articles

‘நாளை நமக்கும் இந்தக் கதி நேரலாம்!’ - து.ராஜா

‘நாளை நமக்கும் இந்தக் கதி நேரலாம்!’

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அந்நாட்டின் முதல் பெண்மணி (அவரது மனைவி) ஆகியோரைக் கடத்தி, சட்டவிரோத மாகச் சிறைபிடித்துள்ள அமெரிக்காவின் செயலைக் கண்டித்து நாம் இங்கே கூடி யிருக்கிறோம். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரைச் சிறைபிடிக்க அமெரிக்கா விற்கு என்ன உரிமை இருக்கிறது? உலக சர்வாதிகாரியாகத் துடிக்கும் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இருக்கும்போது, டொனால்டு டிரம்ப் தன்னை இந்த உலகத்திற்கே சர்வாதி காரியாகக் கருதிக் கொள்கிறார். எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கலாம், பொருளாதாரத் தடை விதிக்கலாம், யாரையும் சிறைபிடிக்க லாம் என அவர் நினைக்கிறார். வெனிசுலா ஏன் அமெரிக்காவால் குறி வைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக எண்ணெய் வளத்தில் 20 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள் ளது. அந்த எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை ஏற்க மதுரோ  மறுத்துவிட்டார். ரஷ்யாவுடன் ரூபிளிலும், ஐரோப்பாவுடன் யூரோவிலும் வர்த்தகம் செய்யத் துணிந்தார். அமெரிக்காவின் ‘பெட்ரோ டாலர்’ (Petro-dollar) அரசிய லுக்கு எதிராக வெனிசுலா எடுத்த உறுதியான நிலைப்பாடுதான், டிரம்பை இத்தகைய ஆக்கிர மிப்பு நடவடிக்கைக்குத் தூண்டியுள்ளது. மோடி அரசின் அடிமைத்தனமான மௌனம் இந்தியா தனது விடுதலைப் போராட்ட வரலாற்றால் பெருமை கொண்ட ஒரு நாடு. அணிசேரா இயக்கத்தில் (NAM) முன்னணி வகித்த நாடு. ஆனால் இன்று நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, டிரம்பின் அடாவடித்தனங்களைக் கண்டு வாய்திறக்க மறுக்கிறது. மோடி தன்னை ‘விஸ்வகுரு’ என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறார். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் னால் மண்டியிட்டு மௌனமாக இருக்கும் ஒருவரால் எப்படி ‘விஸ்வகுரு’வாக இருக்க முடியும்? டிரம்ப்பை மகிழ்ச்சியாக வைப்பதில் தான் மோடி குறியாக இருக்கிறார்; இந்திய மக்க ளின் உணர்வுகளைப் பற்றியோ, வெனிசுலா மக்களின் துயரத்தைப் பற்றியோ அவருக்குக் கவலையில்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா கட்டளையிடு வதும், அதற்கு அடிபணிந்து நடப்பதும் ஒரு  இறையாண்மை கொண்ட நாட்டிற்கு அழகல்ல. இலத்தீன் அமெரிக்காவின் புரட்சி நெருப்பு வெனிசுலாவின் பொலிவாரியப் புரட்சி  (Bolivarian Revolution) வீண் போகாது. அந்த மக்கள் தங்கள் விடுதலையைப் பாது காப்பார்கள். கியூபாவை எடுத்துக்கொள்ளுங் கள்; எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் சோசலிசப் பாதையிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. மரணமே வந்தாலும் புரட்சியைக் கைவிடமாட்டோம் என்ற கியூப மக்களின் உறுதிதான் அவர்களை இன்றும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்கிறது. இன்று வெனிசுலாவுக்கும் கியூபாவுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல், நாளை இந்தியா விற்கும் வரலாம். உலகம் ஒன்றுதான். இன்று அவர்களைத் தாக்கும் ஏகாதிபத்தியம், நாளை நம்மைத் தாக்காது என்பது என்ன நிச்சயம்? எனவேதான், உலக அமைதியை விரும்பும் ஒவ்வொருவரும் வெனிசுலாவுடன் நிற்க வேண்டியது அவசியம். நமது கோரிக்கைகள் வெனிசுலாவுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே நாடு தழுவிய போராட்டங் களை முன்னெடுத்துள்ளன. அமெரிக்க தூத ரகங்கள் முன்பு கண்டனக் குரல்கள் எழுப்பப் பட்டுள்ளன. இன்று இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆர்.ஜே.டி உள்ளிட்ட பல ஜனநாயகக் கட்சிகள் நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. * ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். * வெனிசுலாவின் இறையாண்மையில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். * இந்திய அரசு தனது வெட்கக்கேடான மௌனத்தைக் கலைத்து, அமெரிக்காவின் செயலைக் கண்டிக்க வேண்டும். வெனிசுலாவின் போராட்டம் வெல்லும்! கியூபாவின் உறுதி நிலைக்கும்! ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான நமது போர் தொடரும். விவா வெனிசுலா! விவா கியூபா! (Long Live Venezuela, Long Live Cuba!) ஏகாதிபத்தியம் ஒழிக!