articles

img

அறிவியல் கதிர் - ரமணன்

சூரியனின் இயக்கமும் தாழ்தள விண்கல வீழ்வுகளும் 

ரியன் அண்மைக்காலங்களில் மிகவும் அதிக வெப்பத்தை வீசுகிறது. அதன் தாக்கம் ஸ்டார்லிங்  கின் நூற்றுக்கணக்கான விண்கலங்களின் மீது அதி கம் ஏற்பட்டுள்ளது. நாசாவின் விண்வெளி மையத்தை சேர்ந்த இயற்பியலாளர் டென்னி அலிவெயிரா குழு வினர் 2020-2024 காலங்களில் தரையில் விழுந்த 523 ஸ்டார்  லிங்க் விண்கலங்களை ஆய்வு செய்ததில் சூரியனின்  வெப்பம் அதிகரிக்கும் காலங்களில் அதன் நேரடி தாக்க மாக தரையில் விழும் விண்கலங்களின் எண்ணிக்கையும்  அதிகரிப்பதை கண்டனர். ‘இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் பூமியின் தாழ்வட்டப் பாதை யில் சுற்றும் விண்கலங்கள் எண்ணிக்கையும் சூரிய  இயக்கமும் மனித வரலாற்றிலேயே இந்த சூரிய சுழற்சி  காலத்தில்தான் அதிகமாக உள்ளன’ என்கின்றனர் இந்த  ஆய்வாளர்கள்.  சூரிய சுழற்சிக் காலம் என்பது 11 ஆண்டுகள் ஆகும்.  இந்த காலத்தில் சூரியனின் துருவ முனை காந்தப்புலம்  எதிர்ப்புறமாய் திரும்புகிறது. அப்போது சூரியனின் இயக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் மாறுகிறது. சூரியப்  புள்ளிகள், சூரிய தெறிப்புகள், கரோனல் பொருள்  வெளித்தள்ளுதல் போன்றவையாக அது வெளிப்படு கிறது. துருவங்கள் மாறும்போது அவை படிப்படியாக உயர்ந்து பின் படிப்படியாக குறைகின்றன. நாம் சூரிய  இயக்கத்தை ஆய்வு செய்யத் தொடங்கியபின் நிகழும்  25ஆவது சுழற்சியான இது மிகவும் வலிமையானதாக உள்ளது. ஆகவே பூமியின் மீது அதன் தாக்கமும் அதிக மாக இருக்கிறது. அதிகரிக்கும் இந்த சக்தி பூமியின் வளிமண்டலத்தை தாக்கி தாழ்வான சுற்றுவட்டப் பாதை யில் உள்ள விண்கலங்களின் மீதான இழுவை அதி கரிக்கிறது. எனவே அவை தற்போதுள்ள கோணத்தில்  சுற்ற இயலாது. வானத்திலே இருக்க வேண்டுமென் றால் அவை சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். “ நாங்கள் ஸ்டார்லிங்கின் தரவுகளை பயன்படுத்தி சகாப்த கால உயரம், வேகம் ஆகிய தரவுகளை இணைத்து வெவ்வேறு வேகம் கொண்ட வான் புயலின்  தாக்கத்தை அறிந்தோம். ஸ்டார் லிங்க் விண்கலங்கள் தரையில் விழுவதும் 25ஆவது சூரிய சுழற்சி காலமும்  பொருந்துகின்றன” என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.  எடுத்துக்காட்டாக ஸ்டார்லிங்க் விண்கலங்களை ஏவத்  தொடங்கிய 2019இலிருந்து தரையில் விழுந்த அதன்  விண்கலங்கள் எண்ணிக்கை 2020- 2; 2021- 78; 2022- 99; 2023- 88; 2024 - 316. இந்த தாக்கம் ஸ்டார்லிங்க் விண்கலங்  களை மட்டுமல்ல தாழ் வட்டப் பாதையில் சுற்றும் எல்லா  விண்கலங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஸ்டார் லிங்க் அதிகப்படியான விண்கலங்களை(8873) ஏவி யிருப்பதாலும் அவற்றில் 7669 கலங்கள் இயங்கி கொண்டிருப்பதாலும் அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு குறித்து அதிக தரவுகள் இல்லை என்றாலும் தாழ் வட்டப் பாதையில் சுற்றும் விண் கலங்கள் மற்ற கலங்களுடன் மோதாமல் அவற்றின் பாதையிலேயே இருக்க தேவையான உத்திகளை வகுக்க இந்த ஆய்வு உதவலாம். இந்த ஆய்வு Frontiers in Astronomy and Space Science என்கிற  இதழில் வந்துள்ளது என்கிறது சயின்ஸ் அலர்ட் (sciencealert).  