articles

img

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளைக் கம்பெனிகளிடமிருந்து பாதுகாத்திடுக!

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளைக்  கம்பெனிகளிடமிருந்து பாதுகாத்திடுக!

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக கறிக்கோழி வளர்ப்புத் தொழில் விவசா யிகளுக்குத் துணைத் தொழிலாகப் பயன் படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 4 லட்சம் பேர் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ ஈடுபட்டு வருகிறார்கள். கறிக்கோழி வளர்ப்புத் தொழில் என்பது ஓர் ஒப்பந்தத் தொழிலா கும். கம்பெனிகள் குஞ்சுகளை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுத்து அதனை வளர்ப்பதற்குத் தீவனம், மருந்து உள்ளிட்டவைகளை வழங்கி விவ சாயிகளைக் கறிக்கோழி வளர்க்க வைக்கிறார்கள். இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் கோழிகள் வளர்ப்பதற்கு வசதியான இடத்தில் கொட்டகை அமைத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி செய்திட வேண்டும்.

இதற்கு ஆகும் மொத்தச் செலவையும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளே முதலீடு செய்ய வேண்டும். அதேபோல் கோழிக்குஞ்சு வளர்க்கின்ற போது கொட்டகையின் தரையில் மஞ்சு (தேங்காய் மட்டை நார்) அல்லது நெல் உமி போட வேண்டும். அடுப்புக்கரி பயன்படுத்தி குஞ்சுகளைச் சரியான வெப்ப அளவீட்டில் பாதுகாக்க வேண்டும். இந்த வெப்பம் போதுமானதாக இல்லையென்றால், மின்சாரப் பல்பு மூலம் வெப்பத்தைக் கோழிக் குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும். கம்பெனிகள் தரக்கூடிய தீவனம் மற்றும் மருந்துகள் போதுமான தாக இல்லையென்றால் விவசாயிகள் வெளியில் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக இந்தத் தொழிலை விவசாயிகள் செய்து வருகிறார்கள். சுகுணா, பயோனிர், வெங்கடேஸ்வரா, ஐஸ்வர்யா, அன்னை, குப்பண்ணா, பவித்ரா, பொன்னி, வாங்கிலி, சாந்தி, சிவசக்தி போன்ற குஞ்சு வழங்கும் நூற்றுக்கணக்கான கம்பெனிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இவர்களுக்குச் சொந்தமாக 4207-க்கும் அதிகமான குஞ்சு பொரிப்பகங்கள் உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்குக் குஞ்சு களைக் கம்பெனிகள் வழங்கி வருகின்றன. பிசிசி செயல்பாடு தமிழ்நாட்டில் கறிக்கோழி வளர்ப்பு ஒருங்கி ணைப்புக் குழு (பிசிசி) என்கிற அமைப்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு பெற்று (பதிவு எண். 95/2004) இயங்கி வருகிறது. இந்த அமைப்பானது குஞ்சு உற்பத்தி செய்யும் கம்பெனிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இந்த ஒருங்கிணைப்புக் குழு கோழிகளின் விலை  நிர்ணயம் மற்றும் விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்டவை களைக் கவனிக்கிறது. மேலும் கறிக்கோழி வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பம், மேலாண்மை, அரசு ஆணை யங்களுடன் தகவல் தொடர்பு, கோழித் தீவன உற்பத்தித் தொழில்நுட்பம், பயிற்சி வகுப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரியல் பாதுகாப்பு நடவ டிக்கைகள், நுகர்வோர் விழிப்புணர்வு இவற்றைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று பிசிசி தெரிவித்துள்ளது. “எங்கள் அமைப்பிற்கு கறிக்கோழி வளர்ப்புக் கூலி நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது என்றும், எங்கள் அமை ப்புக்கு அப்பால் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன என்றும், அவர்களை நாங்கள் கட்டுப்படுத்த முடி யாது” என்றும் கால்நடைத்துறை இயக்குநருக்கு பிசிசி நிர்வாகத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். அதே போல் கால்நடைத் துறை அமைச்சரிடம் பேசும் போது, “இதில் நாங்கள் தலையிட ஒன்றுமில்லை” என்று பலமுறை தெரிவித்துவிட்டார். கறிக்கோழி வளர்ப்புக் கூலி நிர்ணயத்தை யார் தீர்மானிப்பது என்கிற கேள்வி உருவாகிறது. கம்பெனியும், விவசாயிகளும் நேரடியாகப் பேசி விலை தீர்மானிக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் அதில் பல சிக்கல்கள் உள்ளன. உளுந்து, பாசிப் பயறு, நெல், கோதுமை போன்ற பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலை தீர்மானிக்கிறது. அதன்படி விவசாயிகளிடம் கொள்முதல் நடைபெறு வதை அனைவரும் அறிவர்.

