காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சாம்சங் மின்னணு நிறுவ னத்தில் பணியாற்றி வரும் 1500 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலை நிர்வாகம் சுமூகமாக தீர்வு காண்பதற்கு பதிலாக போ ராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சித்து வருகிறது. நிர்வாகத்திற்கு துணையாக காவல்துறை செயல் பட்டு வருகிறது. தொழிலாளர் துறை பிரச்சனைக ளுக்கு தீர்வு காண உரிய முயற்சிகளை மேற் கொள்ளவில்லை.
17 ஆண்டுகளுக்குப் பிறகு உதயமான சங்கம்
சாம்சங் நிறுவனம் 2007ல் உற்பத்தியை தொ டங்கியது. ஆண்டுக்காண்டு லாபம் பெருகி வருகிறது. தொழிலாளர்களின் பிரச்சனைகள் அதி கரித்து வந்தன. நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கம்பெனி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து 17 ஆண்டு காலமாக தொழிலாளர்களின் பிரச்சனை களை தீர்த்து வைப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் சிஐடியு மாவட்டத் தலைவர்களை அணுகினார்கள். 16.06.2024 அன்று நடைபெற்ற தொழிலாளர்கள் பேரவைக் கூட்டத்தில் சங்கம் அமைக்கப்பட்டது. 26.06.24 அன்று சங்க பதிவுக்கான விண்ணப்பம் பதிவாளருக்கு அனுப்பப் பட்டது. 27.06.24 அன்று சங்கம் அமைப்பு மற்றும் நிர்வாகிகள் குறித்த அறிமுகக் கடிதம் நிர்வா கத்திற்கு அனுப்பப்பட்டது. 11.07.24 அன்று ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.
காவல்துறையில் புகார் கொடுத்தால், புகார் கொடுப்பவர்களையே காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுவார்கள் என சங்கத் தலை வர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொழிலாளர் துறை உறுதியாக தலையிடவில்லை. நிர்வா கத்தின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள், மிரட்டல்கள் அதிகமா கின. தொழிலாளர்களைப் பாதுகாக்க வேறு வழி யின்றி 9.9.2024 ல் இருந்து வேலைநிறுத்த போராட் டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
விதவிதமாக மிரட்டிய நிர்வாகம்
இதற்கிடையில் நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்ட தொடங்கிவிட்டது. நிர்வாக அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று தொழிலாளர் குடும்பங்களின் பெண்களிடம், உங்கள் கணவரை சங்கத்தில் இருந்து விலகச் சொல்லுங்கள், இல்லையேல் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என மிரட்டி இருக்கி றார்கள். நிறுவன வளாகத்திற்கு அருகில் உள்ள சந்தவேலூர், திருமங்கலம், எழுச்சூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களை நிர்வாக அதிகாரிகள் சந்தித்து, தொழிலாளர்களை சங்கத்தில் இருந்து விலகும்படி நிர்பந்திக்க வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கி றார்கள். சங்க நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ரூ.40 லட்சம் பணம் தருகிறோம்; ராஜினாமா செய்யுங்கள் என வற்புறுத்தி இருக்கிறார்கள்.
ஒருநாள் பணி முடித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்தை விட்டு வெளியே சென்று கொண்டி ருக்கும் போது அவர்களை அழைத்த நிர்வாக அதிகாரிகள், நீங்கள் யாரும் சிஐடியு சங்கத்தில் சேரக்கூடாது, வெளியிலிருந்து சங்கத்தினர் யாரும் வரக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மற் றொரு முறை தொழிலாளர்களை அழைத்து நிர்வா கம் கூட்டம் நடத்த முயற்சித்தபோது தொழிலா ளர்கள் அனைவரும் அதை புறக்கணித்து வெளியே றியுள்ளனர். மூன்றாவது முறையாக, நிர்வாகத்தின் சார்பில் ஒரு கமிட்டியை உருவாக்கி, இந்த குழு தான் தொழிலாளர் பிரச்சனையைத் தீர்க்கும் என அறிவித்து தொழிலாளர்களிடம் கையெழுத்து கேட்டு உள்ளனர். தொழிலாளர்கள் கையெழுத்து இட மறுத்துவிட்டனர். அப்போது நிர்வாகத் தின் தரப்பில் மிரட்டி இருக்கிறார்கள். சிஐடியு சங்க நிர்வாகி ஒருவரை ஒரு அறையில் அடைத்து வைத்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டி இருக்கிறார்கள். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால் அவரை தொழிலாளர்கள் வெளியில் கொண்டு வந்தார்கள்.சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ராஜினாமா செய்யவில்லை என்றால் ஆம்ஸ்ட்ராங் கிற்கு (படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தலைவர்) ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும் என்று நிர்வாக அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.
வேலை நிறுத்த நோட்டீஸ்
சங்கத்தை சீர்குலைக்க நிர்வாகம் அப்பட்ட மான தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கிவிட்டது. இந்நிலையில் தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிற்சங்கத்தை பாதுகாக்கவும் 19.08.2024 அன்று சிஐடியு தொழிற்சங்கம் நிர்வா கத்திற்கு வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தது. 23.08.2024 அன்று தொழிலாளர் துணை ஆணை யர் முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத்தின் கொலை மிரட்டலை சுட்டிக்காட்டியதோடு, தொழி லாளர் விரோதப் போக்கையும் விளக்கி இதன் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று சங்கத்தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நிர்வாகம் கொலை மிரட்டல் விடுத்தால், காவல் துறையில் புகார் கொடுங்கள் என தொழிலா ளர் துணை ஆணையர் கூறியிருக்கிறார்.
சிஐடியு தலைவர்கள் கைது
ஆலை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட பின்னணியில், 16.09.2024 அன்று ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சிய ரிடம் முறையிட சங்கம் அனுமதி கோரியது. அனுமதி மறுத்ததோடு சங்க தலைவர் இ.முத்துக்குமார் உள்ளிட்டு 118 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட னர். தோழர் முத்துக்குமாரை கைது செய்து தனியாக ஒரு வேனில் காவல் துறையினர் அழைத்துச் சென்று விட்டனர். நாள் முழுவதும் அவர் எங்கு வைக்கப் பட்டு இருக்கிறார் என காவல் துறையினர் தெரிவிக்க வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளரும், சிஐடியு தலைவர்களும் தலை யிட்ட பின்னணியில், முத்துக்குமாரை காவல் நிலை யத்திற்கு கொண்டு வந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த பிறகுதான், அவரை விடுவித்தார்கள்.
காவல் துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 18.09.2024 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் திட அனைத்து தொழிற் சங்கங்களும் முடிவு எடுத் தன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தோடு சிஐடியு மாநிலத் தலைவர், பொதுச்செயலா ளர் உள்ளிட்ட பலரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில் மாநில துறை சார்ந்த அமைச் சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, சங்கப்பதிவிற்கு விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது; சங்கத்தை தொழிலாளர் துறை பதிவு செய்யட்டும்; கோரிக்கைகளை தொடர்ந்து பேசலாம் என்று சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
தொழிலாளர் துறையின் தொழிலாளி விரோதப் போக்கு
பதிவிற்கு விண்ணப்பம் செய்து 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இந்திய தொழிற்சங்க சட்டத்தின் படி- மத்திய அரசு உருவாக்கிய விதிகளின்படி - விண்ணப்பிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் பதிவுச் சான்று வழங்கிட வேண்டும். சங்கத்திற்கு ‘சாம்சங்’ என்ற பெயர் கூடாது என்று நிர்வாகம் ஆட்சேபணை செய்தது. தென்கொரியாவில் உள்ள சாம்சங் கம்பெ னியில் செயல்படும் சங்கத்தின் பெயர் ‘தி நேஷனல் சாம்சங் எலெட்ரானிக் யூனியன்’ என சங்கம் சுட்டிக் காட்டியது. எனவே, சங்கத்திற்கு பதிவு சான்று வழங் காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
இந்நிலையில், சங்கத்தை பதிவு செய்ய தொழி லாளர் துறை பதிவாளருக்கு வழிகாட்டுதல் அளிக்க வேண்டுமென தொழிற்சங்கம் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் தன்னை ஒரு வாதியாக சேர்த்து கொள்ள சாம்சங் நிர்வாகம் மனு போட்டுள்ளது. ஆலை நிர்வாகம் இப்பிரச்சனை யில் நீதிமன்றத்திற்கு வருவதற்கு சட்டத்தில் இட மில்லை என சிஐடியு வழக்கறிஞர் வாதிட்ட போது, நிர்வாகத்தை வழக்கில் சேர்த்துக் கொள்ள அரசு வழக்கறிஞர் வாதிட்டிருக்கிறார்.
இப்பிரச்சனையில் தொழிலாளர் துறை செயலா ளருக்காகவே அரசு வழக்கறிஞர் ஆஜரானார். தொழிற்சங்க பதிவாளர் சாம்சங் தொழிற்சங்க பதிவு குறித்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக முடிவெ டுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டார். இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தை வாதிட அனுமதிக்க வேண்டுமென்று வாதிட்ட அரசு வழக்கறிஞர், சங்கப் பதிவு குறித்து அரசின் கருத்து என்னவென்பது குறித்து ஏதும் சொல்ல வில்லை. இதிலிருந்து சாம்சங் தொழிற்சங்க பதிவு குறித்து அரசின் கருத்து என்ன என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?