வளிமண்டலத்தின் ‘தாகமும்’ பூமியின் வறட்சியும்  உலகளவில் வறட்சி தீவிரமாகவும் விரிந்தும் நிலவத்  தொடங்கியுள்ளது. இதற்கு, மாறிவரும் மழைப் பொழிவு மட்டுமே காரணமல்ல. வளிமண்டலத்தின் ‘தாகம்’ (atmospheric evaporative demand (AED) அதிகரித்திருப்பதும் காரணம் என்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாலமன்  ஜெபிரிசார்க்காஸ் குழுவினர் செய்துள்ள ஆய்வு. கடந்த நாற்பதாண்டுகளில்(1981-2022) அதிகரித்துள்ள வறட்சிக்கு வளிமண்டலத்திற்கு நீராவியாகும் போக்கே 40% காரணம் என இந்த ஆய்வு காட்டுகிறது. மழைப்பொழிவை வருவாயாகவும் நீராவியாவதை செலவினமாகவும் எடுத்துக்கொண்டால் எப்படி வருமானம் குறையாவிட்டாலும் செலவு அதிகமானால் துண்டு விழுமோ அதுபோல, வளிமண்டலமானது நிலம் கொடுக்க முடிவதைவிட அதிகமாக எடுத்துக் கொள்கிறதாம். புவி மண்டலம் வெப்பமாக வெப்பமாக, நிலம், நதி, ஏரி, தாவரங்களிலிருந்து கூட ஈரப்பதம் அதிகமாக  உறிஞ்சப்படுகிறது. வளிமண்டலம் அதிக சூடாக, அதிக  பிரகாசமாக, அதிக காற்றோட்டமாக, அதிக வறண்ட  நிலையாக இருக்க இருக்க அதிக அளவு நீர் அதற்கு  தேவைப்படுகிறது. அதனால்தான் மழைப்பொழிவு குறையாத பிரதேசங்களில் கூட மோசமான வறட்சி யை பார்க்கிறோம். வறட்சியை மோசமாக்குவது மட்டு மல்ல புதிய பகுதிகளையும் வறட்சிக்குள்ளாக்குகிறது. 2018இலிருந்து 2022 வரை பூமியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி 74% ஆக உயர்ந்தது என்றால்  அதில் 58% AEDயால் உண்டானது. இதன் விளைவாக  ஐரோப்பாவில் நதிகளில் நீரோட்டம் குறைந்து மின்சார  உற்பத்தி பாதிக்கப்பட்டது. பயிர் விளைச்சல் குறைந் தது. பல நகரங்களில் குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரமும் பொருளாதார நிலைத்தன்மையும் கேள்விக்குறியானது.  இந்த ஆய்வில் வெப்பம், காற்றின் வேகம், ஈரப்பதம்,  சூரியக் கதிர் வீச்சு போன்ற தரமான புவி பருவநிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தக் காரணிகளே நிலத்திலிருந்தும் தாவரங்களிலிருந்தும் எவ்வளவு நீர் உறிஞ்சப்படும் என்பதை தீர்மானிக்கின்றன. மழைப்பொழிவையும் இந்த தாக குறியீட்டையும் இணைத்து வறட்சி குறியீடு தயாரிக்கப்பட்டது. அதன்  மூலம் எவ்வளவு வறட்சி வளிமண்டலத்தின் தாக்கத்தி னால் ஏற்படுகிறது என்பதை கணக்கிடலாம். வறட்சி யினால் பாதிக்கப்படக் கூடிய மேற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு மற்றும் தென் ஆஸ்திரேலியா, தென் மேற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு வளிமண்டலத்தின் தாகம் முக்கியத்துவம் வாய்ந்தது.  அரசாங்கங்கள் திட்டமிடுவதற்கு வறட்சி எத னால் ஏற்படுகிறது என்பது முக்கியம். அது மழைப் பொழிவு குறைவினால் ஏற்படுகிறது என்றால் நீர் மேலாண்மை கவனம் பெறும். அது AEDயினால் ஏற்படு கிறது என்றால் நீராவியாதலை தடுக்கும் வழிகளான வறட்சியை தாங்கும் பயிர்கள், திறனான வழியில் நீரை பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகள், நில வளத்தை மேம்படுத்துதல், ஈரப்பதத்தை தக்கவைக்கும் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் போன்ற உத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆய்வு நேச்சர் (‘Nature’) என்கிற இதழில் வந்துள்ளது என்கிறது சயின்ஸ் அலர்ட் (sciencealert). குறு தூக்கத்தினரும் குறைவான தூக்கத்தினரும்  நம்மில் பலருக்கும் எட்டு மணி நேர தூக்கம் தேவைப்படுகிறது. ஆனால் சிலர் சில மணி நேரங்களே உறங்குகின்றனர். இவர்கள் வாழ்நாள் முழுவதும் இதே பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களை இயல்பான குறு தூக்கத்தினர்(natural short sleepers) என்கின்றனர். பொதுவாக குறைவான நேரம் தூங்கும்போது எல்லோ ருக்கும் ஒருவித கலக்க உணர்வும் தெளிவற்ற நிலைமை யும் இருக்கும். இனிப்பான பொருட்களையோ காப்பி போன்ற பானங்களையோ நாடுவோம். ஆனால் குறு  தூக்கத்தினர் சோர்வாக உணர்வதில்லை. பகலில்  குட்டி தூக்கம் போடுவதில்லை. தூக்கம் குறைவத னால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதில்லை.  2010ஆம் ஆண்டில் இதற்கான காரணம் என்னவென்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.  குறு தூக்கத்தினரின் சில மரபணுவில் அரிதான மாற்றம் உள்ளது. அது அவர்களது தூக்கத்தை திற னுள்ளதாக மாற்றுகிறதாம். 2025இல் இத்தகைய மரபணு  மாற்றம் பெற்ற 70 வயது மூதாட்டி ஒருவர் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஆறு மணி நேரமே உறங்கிய போதிலும் நல்ல உடல் ஆரோக்கியம், கூர்மையான மனத்திறன் ஆகியவற்றோடு சுறுசுறுப்பான செயல் பாட்டினையும் கொண்டிருக்கிறார். ஆனால் சிக்கல் என்னவென்றால் குறைவான நேரம் தூங்குபவர்கள் பலரும் தங்களை இயல்பான குறுதூக்கத்தினர் என்று  நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது உண்மை யல்ல. அவர்கள் நீண்ட காலமாக தூக்கம் மறுக்கப்பட்ட வர்கள்; நீண்ட நேர வேலை, சமூகப் பணிகள், அல்லது  குறைவான நேரம் தூங்குவது வலுவை அல்லது செயல்திறனைக் காட்டுவது என்கிற எண்ணம் போன்றவற்றால்தான் அவர்கள் குறைவான நேரம் உறங்குகின்றனர்.  குறைவான நேரம் உறங்குவதன் விளைவு கொஞ்சம்  கொஞ்சமாக அதிகரித்து ‘தூக்கக் கடன்’(“sleep debt”) என்பதற்கு இட்டு செல்லும். இதனால் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியாமை, ஏற்ற இறக்கமான உணர்வ லைகள், குறுதூக்கம், செயல்படும் திறமை குறைவது  போன்றவற்றுடன் நீண்ட கால உடல்நல ஆபத்துகளும் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக குறைவான உறக்கம் உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று காட்டப்பட்டிருக்கிறது. வார நாட்களில் இழந்த தூக்கத்தை ஈடு செய்ய சிலர் வார விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்கு வது, நேரம் கிடைக்கும்போது குட்டி தூக்கம் போடு வது ஆகியவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். இது குறை வான தூக்கத்தின் விளைவுகளை சற்று குறைக்கலாம்; அதுவும் குறுகிய காலத்திற்குத்தான். இது சரியான தீர்வல்ல. அண்மையில் நடைபெற்ற பெரும் ஆய்வு ஒன்றில் வார விடுமுறை நாட்களில் எடுத்துக் கொள்ளும்  அதிக நேர தூக்கம், குறைவான தூக்கத்தின் நீண்ட நாள்  விளைவான இதய நோய் ஆபத்துகளை குறைப்ப தில்லை என்று காட்டியுள்ளது.  மேலும் உறக்க நேரத்தை அடிக்கடி மாற்றுவது நம் உடலின் உள்கடிகார அமைப்பை சிதைத்துவிடும். வய தானவர்களுக்கு சில உடல் நோயினால் தூக்கம் பாதிக்கப்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேர தூக்கம் தேவை. தூக்கம் ஒரு சொகுசு அல்ல; அது உயிர் இயக்கத்தின் அவசியம்.  (கெல்லி சான்சம், ஆய்வாளர், பிளிண்டர்ஸ் பல்க லைக்கழகம்- பீட்டர் ஈஸ்ட்வுட், துணை வேந்தர், முர்டாக்  பல்கலைக்கழகம் - சயின்ஸ் அலர்ட் (sciencealert.)