அதுபோல் தமிழ்நாடு அரசு கறிக்கோழி வளர்ப்பிற்கு குறைந்தபட்ச விலை யைத் தீர்மானித்து கம்பெனிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கறிக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் குறை வான விலைக்குக் கோழி வளர்த்து மிகப்பெரிய கடன் சுமைக்குள் சிக்கியுள்ளார்கள். இவர்களை மீட்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டங்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களைப் பலமுறை நடத்தியுள்ளனர். ஆனால் வளர்ப்புக் கூலியைப் கம்பெனிகள் உயர்த்தி வழங்கிட முன்வரவில்லை. தற்போது போராட் டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கறிக்கோழி சில்லரை விற்பனை விலையை உடனே உயர்த்தி வருகிறார்கள். தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை உயர்த்தியுள்ளார்கள். இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விலை உயர்வால் கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட கூடுதலாக வளர்ப்புக் கூலி கிடைக்காது.

மாறாக இந்த கூடுதல் விலை உயர்வு கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்கச் செய்கிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் மக்கள், போராட்டம் நடை பெறுவதால் விலை உயர்ந்துவிட்டது என்று போராடு பவர்களுக்கு எதிராகப் பேசுகின்ற நிலை உருவாகி யுள்ளது. போராட்டத்தைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கம்பெனிகள் மீது மக்களுக்குக் கோபம் வருவதில்லை. மேலும் கம்பெனிகள் மீது அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு கவனிக்க வேண்டும்! கறிக்கோழி உற்பத்தித் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். l கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோ வுக்கு ரூ.20 கம்பெனிகள் தர வேண்டும். l ஆண்டுதோறும் முத்தரப்புக் கூட்டம் நடத்தி வளர்ப்புக் கூலி நிர்ணயம் செய்திட வேண்டும். l தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகளைக் கம்பெனிகள் தர வேண்டும். l கோழிப்பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மானியத்துடன் கடன் வசதி செய்திட வேண்டும். l கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் தொழி லாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும்.

l இ.எஸ்.ஐ மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். l கடந்த காலத்தைப் போலத் தமிழக அரசே குஞ்சு களை வழங்க வேண்டும். l ஆண்டுக்கு 5 முதல் 6 பேட்ச் குஞ்சு வழங்க வேண்டும். l கோழி இறந்தால் அதனை வீடியோ எடுத்து கம்பெ னிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற ‘லைவ்’ நடை முறைகளைக் கம்பெனிகள் கைவிட வேண்டும். l கோழி வளர்ப்பு விவசாயிகளிடம் கையொப்ப மிட்ட வெற்றுச் செக் (Check leaf), பத்திரம் அல்லது பட்டாவைப் பிணையாக வாங்கக் கூடாது. l கோழி மற்றும் கொட்டகைகளுக்கு இன்சூரன்ஸ் வசதி குறைந்த பிரீமியத்தில் ஏற்படுத்த வேண்டும். l பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் காவல்துறை மறித்து அபராதம் விதிப்பதைக் கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 20 அன்று தமிழ்நாடு முழு வதும் மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவ லகங்களில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடை பெறுகிறது. தமிழக அரசு உடனடியாகத் தலையீடு செய்து முத்தரப்புக் கூட்டம் நடத்தி கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் உள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மிகப்பெரிய கடன் வலையில் சிக்கித் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார் fள். எனவே, விரைந்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நம் கோரிக்கை வெல்ல ஜனவரி 20-இல் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். கட்டுரையாளர் : மாநிலப் பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம்