00,000 மட்டுமே பெற முடிந்தது. சுமார் 17 லட்சம் பேர் அவரை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த ஒன்றரை மாதங்களில் இந்த அரசியல் கட்சிகள் சரிந்து விட்டன.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலின் போது உங்களுக்கு எதிராக என்னெல்லாம் பிரச்சாரங்கள் செய்தார்கள்?
பதில்: ஜனாதிபதி தேர்தலின் போது ரணிலும், சமகி ஜன பலவேகய கட்சியினரும் பொய்களை கூறி மக்களை மிரட்டினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் வீழ்ச்சி யடையும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ரூபாய் மதிப்பு குறையும் என்றார்கள். இரண்டு கார்க ளில் ஒன்று எடுக்கப்படும், ரத்தம் சிந்தப்படும், அமைதி குலைந்துவிடும், நாடு அழிந்துவிடும் என்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மத வழி பாட்டை அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். அந்த வகையில் அவர்கள் அச்சமூட்டிய சமூகத்தில்தான் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றோம்.
கேள்வி: பின்னர் மக்கள் ஏன் உங்களை ஆதரித்தார்கள்?
பதில்: கடந்த ஒன்றரை மாதங்களில் அந்த அறிக் கைகள் அனைத்தும் பொய் என்பதை மக்கள் உணர்ந்தனர். அதனால் மக்கள் எங்களுக்கு உதவு வது எளிதாக இருந்தது. பொய்யால் வெற்றி பெற முயன்றவர்கள் பொய்யால் தோற்கடிக்கப்பட்டனர். பொதுப் பணத்தைச் சார்ந்து இருந்த பழைய, சிறப்பு ரிமை, குடும்பக் கட்டுப்பாடு, உயர்சாதி ஆதிக்க அரசி யல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பழைய காலம் முடிந்துவிட்டது. இப்போது, சாதாரண மக்களின் அரசியல், ஆட்சியைப் பெற்றிருக்கிறது.
கேள்வி: மத, இன அடிப்படையில் பிரிக்க முயன்றவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததா?
பதில்: நமது நாட்டு மக்கள் மதவெறியை நிராகரித் துள்ளனர் என்பதை இந்த முடிவிலிருந்து அறியலாம். வடக்கின் இனவாதத் தலைவர்கள் வடக்கிற்குச் சென்று இனவாதத்தைத் தூண்ட முயன்றனர். எங்களின் சில அறிக்கைகளைத் திரித்து தமிழ் மக்களுக்கு எதிரான அறிக்கைகளாக காட்ட முயன்றனர். மேலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக முஸ்லிம் மக்களைத் தூண்டி விடவும், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மதவெறியை விசிறிவிட ஆரம்பித்தனர். எனினும் அவர்களின் பொய்களை தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்ப தையே முடிவுகள் காட்டுகின்றன.
கேள்வி: கடந்த 50 நாட்களில் நீங்கள் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினீர்கள்?
பதில்: கடந்த 50 நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் நடைமுறையை நம் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட தைக் காண முடிந்தது. எளிமையான அரசை தொடங்கி னோம். பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல் எப்படி செயல்படுவது என்பதை நிரூபித்துள்ளோம். மக்களுக்கும் மேலே நின்று பிரபுத்துவ மனப்பான்மை யுடன் நாங்கள் நடந்துகொள்ளவில்லை. மக்களோடு மக்களாக உழைத்து நேர்மையாக உழைக்கும் எளிய வர்கள் என்பதைக் காட்டி இருக்கிறோம். அதுவே நமது வாக்குகள் பெருகக் காரணமாக இருந்திருக்கலாம்.
கேள்வி: பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். இந்த அதிகாரத்தை எவ்வாறு கையாள உள்ளீர்கள்?