நீல ஜுவாலை உமிழும் அதிசய எரிமலை

சிவப்பும் மஞ்சளும் ஒன்றுசேர்ந்த உருகிய குழம்பும் உயர்ந்து பொங்கி எழும் புகைச்சுருள்களும் காட்சி  தரும் இடத்தைதான் எரிமலை (Volcano) என்ற  சொல் குறிக்கிறது. ஆயிரத்திற்கும் கூடுதலான டிகிரி செல்சி யஸ் வெப்பநிலையில் உருகியோடும் இத்தகைய இடங்கள் ஆச்சரியத்தை விட பீதியையே ஏற்படுத்துகிறது. ஆனால் வித்தி யாசமான, காண வருவோரைக் கவர்ந்திழுக்கும் ஒரு எரிமலை பூமியில் இருக்கிறது என்றால் அது இதுதான். குழம்பில் இருந்து நீல நிற ஜுவாலைகள் உயரும் ஒரு எரிமலைப் பகுதி இது. ஆகாயத்தையும் ஆழ் கடலையும் விட அழகானது இரவில் இந்த நீல நிற எரிமலை ஜுவாலைகளுக்கு ஆகாயத்தையும் ஆழ் கடலையும் விட அழகு நிறைந்தது. இது இந்தோனேஷியாவில் காவா இஜின் (Kawah Ijen) என்ற இடத்தில் அமைந்துள்ளது. சாகசப் பயணிகளுக்கு விருப்பமான இடம் இது. எரிமலைப் பகுதியில் நீல ஜுவாலை கள் மட்டும் இல்லை. அருகில் உள்ள பசுமை கலந்த நீல நிற முள்ள தடாகமும் வருவோரை கவர்கிறது. ஆனால் இந்த  ஜுவாலைகளும் தடாகத்தில் உள்ள நீரும் ஆரோக்கியமான தில்லை என்பதே உண்மை. ஜாவாவில் அமைந்துள்ள இந்த எரிமலைப் பகுதி 20 கிலோ மீட்டர்/12 மைல் பரப்புள்ளது. இப்பகுதியின் மிக உயரமான  முனை எரிமலை என்று பொருள்படும் குனங்மெராபி (Gunung Merapi). இஜின் மலைப்பகுதி (Mount Ijen  area), புலவ் மெரா பீச் (Pulau Merah Beach), அலாஸ்  பர்வோ தேசீயப் பூங்கா (Alas Purwo National Park) ஆகிய  பகுதிகளில் இஜின் நிலவியல் பூங்கா (Ijen Geopark)) அமைந்துள்ளது. 2023 இல் இது யுனெஸ்கோ நிலவியல் பூங்காக்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. குனங் மெராபியின் மேற்குப்  பகுதியில்தான் இஜின் எரிமலை அமைந்துள்ளது. எரிமலை யின் ஒரு பகுதியாக அமில ஏரி (acidic crater lake) உள்ளது.  இதன் அகலம் ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர். உலகின் மிகப்பெரிய அமில ஏரி இதுவே. நீல ஜுவாலைகளின் இரகசியம் இஜினின் நீல ஜுவாலைகளுக்கும் புகைச்சுருள் களுக்கும் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதற்கு காரணம் இஜின் எரிமலையில் கந்தகம் (Sulphur) உள்ளதே.  இத்தனிமத்தின் மிகப்பெரிய சேகரம் இங்கு உள்ளது. எரிமலை வெடிப்பு மூலம் உண்டான விரிசல்கள் வழியாக எரிமலைக் குழம்பில் உள்ள கந்தகம் வெளியே வருகிறது. உருகி ஓடும் எரிமலைக் குழம்பில் இருந்துவரும் புகையும் நீல நிறத்தில் உள்ளது. கந்தக அமிலம் எரிவதே நீல நிற ஜுவாலைக்கு காரணம்.  