articles

img

அரசமைப்பு மீதான போலி அக்கறை; மோடி அரசின் இரட்டை வேடம்-டாக்டர் ஜான் பிரிட்டாஸ், எம்.பி.,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்த இந்த விவாதத்தில் நமது ஜனநாயகத்தின் நிலை குறித்த ஆழமான கவ லைகளை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. இன்றைய ஆட்சியாளர்கள் அரசமைப்பின் பாது காவலர்களாக தங்களை காட்டிக்கொள்ள முயற்சிக் கும் வேளையில், அதன் அடிப்படை நெறிமுறை களை எவ்வாறு சீர்குலைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். 

வரலாறு திரிக்கப்படும் விதம்

தற்போதைய ஆட்சியாளர்களின் பார்வையில், இந்திய வரலாற்றை இரண்டாகப் பிரிக்க முடியும். முதல் 65 ஆண்டுகள் - ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸின் காலம் - இன்றைய (பாஜக) ஆட்சியா ளர்களின் பார்வையில் இது கொடூரமான காலம். கடந்த பத்தாண்டுகள் - இவர்களின் (பாஜக) ஆட்சிக்காலம் - பொற்காலம். உண்மையில் இந்த பார்வையே இவர் களின் அரசியல் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

ஜனநாயகம் என்பது மக்களின் நம்பிக்கையால் மட்டுமே வாழ முடியும். அந்த நம்பிக்கை அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இன்று என்ன நடக்கிறது? தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) முதல் தேர்தல் ஆணையம் வரை, ஒவ்வொரு நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகிறது.

நேரு மீதான அவதூறுகள்

இன்றைய ஆட்சியாளர்களின் கதையில், நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் - ஜவஹர்லால் நேரு. அவர் மீதான குற்றச் சாட்டுகளை கையாள தனி அமைச்சகமே அமைக்க லாம் என நான் முன்மொழிந்தேன். இது கேலிதான். ஆனால் வரலாற்றின் உண்மைகள் வேறு சொல்கின்றன.

1967-இல் இதே அவையில், அடல் பிஹாரி வாஜ்பாய் என்ன சொன்னார்? “வால்மீகியின் ராமாயணத்தில் ராமர் சாத்தியமற்றதை சாத்தியமாக்கினார். பண்டித நேருவின் வாழ்க்கையில் நான் ராமரை அடிக்கடிக் காண்கிறேன்” என்றார். இன்று அதே நேரு ராவணனாக சித்தரிக்கப்படுகிறார். இந்த மாற்றம் எதைக்காட்டுகிறது?

 மறைமுக அவசரநிலை

அவசரநிலை பிரகடனம் குறித்து எங்கள் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இன்றைய நிலை என்ன? பிரகடனமின்றியே அவசரநிலை போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரமாக ஜார்ஜ் சோரோஸ் என்ற ஒருபெயரால் நாடாளுமன்றமே முடக்கப்பட்டது. யார் இந்த சோரோஸ்? அமெரிக்காவை தளமாகக் கொண்ட 95வயது நிதி முதலாளி. உலகெங்கும் ஜனநாயக இயக்கங்களுக்கு நிதியுதவி செய்பவர் என்று அறியப்படுபவர். 

ஆனால் இன்று அவரது பெயர் இந்தியாவில் ஒரு பீதியாக மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரது பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 140 கோடி மக்களின் பிரதிநிதிகள் பேசும் உரிமை பறிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றமே முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான விசாரணை பிரதம ரின் அலுவலகம் வரை சென்றுவிடக்கூடும் என்ற அச்சத்தில், அரசு தயங்குகிறது. சில ஆளுநர்களின் பெயர்கள் கூட வெளிவரக்கூடும்.

‘75 வயது விதி’ பிரதமருக்கு பொருந்துமா?

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி விவகாரம் இன்னொரு எடுத்துக்காட்டு. நேரு ஆட்சி யில் அம்பேத்கர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் இன்றைய பாஜக தலைமை, அத்வானிக்கு என்ன செய்தது?

அத்வானி இந்த நாட்டின் பிரதமராக இருந்தி ருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? அவரை  மார்க்தர்ஷக் மண்டல் மாடிக்கு அனுப்பி வைத்தார்கள். அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்ட ‘75 வயது விதி’, இன்று பிரதமருக்கு பொருந்தாதா? பிரதமருக்கு இப்போது 74 வயது. விரைவில் 75 ஆகப்போகிறது. அப்போது என்ன நடக்கும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கட்சித் தாவல்களும் ஜனநாயக சீரழிவும்

இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருப்பது கட்சித் தாவல்கள். புள்ளிவிவரங்கள் பேசுகின்றன - இதுவரை 830 பேர் பாஜகவிற்கு தாவி யுள்ளனர். அவர்கள் அனைவருமே வேட்பா ளர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் சிறிய அளவிலான தாவல்களும் உண்டு. ஆனால் நாட்டில் கட்சித் தாவல் ஒரு நிறுவன ரீதியான நடை முறையாக மாறியிருப்பது இங்குதான்.