1500 தொழிலாளர்கள் நான்கு வாரங்களாக தொ டர்ந்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட் டத்தில் சங்க பதிவு முக்கியமான பிரச்சனையாக இருக்கிறபோது, அது குறித்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மௌனம் காத்ததற்கு என்ன பொருள்? தொழிற்சங்க பதிவு அளிக்க வேண்டுமா, கூடாதா என்பது பற்றி மௌனம் காத்த அரசு வழக்க றிஞர், பதிவு வழங்கக்கூடாது என்று அடம்பிடிக்கும் சாம்சங் நிர்வாகத்தை உயர்நீதிமன்ற வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நிர்வாகத்திற்கு ஆதரவான கருத்தா என்ற கேள்வி எழுகிறது.
இதே பகுதியில் இயங்கும் பல பன்னாட்டு நிறுவ னங்களில், நிர்வாகம் தனது கையாட்களை கொண்டு தொழிற்சங்கம் என்ற பெயரில் உருவாக்கும் ‘பாக்கெட் சங்கங்களுக்கு’ தொழிலாளர் துறை ஓரிரு நாட்க ளிலேயே பதிவு சான்றிதழ் வழங்குகிறது என்ப தும் கவனிக்கத்தக்கது.
உரிமையைப் பறிக்க முயலும் சாம்சங் நிர்வாகம்
தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை தானாக கிடைத்தது அல்ல. கண்ணீரும் செந்நீரும் சிந்தி போராடிப் பெற்ற உரிமையை சாம்சங் நிர்வா கம் பறிக்க முயற்சிக்கிறது. 1918 ஏப்ரல் 27 அன்று பின்னி ஆலை தொழிலாளர்களுக்காக மெட்ராஸ் லேபர் யூனியன் துவக்கப்பட்டது. இத்தொழிற்சங் கத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் அழித்திட ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆலை நிர்வாகம், தொழிற்சங்கத் தலைவர் சர்க்கரை செட்டியார் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தது. உயர் நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்தது.
“நீதிபதிகளே! எனக்கு இருப்பதெல்லாம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த உடையும் வீட்டில் இருக்கும் மாற்று உடைகளும் தான். வேண்டு மானால் நான் உடுத்தியிருக்கும் ஆடைகளை இங்கேயே கழற்றிக் கொடுத்து விடுகிறேன். நீங்கள் தீர்ப்பளித்த தொகையை உங்களால் வசூலிக்க முடி யாது. நீங்கள் என்ன செய்தாலும் தொழிலாளர்க ளுக்காக நான் பணியாற்றுவதை தடுக்க முடியாது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு தொழிற்சங்க வேலைகளில் நான் ஈடுபடுவேன்’’ என சர்க்கரை செட்டியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முழங்கினார்.
இத்தகைய மகத்தான போராட்டத்திற்குப் பிறகு தான் ஆங்கிலேய அரசு 1926 ஆம் ஆண்டு “இந்திய தொழிற் சங்க சட்டம்” என்ற சட்டத்தை இயற்றியது.
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழி லாளர் வர்க்கம் வென்றெடுத்து 98 ஆண்டுகள் ஆகின்றன. காலனி ஆதிக்க அரசு கொண்டு வந்த சட்டம் வழங்கிய உரிமையை, சுதந்திர இந்தியா வில் - அதுவும் தமிழகத்தில் சாம்சங் பன்னாட்டு நிறு வனம் பறிக்கத் துடிக்கிறது.
அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் போராட்டம்
இந்திய தொழிற்சங்க சட்டம் 1926ம் ஆண்டு இயற் றப்பட்டது. சங்கத்தை நிர்வாகங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்ற திருத்தத்தோடு பல திருத்தங்கள் 1947க்குப் பிறகு கொண்டுவரப்பட்டன. அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19(1)(சி), தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமையை அடிப்படை உரிமை என உறுதி செய்துள்ளது.
சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற போராட்டம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல; அரசியல் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய போராட்டமாகும். மாநில அரசு சாம்சங் தொழி லாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்கி; அச்சங்கத்தோடு சாம்சங் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்கள் பிரச்சனைக ளுக்கு தீர்வுகாண தலையிட வேண்டுமென வலி யுறுத்தியும், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத் தை ஆதரித்தும் அக்டோபர் 5இல் (இன்று) இடதுசாரிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)