600 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலையில் எரிமலைக் குழம்பு உருகுகிறது. அமிலத்தின் ஒரு பகுதி குளிர்ச்சியடைந்து மீண்டும் திரவ நிலைக்கு மாறுவதே ஜுவாலைகள் தொடர்ந்து  எரியக் காரணம். தாழ்வாக அமைந்துள்ள தடாகத்தில் செல்வ தற்கு இடையில் ஜுவாலைகள் எரிந்து விழுவது அற்புதக் காட்சி. இது குழம்பு கீழே உருகியோடுவது போல தோன்றும்.  ஜுவாலைகள் 16 அடி/5மீட்டர்வரை உயரம் வரை எழும்பும். எத்தியோப்பியா டாலோல் எரிமலைதான் பூமியின் மிகப்பெரிய எரிமலை. இது நீல ஜுவாலைகள் உள்ள மற்றொரு பிரதேசம். இஜின் எரிமலையின் சிறப்புகளை விவ ரித்து நேஷனல் ஜியோகிராபிக் அலைவரிசை தயாரித்து  வெளியிட்ட ஆவணப் படத்தைத் தொடர்ந்து இங்கு வரும்  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கி யது. இரவில்தான் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. சட்டென்று உயரமாக எழும்பியும் திடீரென்று தாழ்ந்தும்  உள்ள சாகசம் நிறைந்த இரண்டு மணி நேரப் பயணம் இது. நடக்க இயலாதவர்கள் தள்ளு வண்டிகளில் செல்லலாம். இரவில்தான் நீல ஜுவாலைகள் கவர்ச்சி அதிகம் உள்ள தாக மாறுகின்றன. எரிமலை சுற்றுலாவிற்குப் பிறகு தடாகக்  கரையில் நடக்கும் 45 நிமிட பயணமும் உள்ளது. வருவோரை  காத்து கரையில் மற்றொரு அற்புதம் உள்ளது. கந்தகச் சுரங்கம் இங்குள்ள தொழிலாளர்களே உலகில் மிக ஆபத்தான சுரங்கத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கு சுலபமாக கிடைக்கும் கந்தகம், கந்தக அமிலம் உள்ளிட்ட பல முக்கியப்  பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. உருகி ஓடும் குழம்பில் இருந்து கந்தகம் பெறப்படுகிறது. இது குளிர்ந்து கந்தகக் கட்டிகளாக மாறுகின்றன. மஞ்சள் நிறத்தில் உள்ள கட்டிகளை சேகரித்து கீழே கொண்டு வருவதில் இங்குள்ள தொழிலாளர்கள் கைதேர்ந்த நிபுணர்கள். சுற்றுலா வரும் பயணிகளை இவர்கள் கவனிப்ப தில்லை. 13 டாலர்கள் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு தினக்கூலி யாகக் கிடைக்கிறது. நாள்தோறும் 75-90 கிலோகிராம் வரை  உள்ள கந்தகத்தை சேகரித்து எடுத்துவருகின்றனர். கரையில்  இருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள கந்தகக் கட்டிகள் அடங்கிய சுமையுடன் தொழிலாளர்கள் குட்டைகளை நோக்கி  வருவர். கரைக்கு வந்த இவர்கள் மீண்டும் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழ்நோக்கி சென்று மீண்டும் கந்தகம் எடுக்கத் தொடங்குவர். பெரும்பாலான நாட்களில் இவ்வாறான ஏறி இறங்கும்  வேலை இரு முறை நடக்கிறது. இங்குள்ள வளி மண்டல  வெப்பநிலை 45 முதல் 60 டிகிரி செல்சியஸ். தொழிலா ளர்களுக்கு அவர்கள் எடுத்து வரும் கந்தகத்தின் எடைக்கு ஏற்ப அருகில் இருக்கும் கந்தக சுத்திகரிப்பு ஆலையில் கூலி  வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் போதிய பாது காப்பு வசதிகள் இல்லாமல் பணி