பிரதமரின் பதினொரு கட்டளைகள்

மோசேக்கு சீனாய் மலையில் கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளைப் போல, பிரதமர் பதினொரு கட்டளைகளை வழங்கியுள்ளார். முதல் கட்டளை என்ன? ஒவ்வொரு தனிமனிதனும், நிர்வாகமும் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் பிரதமரே மணிப்பூர் சென்று தனது கடமையை ஆற்றவில்லை.

நாடாளுமன்றத்தின் மதிப்பிழப்பு

பிரதமர் ராஜ் கபூரின் குடும்பத்துக்குக் கொடுத்த நேரத்தில் பாதி நேரத்தை இந்த நாடாளுமன்றத்தி குக் கொடுத்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தி ருப்போம். மேலும், ‘தைமூர் எங்கே?’ என்று கேட்கும் பிரதமர், அந்தக் குடும்பத்தின் மீது வெறுப்புப் பிரச் சாரம் நடத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அரசமைப்பின் மீதான இரட்டை நிலைப்பாடு

இன்று அரசமைப்புச் சட்டத்தின் மீது உரிமை கொண்டாடுபவர்கள் (ஆர்எஸ்எஸ்- பாஜக), முன்பு அதே சட்டத்தை என்னவென்று கூறினார்கள்? ஆர்எஸ்எஸ்-ன் ஆர்கனைசர் இதழ் எழுதியது: “முந்தைய பழைய பிரிட்டிஷ் பாட்டிலில் புதிய பெயரில் உள்ள கலப்படம் செய்யப்பட்ட மது”. அதாவது, அவர் கள் அரசமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை; இழிவு படுத்தினார்கள்.இன்று அதே சக்திகள் மக்களுக்கு அர சமைப்புச் சட்டம் குறித்து உபதேசம் செய்கின்றன.

தேசிய ஒற்றுமையின் மூன்று தூண்கள்

இந்த நாட்டின் ஒற்றுமை மூன்று அடிப்படையான கூறுகளால் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும்: 1. ஜன நாயகம்; 2. மதச்சார்பின்மை; 3. கூட்டாட்சி. இந்த மூன்று கூறுகளும் இல்லாமல் நாட்டின் ஒற்றுமையைப் பேண முடியாது.

கூட்டாட்சி அமைப்பின் சீரழிவு

இன்று கூட்டாட்சியின் நிலை என்ன? எதிர்க்கட்சி கள் ஆளும் மாநில அரசுகளை சீர்குலைக்க ஆளுநர் அலுவலகம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்றிய அரசு மூன்று வழிகளில் மாநில அரசுகளை நடத்துகிறது: 1. அவதூறு செய்தல்; 2. பாகுபாடு காட்டுதல்; 3. சீர்குலைக்க முயல்தல்.

 கேரளாவின் எடுத்துக்காட்டு

கேரளம் தேசிய கருவூலத்திற்கு எவ்வளவோ பங்க ளிப்பு செய்கிறது. ஆனால் வயநாடு பேரிடருக்கு ஒரு பைசாகூட ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை. பிரதமர் கேரளம் வந்து, ஒரு குழந்தையைத் தன் மடியில் வைத்து புகைப்படம் எடுப்பதற்கான செலவையும் மாநிலமே ஏற்க வேண்டியுள்ளது. நாங்கள் இந்த நாட்டின் ஓர் அங்கம் இல்லையா?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ -  கூட்டாட்சிக்கான அச்சுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் உண்மை யில் ‘ஒரே தலைவர், ஒரே நாடு, ஒரே சித்தாந்தம்’ என்பதன் விரிவாக்கமே. இது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை அழிக்கும் முயற்சி. உண்மையிலேயே நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால், இன்றைய அரசமைப்புச்சட்டம் இந்தியா மீதான பிரிட்டிஷ் தந்திரம் என்று எழுதியதற்கு இந்த அவையில் மன்னிப்பு கேளுங்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால், “நாங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருந்தோம்” என்று கூற முன்வாருங்கள்.

மாநில உரிமைகளை மதியுங்கள்

இந்த நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றால், மூன்று அடிப்படைக் கொள்கைகளை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும்:

- மதச்சார்பற்ற தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.
- கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
- ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் தனது பதினொரு கட்டளைகளை பறை சாற்றுவதற்கு முன், தான் கூறியவற்றை நிறைவேற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண் டும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைமீட்டெடுக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.

இல்லையெனில், அரசமைப்பின் பாதுகாவலர் கள் என்ற இன்றைய உங்களது கோஷம், நாளை வரலாற்றின் மிகப்பெரிய ஏமாற்று என்று பதிவாகி விடும். அரசமைப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுதப்பட்டுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி இந்தியாவின் கனவு, வெறும் கனவாகவே மாறிவிடக் கூடாது. அதற்காக போராடுவதே இன்றைய தலை முறையின் வரலாற்றுக் கடமை.

மாநிலங்களவையில் டிசம்பர் 18, 2024 அன்று நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்தின்போது ஆற்றிய உரையின் பகுதிகள்.
தமிழில் : ச.வீரமணி