பதில்: நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான அதிகாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதீத சக்தியைப் பயன்படுத்துவதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். 1977க்குப் பிறகு, ஆட்சிபுரிந்தவர்கள் தங்களுடைய அதீத அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களை அடக்கி ஒடுக்கி, மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், முடிந்தவரை பொதுச் சொத்துக்களை அனுபவித்து வந்தனர். நாங்கள் அரசியல் அதிகார போதையில் இருக்க மாட்டோம். இந்த அதிகாரம் மக் களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும். அதை மிகவும் கவனமாக மக்கள் நலனுக்காகப் பயன் படுத்த வேண்டிய பொறுப்பு நம் முன் உள்ளது.
கேள்வி: உங்கள் முன் உள்ள முக்கிய சவால்கள் என்னென்ன?
பதில்: நம் நாடு மிகவும் வறுமையில் இருந்து வருகிறது. மூன்று வேளையும் உண்ண முடியாத மக்கள் இருந்து வருகிறார்கள். குற்றங்கள் அதி கரித்திருக்கின்றன. போதைப் பொருள்கள் பயன் படுத்துவது அதிகமாகி இருக்கிறது. சர்வதேச சமூ கத்தின் முன்னால் நம் பிம்பம் அழிக்கப்பட்டிருக்கி றது. நாம், நம் மக்களின் அத்தியாவசியப் பிரச்சனை களைத் தீர்க்க வேண்டியிருக்கிறது, கிராமப்புற வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது, ஒரு தூய்மையான இலங்கையை உருவாக்க வேண்டியி ருக்கிறது, கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கமான நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது, மக்களின் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியி ருக்கிறது, நாட்டின் கடனை அடைக்க வேண்டியி ருக்கிறது, வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது.
கேள்வி: தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்களிடையே உள்ள உணர்வுகள் எப்படி உள்ளன?
பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அரசியல் கலாச்சாரம் மாற்றப் பட்டதுடன் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் இடம்பெறவில்லை. எங்களுக்கு வாக்களிக்காத வர்களை அடக்கியாளும் வெற்றியைக் கொண்டாடும் கலாச்சாரத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்காத வர்கள் இம்முறை எங்களுக்கு வாக்களித்திருப்பது எளிதானது.
கேள்வி: இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறதே, இது உங்களுக்கு தலைக்கனத்தை ஏற்படுத்தாதா?
பதில்: குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியைப் பெற்றுள்ளோம். இந்த வெற்றியால் எங்களுக்குத் தலைக்கனம் ஏறிவிடவில்லை. இதன் பின்னே வெற்றி யாளர்கள், தோல்வியாளர்கள் என்று இரண்டு பிரி வுகள் இல்லை. நம் நாட்டு அரசியலுக்குத் தேவைப் படாத அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். இனி அவர்கள் தேவையில்லை.
கேள்வி: புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உங்கள் அழைப்பு என்ன?
பதில்: நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். இது நாட்டுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள், பர்கர்கள், மலாய்க்கா ரர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, வீழ்ந் துள்ள நாட்டை மீண்டும் தூக்கி நிறுத்திடுவோம். இது நம் பொறுப்பாகும். இதற்காக அனைத்துத் தரப்பின ரையும் எங்களுடன் சேர வருமாறு அறைகூவி அழைக்கிறோம்.
கேள்வி: உங்களின் இறுதி இலக்கு என்ன?
பதில்: தேசிய மறுமலர்ச்சி, பொருளாதார மறு மலர்ச்சி, அரசியல் மறுமலர்ச்சி, கலாச்சார மறு மலர்ச்சி, மனித சிந்தனையின் மறுமலர்ச்சி ஆகிய வற்றை உருவாக்கி, நம் நாட்டை உலகில் ஒளிமயமான தாக மாற்றிட நாம் அனைவரும் இப்போதிருந்தே பாடு படுவோம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணை நாட்டிற்கு வெற்றியை பெற்றுத் தருவதற்கு மட்டுமே பயன் படுத்தப்படும் என நாங்கள் உறுதியளிக்கின்றோம். இந்த வெற்றிக்கு எல்லா வகையிலும் உறுதுணை யாக இருந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவ.24)
தமிழில்: ச.வீரமணி