செய்கின்றனர். இதனால் இங்குள்ள பெரும்பாலானோருக்கு சுவாசக்  கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் அதிகமாக ஏற்படு கின்றன. பல தொழிலாளர்களின் ஆயுட்காலம் 50 ஆண்டு கள் மட்டுமே. அதி அற்புத அழகை விட ஆபத்தானது இந்த கந்தக அமில தடாகம். பெரிய பரப்பில் அமைந்திருக்கும் இங்குள்ள நீரில் கந்தக அமிலமே அதிகம் கலந்துள்ளது. அமிலத் தன்மை மட்டுமல்ல தடாகத்தின் வெப்பநிலையும் அதிகம். கந்தகம் அடங்கிய வாயுவும் தடாகத்தில் இருந்து உமிழப்படுகிறது. வெறும் கண்களுடன் தடாகத்தின் கரையில்  இருப்பது நல்லது இல்லை. சுற்றிப்பார்க்க வருவோருக்கு சிறப்பு கண்ணாடிகள் கொடுக்கப்படுகின்றன. தடாகத்தை  சுற்றி தெளிவான மஞ்சள் நிறம் உள்ளது. புகைப்படலங்க ளும்உள்ளன. இங்குள்ள நீரின் பிஹெச் (pH) 0.5. இது மின்கலங்களில் உள்ள அமிலத்தின் பிஹெச் அளவிற்கு சமமான அளவு. கவனக் குறைவால் பல விபத்துகளும் இங்கு  சம்பவிப்பது உண்டு. இயற்கையின் படைப்பிலும் அழகு ஆபத்தானது என்பதை இந்த நீல ஜுவாலை கக்கும் எரிமலை எடுத்துக் காட்டுகிறது!

மறுபிறவி எடுத்த ஆலமரம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

தெலுங்கானா ராஜண்ண சிரிசில மாவட்டத்தில் 70 வயதான ஒரு ஆலமரம் ஊர்க்காரர்கள், இயற்கையை நேசிப்பவர்களின் உதவியுடன் புதுப்பிரவி எடுத்துள்லது. ஏறக்குறைய 100 டன் எடையுள்ல இந்த ஆலமரம் ஊரில் படர்ந்து பந்தலிட்டு கம்பீரமாகக் காட்சியளித்தது. கிராம மக்கள் பலரின் வாழ்வின் அங்கமாக பல சம்பவங்களுக்கும் சாட்சியாக நின்றது. இப்பிரதேசத்தில் சுண்டலா என்ற கிராமத்தில் பூரா பும்மயா கௌடா மற்றும் பூரா ராமய்ய கௌடா ஆகியொரின் வயலில் வானைத் தொட்டுக்கொண்டு இந்த மரம் நின்றிருந்தது. மனிதர்களுக்கு நிழலும், பறவைகளுக்கு வாழ இடமும் வழங்கி நின்றுகொண்டிருந்த இந்த மரத்திற்கு திடீரென்று ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது.      ஒருசில மாதங்களுக்கு முன் 2021ல் பெய்த கனத்த மழை  பெருவெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. வெள்ளநீர் மண்ணின் அடியில் பரவியதுடன் மரத்தின் வேர்கள் தளர்ந்துபோயின. மண்ணுடன் இருந்த சொந்தபந்தம் அறுந்தது. ஆலமரம் நின்றநிற்பில் தலைகுப்புற விழுந்தது. சிறிதுகாலத்திற்குப் பின் மழை மாறியது. வெய்யில் வந்தது. மரத்திற்கு நீர் கிடைக்காமல் போனது. தரையில் விழுந்துகிடந்த மரத்தின் தோல் காயத்தொடங்கியது. பட்டைகள் வறண்டுபோயின. இலைகள் உதிர்ந்தன. மரத்தின் ஒரு நூற்றாண்டு நீண்ட கதை இத்துடன் முடிந்தது என்று ஊர்க்காரர்கள் நினைத்தனர். காலம்காலமாக கம்பீரமாக நின்றுகொண்டிருந்த அந்த வயது முதிர்ந்த மரம் கிடந்த கிடப்பைப் பார்த்து மக்கள் சங்கடப்பட்டனர்.     ஆனால் ஊரின் சோகம் தீர்க்க மரத்திற்குப் புத்துயிர் கொடுக்க அப்போது டாக்டர் டோபல பிரகாஷ் என்ற இயற்கையை நேசிக்கும் நல்ல மனிதர் கிராமத்திற்கு வந்தார். மரங்களை உயிருக்கும் மேலாக நேசிக்கும் பிரகாஷ் க்ரீன் இண்டியா சேலஞ்ச் என்ற சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தோற்றுநர்.     விழுந்துகிடந்தாலும் மரத்திற்கு நீர் கொடுக்க கிராம மக்களிடம் பிரகாஷ் வலியுறுத்தினார். இரண்டு மாதகாலம் நீண்ட இந்த நீர்சிகிச்சையில் உதிர்ந்த மரத்தின் இலைகளுக்குப் பதில் புது இலைகள் துளிர்விடத்தொடங்கின. இது பிரகாஷிற்கு நம்பிக்கை அளித்தது. வேறு  ஒரு இடத்தில் மரத்தை மாற்றினால் அதற்குப் புத்துயிர் தரலாம் என்று அவர் நம்பினார்.     இதற்கு ஒரு வழி தேடி அவர் அலைய ஆரம்பித்தார். ஆனால் இவ்வளவு எடையுள்ல ஒரு மரத்தை மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல அதிக செலவாகும். இதற்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களுக்காக பிரகாஷ் தன் தேடலைத் தொடர்ந்தார். அந்த சமயத்தில்தான் உதய கிருஷ்ண பாடி ரெட்டி என்ற மற்றொரு இயற்கை ஆர்வலர் ஆலமரத்தின் நிலை அறிந்து அதற்கு புத்துயிர் தர பிரகாஷுடன் இணைந்துகொண்டார்.     உதய கிருஷ்ண பாடி ரெட்டி மரங்களை மாற்றி வைப்பதில் கை தேர்ந்தவர். ஆலமரத்தை புது வீட்டிற்குக் கொண்டு செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. திட்டத்தின்படி சிரிசில மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் புது வீடு தயாரானது. ஆனால் மரம் விழுந்து கிடக்கும் நிலத்திற்கும் அலுவலகத்திற்கும் ஆறு கிலோமீட்டர் தூரம் இருந்தது.     மாவட்ட நிர்வாகம் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. அலுவலகத்திற்கு செல்ல தனிப்பாதை உருவாக்கப்பட்டது. மரத்தைக் கூட்டிக்கொண்டு செல்ல ஒரு பெரிய டிரக் மற்றும் இரண்டு ராட்சச பளுத்தூக்கிகள் தயாராயின. பிப்ரவரி 13 2022 அன்று ஆண்டாண்டுகாலம் ஊரின் உயிர்த்துடிப்பாக நின்றுகொண்டிருந்த ஆலமரம் கிராமத்திற்கு பிரியாவிடை கொடுத்துத் தன் பயணத்தைத் தொடங்கியது.     மக்கள் சந்தோஷத்துடனும், சங்கடத்துடனும் அந்த மரத்தாத்தாவிற்கு விடைகொடுத்தனுப்பினர். பளுத்தூக்கிகலின் உதவியுடன் மரம் அலாக்காகத் தூக்கப்பட்டு டிரக்கில் ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இரண்டரை மணிநேரத்தில் மரம் புதிய இடத்தில் நடப்பட்டது. ஒரு மரத்தின் உயிர் ஒரு மனித உயிருக்குச் சமம். புது வீட்டிற்கு குடிபுகுந்துள்ல மரத்திற்கு தொடர் பராமரிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. புதிய இடத்தில் இந்த மரத் தாத்தா பல்லாண்டு வாழ்க!